சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (12) நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இலங்கை அணி அஞ்செலோ மெதிவ்ஸின் அபார சதத்தோடு நியூசிலாந்திற்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயம் செய்திருக்கின்றது.
மூன்றாம் நாளில் முழு ஆதிக்கம் பெற்றுக் கொண்ட நியூசிலாந்து அணி
கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (11) நிறைவுக்கு வந்த போது, நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸை (373) அடுத்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 20 ஓட்டங்களுடன் காணப்பட்டிருக்க, பிரபாத் ஜயசூரிய 02 ஓட்டங்களுடன் இருந்திருந்தார்.
இன்று (12) போட்டியின் நான்காம் நாளில் 65 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்காக, நான்காம் நாளின் ஆரம்பத்திலேயே Nightwatchman துடுப்பாட்டவீரரான பிரபாத் ஜயசூரிய ப்ளைர் டிக்னரின் பந்துவீச்சில் 06 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் – அஞ்செலோ மெதிவ்ஸ் பொறுப்புடன் ஆடி இருந்ததோடு நான்காம் நாளின் மதிய போசணத்தினையும் மேலதிக விக்கெட் இழப்பின்றி கடந்தனர்.
தொடர்ந்த ஆட்டத்தில் தினேஷ் சந்திமால் – அஞ்செலோ மெதிவ்ஸ் ஜோடி 105 ஓட்டங்களை ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாகப் பெற்றதோடு, இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தினேஷ் சந்திமால் 02 பௌண்டரிகள் உடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் இப்போட்டியின் மூலம் டெஸ்ட் அரங்கில் 5000 ஓட்டங்களை கடந்த 11ஆவது இலங்கைத் துடுப்பாட்டவீரராகவும் தினேஷ் சந்திமால் புதிய மைல்கல் ஒன்றினை நிலை நாட்டியிருந்தார்.
தினேஷ் சந்திமாலின் பின்னர் இலங்கை அணியினை தொடர்ந்தும் பலப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 14ஆவது சதத்தினைப் பதிவு செய்தார். அஞ்செலோ மெதிவ்ஸின் சதத்துடன் ஆரோக்கியமான முன்னிலை ஒன்றினை நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
நான்காம் நாளின் தேநீர் இடைவெளியினை அடுத்து அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட் பறிபோனது. அஞ்செலோ மெதிவ்ஸ் 235 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அஞ்செலோ மெதிவ்ஸின் பின்னர் தனன்ஞய டி சில்வாவின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் இன்னிங்ஸிற்காக 105.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 302 ஓட்டங்களை எடுத்தது.
WATCH – இரண்டாவது நாளில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துக்கான காரணம் என்ன? கூறும் ராஜித
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா 7 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். இதேவேளை பின்வரிசையில் ஆடிய கசுன் ராஜிதவும் 14 ஓட்டங்கள் பெற்று இலங்கை தரப்பினைப் பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ப்ளைர் டிக்னர் 4 விக்கெட்டுக்களையும், மேட் ஹென்ரி 3 விக்கெட்டுக்களையும், டிம் சௌத்தி 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 285 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.
நியூசிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 257 ஓட்டங்கள் தேவைப்பட களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் டொம் லேதம் 11 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 07 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Tom Blundell b Tim Southee | 13 | 31 | 2 | 0 | 41.94 |
Dimuth Karunaratne | c Tom Latham b Matt Henry | 50 | 87 | 7 | 0 | 57.47 |
Kusal Mendis | lbw b Tim Southee | 87 | 83 | 16 | 0 | 104.82 |
Angelo Mathews | c Mitchell Santner b Matt Henry | 47 | 98 | 6 | 1 | 47.96 |
Dinesh Chandimal | c Tom Latham b Tim Southee | 39 | 64 | 6 | 0 | 60.94 |
Dhananjaya de Silva | c Tom Blundell b Tim Southee | 46 | 59 | 5 | 1 | 77.97 |
Niroshan Dickwella | lbw b Michael Bracewell | 7 | 13 | 1 | 0 | 53.85 |
Kasun Rajitha | c William Somerville b Matt Henry | 22 | 39 | 4 | 0 | 56.41 |
Prabath Jayasuriya | c Tom Blundell b Matt Henry | 13 | 40 | 0 | 0 | 32.50 |
Lahiru Kumara | not out | 13 | 32 | 2 | 0 | 40.62 |
Asitha Fernando | lbw b Tim Southee | 10 | 10 | 2 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0) |
Total | 355/10 (92.4 Overs, RR: 3.83) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 26.4 | 10 | 64 | 5 | 2.42 | |
Matt Henry | 26 | 8 | 80 | 4 | 3.08 | |
