Home Tamil சிறப்பான ஆரம்பத்தினைப் பெற்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

சிறப்பான ஆரம்பத்தினைப் பெற்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

277

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெவோன் கொன்வேயின் அரைச்சதத்துடன் வலுப் பெற்றிருக்கின்றது.

“அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரால் வீரர்களுக்கு மகிழ்ச்சி” – திமுத்!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (17) வெலிங்டன் நகரில் தொடங்கியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரான திமுத் கருணாரட்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்து அணிக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி மூலம் உள்ளூர் துடுப்பாட்ட நட்சத்திரமான நிஷான் மதுஷ்க டெஸ்ட் அறிமுகம் பெற, நியூசிலாந்து அணியில் உபாதைக்குள்ளான நெயில் வெக்னருக்குப் பதிலாக டக் பிரஸ்வெலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை அணி

ஓசத பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, நிஷான் மதுஷ்க, பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார

நியூசிலாந்து அணி

டிம் சௌத்தி (தலைவர்), டொம் பிளன்டல், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வெய், மேட் ஹென்ரி, டொம் லேதம், டேரைல் மிச்சல், டோக் பிரஸ்வெல், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், ப்ளைர் டிக்னர்

முதல் நாளில் மழையின் குறுக்கீடு இருந்ததன் காரணமாக மதிய போசணத்தின் பின்னரே, இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. தொடர்ந்த போட்டியில் ஆரம்ப வீரர்களாக களம் வந்த டொம் லேதம் மற்றும் டெவோன் கொன்வெய் ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறந்த இணைப்பாட்டத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதோடு, கசுன் ராஜித இலங்கை அணிக்காக முதல் விக்கெட்டினைக் கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட்டான டொம் லேதம் பிரபாத் ஜயசூரியவிடம் பிடிகொடுத்து 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய டெவோன் கொன்வேய் நியூசிலாந்து அணியினை அரைச்சதம் விளாசி பலப்படுத்தினார். கொன்வேயின் அரைச்சதத்துடன் முதல் நாளின் தேநீர் இடைவெளியினை நியூசிலாந்து அணி வெற்றிகரமாக கடந்தது.

தேநீர் இடைவெளியின் பின்னர் டெவோன் கொன்வெய் தனது விக்கெட்டினை தனன்ஞய டி சில்வாவிடம் பறிகொடுத்தார். அதன்படி ஆட்டமிழக்கும் போது கொன்வெய் தன்னுடைய 8ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 13 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் புதிய தலைவராக டேவிட் வோர்னர்

டெவோன் கொன்வெயின் விக்கெட்டின் பின்னர் சிறிது நேரத்திற்கே போட்டி தொடர்ந்ததோடு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு, இறுதியில் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 48 ஓவர்களே வீச முடியுமாக இருந்த முதல்நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து பலமான நிலையில் காணப்படுகின்றது. நியூசிலாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது இருக்கும் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களுடனும், ஹென்ரி நிக்கோல்ஸ் 32 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand
580/4 (123)

Sri Lanka
164/10 (66.5) & 358/10 (142)

Batsmen R B 4s 6s SR
Tom Latham c Prabath Jayasuriya b Kasun Rajitha 21 73 0 0 28.77
Devon Conway c & b Dhananjaya de Silva 78 108 13 0 72.22
Kane Williamson c b Prabath Jayasuriya 215 296 23 2 72.64
Henry Nicholls not out 200 240 15 4 83.33
Daryl Mitchell c & b Kasun Rajitha 17 12 1 1 141.67
Tom Blundell not out 17 17 0 0 100.00


Extras 32 (b 2 , lb 17 , nb 8, w 5, pen 0)
Total 580/4 (123 Overs, RR: 4.72)
Bowling O M R W Econ
Kasun Rajitha 32 6 126 2 3.94
Asitha Fernando  26 6 110 0 4.23
Lahiru Kumara 25 1 164 0 6.56
Dhananjaya de Silva 19 3 75 1 3.95
Prabath Jayasuriya 21 1 86 1 4.10
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Tom Blundell b Matt Henry 6 32 0 0 18.75
Dimuth Karunaratne c Tom Latham b Michael Bracewell 89 188 9 0 47.34
Kusal Mendis c Devon Conway b Doug Bracewell 0 10 0 0 0.00
Prabath Jayasuriya c Daryl Mitchell b Tim Southee 4 17 1 0 23.53
Angelo Mathews c Tom Blundell b Matt Henry 1 10 0 0 10.00
Dinesh Chandimal st Tom Blundell b Michael Bracewell 37 92 4 0 40.22
Dhananjaya de Silva c Tim Southee b Michael Bracewell 0 6 0 0 0.00
Nishan Madushka c Michael Bracewell b Matt Henry 19 31 3 0 61.29
Kasun Rajitha run out (Tom Latham) 0 9 0 0 0.00
Lahiru Kumara not out 1 4 0 0 25.00
Asitha Fernando  c Kane Williamson b Blair Tickner 0 3 0 0 0.00


Extras 7 (b 4 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 164/10 (66.5 Overs, RR: 2.45)
Bowling O M R W Econ
Tim Southee 15 6 22 1 1.47
Matt Henry 20 6 44 3 2.20
Doug Bracewell 12 7 19 1 1.58
Michael Bracewell 12 1 50 3 4.17
Blair Tickner 6.5 1 21 1 3.23
Daryl Mitchell 1 0 3 0 3.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c WA Young b Doug Bracewell 5 36 0 0 13.89
Dimuth Karunaratne c Devon Conway b Tim Southee 51 83 4 0 61.45
Kusal Mendis c Kane Williamson b Matt Henry 50 106 8 0 47.17
Angelo Mathews c Michael Bracewell b Blair Tickner 2 44 0 0 4.55
Dinesh Chandimal c Doug Bracewell b Blair Tickner 62 92 8 0 67.39
Dhananjaya de Silva c Henry Nicholls b Michael Bracewell 98 185 12 1 52.97
Nishan Madushka c Tim Southee b Blair Tickner 39 93 4 1 41.94
Kasun Rajitha c Kane Williamson b Tim Southee 20 110 1 0 18.18
Prabath Jayasuriya c Blair Tickner b Michael Bracewell 2 45 0 0 4.44
Lahiru Kumara c Michael Bracewell b Tim Southee 7 45 1 0 15.56
Asitha Fernando  not out 0 15 0 0 0.00


Extras 22 (b 0 , lb 6 , nb 2, w 14, pen 0)
Total 358/10 (142 Overs, RR: 2.52)
Bowling O M R W Econ
Tim Southee 27 13 51 3 1.89
Matt Henry 29 8 59 1 2.03
Michael Bracewell 42 14 100 2 2.38
Doug Bracewell 18 3 58 1 3.22
Blair Tickner 26 6 84 3 3.23



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<