Home Tamil தசுன் ஷானக்கவின் அதிரடியோடு தொடரினை சமநிலை செய்த இலங்கை

தசுன் ஷானக்கவின் அதிரடியோடு தொடரினை சமநிலை செய்த இலங்கை

Sri Lanka Tour of India 2023

290

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

>> ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு விபரம் வெளியானது!

மும்பை நகரில் த்ரில்லராக நடைபெற்று முடிந்த T20I தொடரின் முதல் போட்டியினை அடுத்து இலங்கை – இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டி இன்று (05) பூனே நகரில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்திருந்தார்.

தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்திருந்த இலங்கை அணி இப்போட்டியில் மாற்றங்களின்றி களமிறங்க, இந்தியா சஞ்சு சாம்ஷன் மற்றும் ஹர்சால் பட்டேல் ஆகியோருக்குப் பதிலாக அறிமுக வீரர் ராகுல் த்ரிபாட்டி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுசங்க

இந்தியா XI

சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (தலைவர்), ராகுல் த்ரிபாட்டி, தீபக் ஹுடா, அக்ஷார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சிவம் மாவி, உம்ரான் மலிக், யுஸ்வேந்திர சாஹல்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு குசல் மெண்டிஸ் ஏனைய ஆரம்பவீரரான பெதும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து அட்டகாசமான தொடக்கத்தினை வழங்கினார்.

குசல் மெண்டிஸ்  – பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களைப் பதிவு செய்ததோடு இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் தன்னுடைய 11ஆவது T20I அரைச்சதத்துடன் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>> மூன்று புதுமுக வீரர்களுடன் ஒருநாள் தொடரில் களமிறங்கும் பாகிஸ்தான்

மெண்டிஸின் விக்கெட்டினை அடுத்து புதிய வீரராக வந்த பானுக்க ராஜபக்ஷ உம்ரான் மலிக்கின் வேகத்தினை ஈடு செய்ய முடியாமல் 2 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். பானுக்க ராஜபக்ஷவின் பின்னர் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டும் பறிபோனது. அக்ஷார் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 4 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் இலங்கை அணியின் மத்திய வரிசை சற்று தடுமாறிய போதும் சரித் அசலன்க அதிரடியாக ஆடி ஓட்டங்கள் பெற்றார். அதன்படி வெறும் 19 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சரித் அசலன்க 4 சிக்ஸர்கள் அடங்கலாக 37 ஓட்டங்களை எடுக்க இலங்கை அணியின் ஓட்டங்களும் அதிகரிக்கத் தொடங்கின.

Photo Album – Sri Lanka tour of India 2023 | 2nd T20I

சரித் அசலன்கவின் விக்கெட்டின் பின்னர் இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய அணித்தலைவர் தசுன் ஷானக்கவின் அசத்தல் ஆட்டத்தோடு இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷானக்க தன்னுடைய 5ஆவது T20I அரைச்சதத்தினைப் பதிவு செய்து 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அத்துடன் இப்போட்டியில் 20 பந்துகளில் அரைச்சதம் பதிவு செய்த ஷானக்க, இலங்கை அணிக்காக T20I போட்டிகளில் அதிவேகமாக அரைச்சதம் கடந்த வீரர் என்கிற புதிய சாதனையினை நிலை நாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த ஏனைய வீரரான சாமிக்க கருணாரட்ன 11 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

WATCH – முதல் T20I போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன? கூறும் நவீட் நவாஸ்!

இந்திய அணியின் பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்டுக்களையும், அக்ஷார் பட்டேல் 2 விக்கெட்டுக்களையும், யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 207 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து தடுமாறியது. இதன்படி ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் – அக்ஷார் பட்டேல் ஜோடி ஆறாம் விக்கெட்டுக்காக அபாரமான இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கியிருந்தது. 91 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டத்திற்குள் அக்ஷார் பட்டேல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அரைச்சதங்களை விளாசியிருந்தனர்.

இந்த இணைப்பாட்டம் டில்சான் மதுசங்க கைப்பற்றிய சூர்யகுமார் யாதவ்வின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்ததோடு அவர் தன்னுடைய 12ஆவது T20I அரைச்சதத்துடன் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

மறுமுனையில் களத்தில் இருந்த அக்ஷார் பட்டேல் சிவம் மாவியுடன் இணைந்து போட்டியின் இறுதி ஓவர் வரை வெற்றிக்காக போராடிய போதும் அவரது போராட்டம் வீணானது.

>> இறுதிவரை போராடிய இலங்கை கிரிக்கெட் அணி

அதன்படி இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணியானது 8 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அக்ஷார் பட்டேல் 31 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் சிவம் மாவி 15 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித, அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவாகினார். இனி இலங்கை – இந்திய அணிகள் மோதும் T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (07) ராஜ்கோட் நகரில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


India
190/8 (20)

Sri Lanka
206/6 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Rahul Trpathi b Axar Patel 33 35 4 0 94.29
Kusal Mendis lbw b Yuzvendra Chahal 52 31 3 4 167.74
Bhanuka Rajapaksa b Umran Malik 2 3 0 0 66.67
Charith Asalanka c Shubman Gill b Umran Malik 37 19 0 4 194.74
Dhananjaya de Silva c Deepak Hooda  b Axar Patel 3 6 0 0 50.00
Dasun Shanaka not out 56 22 2 6 254.55
Wanidu Hasaranga b Umran Malik 0 1 0 0 0.00
Chamika Karunaratne not out 11 10 1 0 110.00


Extras 12 (b 0 , lb 1 , nb 7, w 4, pen 0)
Total 206/6 (20 Overs, RR: 10.3)
Bowling O M R W Econ
Hardik Pandya 2 0 13 0 6.50
Arshdeep Singh 2 0 37 0 18.50
Shivam Mavi 4 0 53 0 13.25
Axar Patel 4 0 24 2 6.00
Yuzvendra Chahal 4 0 30 1 7.50
Umran Malik 4 0 48 3 12.00


Batsmen R B 4s 6s SR
Ishan Kishan b Kasun Rajitha 2 5 0 0 40.00
Shubman Gill c Maheesh Theekshana b Kasun Rajitha 5 3 1 0 166.67
Rahul Trpathi c Kusal Mendis b Dilshan Madushanka 5 5 1 0 100.00
Suryakumar Yadav c Wanidu Hasaranga b Dilshan Madushanka 51 36 3 3 141.67
Hardik Pandya c Kusal Mendis b Chamika Karunaratne 12 12 1 1 100.00
Deepak Hooda  c Dhananjaya de Silva b Wanidu Hasaranga 9 12 0 0 75.00
Axar Patel c Chamika Karunaratne b Dasun Shanaka 65 31 3 6 209.68
Shivam Mavi c Maheesh Theekshana b Dasun Shanaka 26 15 2 2 173.33
Umran Malik not out 1 1 0 0 100.00


Extras 14 (b 0 , lb 4 , nb 0, w 10, pen 0)
Total 190/8 (20 Overs, RR: 9.5)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 4 0 45 2 11.25
Kasun Rajitha 4 0 22 2 5.50
Chamika Karunaratne 4 0 41 1 10.25
Wanidu Hasaranga 3 0 41 1 13.67
Maheesh Theekshana 4 0 33 0 8.25
Dasun Shanaka 1 0 4 2 4.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<