Blair Tickner | 20 | 2 | 103 | 0 | 5.15 | |
Neil Wagner | 10 | 1 | 68 | 0 | 6.80 | |
Daryl Mitchell | 7 | 3 | 17 | 0 | 2.43 | |
Michael Bracewell | 3 | 0 | 17 | 1 | 5.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | b Asitha Fernando | 67 | 144 | 7 | 0 | 46.53 |
Devon Conway | lbw b Asitha Fernando | 30 | 88 | 2 | 0 | 34.09 |
Kane Williamson | c Dimuth Karunaratne b Lahiru Kumara | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Henry Nicholls | c Kasun Rajitha b Lahiru Kumara | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Daryl Mitchell | c Niroshan Dickwella b Lahiru Kumara | 102 | 193 | 6 | 2 | 52.85 |
Tom Blundell | c Niroshan Dickwella b Kasun Rajitha | 7 | 22 | 0 | 0 | 31.82 |
Michael Bracewell | c Niroshan Dickwella b Prabath Jayasuriya | 25 | 57 | 2 | 0 | 43.86 |
Tim Southee | c Lahiru Kumara b Kasun Rajitha | 25 | 20 | 3 | 1 | 125.00 |
Matt Henry | b Asitha Fernando | 72 | 75 | 10 | 3 | 96.00 |
Neil Wagner | c Dhananjaya de Silva b Asitha Fernando | 27 | 24 | 1 | 3 | 112.50 |
Blair Tickner | not out | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Extras | 13 (b 4 , lb 6 , nb 0, w 3, pen 0) |
Total | 373/10 (107.3 Overs, RR: 3.47) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 31 | 10 | 104 | 2 | 3.35 | |
Asitha Fernando | 29.3 | 5 | 85 | 4 | 2.90 | |
Lahiru Kumara | 25 | 5 | 76 | 3 | 3.04 | |
Dhananjaya de Silva | 9 | 2 | 34 | 0 | 3.78 | |
Angelo Mathews | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Prabath Jayasuriya | 10 | 1 | 46 | 1 | 4.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Tom Blundell b Blair Tickner | 28 | 52 | 4 | 0 | 53.85 |
Dimuth Karunaratne | c Henry Nicholls b Blair Tickner | 17 | 45 | 1 | 0 | 37.78 |
Kusal Mendis | c Michael Bracewell b Blair Tickner | 14 | 55 | 1 | 0 | 25.45 |
Angelo Mathews | c Tom Blundell b Henry Nicholls | 115 | 235 | 11 | 0 | 48.94 |
Prabath Jayasuriya | c Tom Blundell b Blair Tickner | 6 | 32 | 0 | 0 | 18.75 |
Dinesh Chandimal | b Tim Southee | 42 | 107 | 2 | 0 | 39.25 |
Dhananjaya de Silva | not out | 47 | 73 | 7 | 0 | 64.38 |
Niroshan Dickwella | c Tom Blundell b Matt Henry | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | lbw b Matt Henry | 14 | 21 | 2 | 0 | 66.67 |
Lahiru Kumara | run out (Kane Williamson) | 8 | 6 | 2 | 0 | 133.33 |
Asitha Fernando | c Kane Williamson b Tim Southee | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 4 , lb 3 , nb 0, w 4, pen 0) |
Total | 302/10 (105.3 Overs, RR: 2.86) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 26.3 | 9 | 57 | 2 | 2.17 | |
Matt Henry | 28 | 5 | 71 | 3 | 2.54 | |
Blair Tickner | 28 | 1 | 100 | 4 | 3.57 | |
Neil Wagner | 3 | 0 | 9 | 0 | 3.00 | |
Daryl Mitchell | 12 | 2 | 31 | 0 | 2.58 | |
Michael Bracewell | 8 | 1 | 27 | 0 | 3.38 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | b Prabath Jayasuriya | 25 | 80 | 3 | 0 | 31.25 |
Devon Conway | c & b Kasun Rajitha | 5 | 16 | 0 | 0 | 31.25 |
Kane Williamson | not out | 121 | 194 | 11 | 1 | 62.37 |
Henry Nicholls | c Kusal Mendis b Prabath Jayasuriya | 20 | 24 | 1 | 0 | 83.33 |
Daryl Mitchell | b Asitha Fernando | 81 | 86 | 3 | 4 | 94.19 |
Tom Blundell | b Asitha Fernando | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Michael Bracewell | c Chamika Karunaratne b Asitha Fernando | 10 | 11 | 1 | 0 | 90.91 |
Tim Southee | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Matt Henry | run out (Kasun Rajitha) | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Neil Wagner | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 15 (b 5 , lb 3 , nb 1, w 6, pen 0) |
Total | 285/8 (70 Overs, RR: 4.07) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 17 | 5 | 61 | 1 | 3.59 | |
Asitha Fernando | 19 | 4 | 63 | 3 | 3.32 | |
Prabath Jayasuriya | 19 | 1 | 92 | 2 | 4.84 | |
Lahiru Kumara | 15 | 3 | 61 | 1 | 4.07 |
போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<