Home Tamil இரண்டாவது T20i யில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

இரண்டாவது T20i யில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

Sri Lanka tour of New Zealand 2023

299
New Zealand vs SL T20I

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20i போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் மோசமான பிரகாசிப்பு காரணமாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்விடைந்தது.

டுனெடின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அடம் மில்னின் ஐந்து விக்கெட் பிரதியுடன் நியூசிலாந்து அணி தொடரை 1-1 என சமப்படுத்தியது.

>> சாய் சுதர்சன் அதிரடியில் குஜராத் அணிக்கு 2ஆவது வெற்றி

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆரம்பத்தை பொருத்தவரை குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஏமாற்றியிருந்தனர். எனினும் இதன் பின்னர் குசல் பெரேரா மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடி மிகச்சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

குறித்த இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்ததுடன் 11.1 ஓவர்களில் இலங்கை அணி 91 ஓட்டங்களையும் பெற்றிருந்ததுடன், 13 ஓவர்களில் நூறு ஓட்டங்களையும் கடந்தது.

தனன்ஜய டி சில்வா அதிகபட்சமாக 26 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், குசல் பெரேரா 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் ஆட்டமிழப்புகளுக்கு பின்னர் ஒரு கட்டத்தில் 122 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 19 ஓட்டங்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதுமாத்திரமின்றி 19 ஓவர்களில் தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சை பொருத்தவரை டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி ஆகியோருக்கு அடுத்தப்படியாக அடம் மில்ன் T20i கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 5 விக்கெட் பிரதியினை கைப்பற்றியிருந்தார். இவர் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பென் லிஸ்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணியானது ஆரம்பம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எந்தவித தடுமாற்றங்களும் இல்லாமல் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து டிம் செய்பர்ட்டின் அரைச்சதத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 14.4 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டங்களை பெற்று அவ்வணி இலகுவாக வெற்றியை பதிவுசெய்தது.

டிம் செய்பர்ட் அதிகபட்சமாக 43 பந்துகளில் 79 ஓட்டங்களையும், டொம் லேத்தம் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, சட் போவ்ஸ் 15 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக நியூசிலாந்து அணி தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளதுடன், மூன்றாவதும் இறுதியுமான T20i போட்டி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


New Zealand
146/1 (14.4)

Sri Lanka
141/10 (19)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Benjamin Lister b Adam Milne 9 9 2 0 100.00
Kusal Mendis c Tom Latham b Benjamin Lister 10 5 1 1 200.00
Kusal Perera c James Neesham b Adam Milne 35 32 2 1 109.38
Dhananjaya de Silva c Benjamin Lister b Rachin Ravindra 37 26 3 2 142.31
Charith Asalanka c & b 24 19 0 0 126.32
Dasun Shanaka c & b 7 8 0 0 87.50
Wanindu Hasaranga c & b 9 5 0 0 180.00
Mahesh Theekshana c & b 0 4 0 0 0.00
Pramod Madushan b 1 3 0 0 33.33
Kasun Rajitha not out 1 1 0 0 100.00
Dilshan Madushanka b 0 2 0 0 0.00


Extras 8 (b 1 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 141/10 (19 Overs, RR: 7.42)
Bowling O M R W Econ
Adam Milne 4 0 26 5 6.50
Benjamin Lister 4 0 26 2 6.50
Henry Shipley 3 0 25 1 8.33
Rachin Ravindra 3 0 24 1 8.00
James Neesham 2 0 20 1 10.00
Ish Sodhi 3 0 17 0 5.67


Batsmen R B 4s 6s SR
Chad Bowes c Wanindu Hasaranga b Kasun Rajitha 31 15 7 0 206.67
Tim Seifert not out 79 43 3 6 183.72
Tom Latham not out 20 30 1 0 66.67


Extras 16 (b 0 , lb 1 , nb 0, w 15, pen 0)
Total 146/1 (14.4 Overs, RR: 9.95)
Bowling O M R W Econ
Mahesh Theekshana 4 0 18 0 4.50
Dilshan Madushanka 1 0 18 0 18.00
Kasun Rajitha 2 0 25 1 12.50
Pramod Madushan 2 0 21 0 10.50
Dasun Shanaka 1 0 10 0 10.00
Wanindu Hasaranga 3 0 22 0 7.33
Dhananjaya de Silva 1.4 0 31 0 22.14



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<