சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 317 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்திருக்கின்றது.
மேலும் இந்த தோல்வியுடன் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3-0 என வைட்வொஷ் தோல்வியினைத் தழுவியிருக்கின்றது.
>> ராகுல் டிராவிட்டுக்கு திடீர் உடல் நலக்குறைவு
முன்னதாக திருவானந்தபுரம் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹிட் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றிருந்தார்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர், இந்த ஒருநாள் தொடரினை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய இந்திய அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி ஹர்திக் பாண்டியா, உம்ரான் மலிக் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.
மறுமுனையில் இலங்கை அணியில் அஷேன் பண்டார, ஜெப்ரி வன்டர்செய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தனன்ஞய டி சில்வா மற்றும் துனித் வெலால்கேவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை XI
நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஷேன் பண்டார, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, ஜெப்ரி வன்டர்செய், கசுன் ராஜித, லஹிரு குமார
இந்தியா XI
ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், K.L. ராகுல், அக்ஷார் பட்டேல், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணிக்கு சுப்மான் கில், ரோஹிட் சர்மா ஜோடி சிறந்த ஆரம்பத்தை வழங்கியது.
இந்திய அணிக்காக இரண்டு வீரர்களும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 95 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, இந்திய அணியின் முதல் விக்கெட்டாக சாமிக்க கருணாரட்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரோஹிட் சர்மா 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்ந்து களத்தில் இருந்த சுப்மான் கில் புதிய வீரராக வந்த விராட் கோலியுடன் இணைந்து இந்திய அணிக்கு பலம் சேர்க்கத் தொடங்கினார். அதன்படி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது சதத்தினைப் பதிவு செய்த சுப்மான் கில் இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டாக ராஜிதவின் பந்துவீச்சில் மாறுவதற்கு முன்னர் 97 பந்துகளில் 14 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 116 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அத்துடன் அவர் இந்திய அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 131 ஓட்டங்களை விராட் கோலியுடன் இணைந்து பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அபாரமான முறையில் துடுப்பாடத் தொடங்கிய விராட் கோலி தன்னுடைய 46ஆவது ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்திருந்ததுடன் 50 ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியைப் பலப்படுத்தினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து இமலாயமான முறையில் 390 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் விராட் கோலி 110 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 சிக்ஸர்கள் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 166 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளுக்கு 38 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> நியூசிலாந்து, ஆஸி. தொடர்களுக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 391 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு 22 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
அத்துடன் இப்போட்டியில் 317 ஓட்டங்களால் தோல்வியினைப் பதிவு செய்த இலங்கை அணி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணியாகவும் மோசமான சாதனையினைப் பதிவு செய்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 17 ஓட்டங்கள் எடுக்க முன்வரிசை வீரர்கள் அடங்கலாக ஏனைய அனைவரும் மோசமாக செயற்பட்டிருந்தனர்.
இலங்கை அணியினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் இப்போட்டியில் அபார சதம் விளாசிய விராட் கோலி தெரிவாகினார்.
ஸ்கோர் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rohit Sharma | c Avishka Fernando b Chamika Karunaratne | 42 | 49 | 2 | 3 | 85.71 |
Shubman Gill | b Kasun Rajitha | 116 | 97 | 14 | 2 | 119.59 |
Virat Kohli | not out | 166 | 110 | 13 | 8 | 150.91 |
Shreyas Iyer | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 38 | 32 | 2 | 1 | 118.75 |
KL Rahul | c Dunith Wellalage b Lahiru Kumara | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Suryakumar Yadav | c Kasun Rajitha b Avishka Fernando | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Axar Patel | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 15 (b 0 , lb 10 , nb 0, w 5, pen 0) |
Total | 390/5 (50 Overs, RR: 7.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 10 | 1 | 81 | 2 | 8.10 | |
Lahiru Kumara | 10 | 1 | 87 | 2 | 8.70 | |
Wanidu Hasaranga | 10 | 0 | 54 | 0 | 5.40 | |
Jeffery Vandersay | 7 | 0 | 59 | 0 | 8.43 | |
Chamika Karunaratne | 8 | 0 | 58 | 1 | 7.25 | |
Dasun Shanaka | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Nuwanidu Fernando | 2 | 0 | 22 | 0 | 11.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | c Shubman Gill b Mohammed Siraj | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Nuwanidu Fernando | b Mohammed Siraj | 19 | 27 | 4 | 0 | 70.37 |
Kusal Mendis | c KL Rahul b Mohammed Siraj | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Charith Asalanka | c Axar Patel b Mohammed Shami | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Dasun Shanaka | b Kuldeep Yadav | 11 | 26 | 2 | 0 | 42.31 |
Wanidu Hasaranga | b Mohammed Siraj | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Chamika Karunaratne | run out (Mohammed Siraj) | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Dunith Wellalage | c Kuldeep Yadav b Mohammed Shami | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Kasun Rajitha | not out | 13 | 19 | 2 | 0 | 68.42 |
Lahiru Kumara | b Kuldeep Yadav | 9 | 19 | 2 | 0 | 47.37 |
Ashen Bandara | retired | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 1 , lb 2 , nb 0, w 7, pen 0) |
Total | 73/10 (22 Overs, RR: 3.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammed Shami | 6 | 2 | 20 | 2 | 3.33 | |
Mohammed Siraj | 10 | 1 | 32 | 4 | 3.20 | |
Kuldeep Yadav | 5 | 1 | 16 | 2 | 3.20 | |
Shreyas Iyer | 1 | 0 | 2 | 0 | 2.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<