Home Tamil ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி

ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி

1094
INDvSL

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2- எனக் கைப்பற்றியிருக்கின்றது.

>> இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிக்கிறதா? – கிரிஸ் சில்வர்வூட்!

முன்னதாக கொல்கத்தா நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. சிறிய உபாதை ஒன்றை எதிர்கொண்ட பெதும் நிஸ்ஸங்கவிற்குப் பதிலாக அறிமுகவீரர் நுவனிது பெர்னாந்துவும், டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக லஹிரு குமாரவும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி சைனமன் சுழல்வீரரான குல்தீப் யாதவ்வினை யுஸ்வேந்திர சாஹலுக்குப் பதிலாக இணைத்திருந்தது.

இலங்கை XI

நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து

ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, லஹிரு குமார

இந்தியா XI

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, K.L. ராகுல், அக்ஷார் பட்டேல், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மலிக், குல்தீப் யாதவ்

இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் ஆரம்பவீரர்களாக களம் வந்தனர்.

தொடர்ந்த இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த துவக்கத்தை வழங்கிய போதும் அவரினால் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றை ஆட முடியாமல் போனது. அவிஷ்க பெர்னாண்டோ மொஹமட் சிராஜின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்து 20 ஓட்டங்களுக்குடன் வெளியேறினார்.

எனினும் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் – நுவனிந்து பெர்னாண்டோ ஜோடி பொறுப்பான முறையில் ஆடியதுடன் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 73 ஓட்டங்களையும் எடுத்தது.

இந்த இணைப்பாட்டத்திற்கு காரணமாக அமைந்த நுவனிது பெர்னாண்டோ தனது கன்னி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய கன்னி அரைச்சதத்தினை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து இலங்கையின் இரண்டாவது விக்கெட்டாக குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் ஒரு சிக்ஸர் 3 பெளண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்தார்.

குசல் மெண்டிஸின் பின்னர் இலங்கை அணி மிகவும் குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுக்கத் தொடங்கியது. இதில் தனன்ஞய டி சில்வா ஓட்டமேதுமின்றி தனது விக்கெட்டை பறிகொடுக்க,

அவரின் பின்னர் அரைச்சதம் விளாசி களத்தில் இருந்து நுவனிது பெர்னாண்டோவின் விக்கெட்டும் ரன் அவுட் ஒன்றின் காரணமாக பறிபோனது.

ஸ்கொட்லாந்தை வீழ்த்திய இலங்கை U19 மகளிர் அணி!

அதோடு மத்திய வரிசையில் களமிறங்கிய சரித் அசலன்க (12) இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க (02) மற்றும் வனிந்து ஹஸரங்க (21), சாமிக்க கருணாரட்ன (17) ஆகியோரும் ஏமாற்றமான இன்னிங்ஸ்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 177 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இந்த நேரத்தில் பின்வரிசையில் சற்று பொறுப்புடன் ஆடிய துனித் வெலால்கே உடைய ஆட்டத்துடன் இலங்கை அணி 39.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 215 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் நுவனிது பெர்ணான்டோ 63 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை துனித் வெல்லாலகே 34 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் உடன் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும், உம்ரான் மலிக் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 216 ஓட்டங்கள அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி ரோஹிட் சர்மா, சுப்மான் கில் மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடியினை உருவாக்கினர். இதனால் ரோஹிட் சர்மாவின் விக்கெட் அவர் 17 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதும் சுப்மான் கில்லின் விக்கெட் அவர் 21

ஓட்டங்களுடன் இருந்த போதும் பறிபோனது. அதனை அடுத்து இலங்கை பந்துவீச்சாளர்கள் வீரர்கள் நெருக்கடி நீடிக்க விராட் கோலி (04), ஸ்ரேயாஸ் அய்யர் (28) ஆகியோரினதும் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இந்திய அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் – ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பொறுமையான முறையில் இணைப்பாட்டமாக 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். இந்த இணைப்பாட்டத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி கே.எல். ராகுலின் நிதான அரைச்சதத்தின் உதவியுடன் போட்டியின் வெற்றி இலக்கினை 43.2 ஓவர்களில் 219 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியார் பதவியை ஏற்க மறுத்த மிக்கி ஆத்தர்

இந்திய அணி வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த கே.எல். ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 103 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது கே.எல். ராகுலின் 11ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும் மாறியது. மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 36 ஓட்டங்களுடன் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்விற்கு வழங்கப்பட்டது.

இனி இலங்கை – இந்திய அணிகள் மோதும் இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) திருவானந்தபுரத்தில் நடைபெறுகின்றது.

ஸ்கோர் விபரம்

Result


India
219/6 (43.2)

Sri Lanka
215/10 (39.4)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando b Mohammed Siraj 20 17 4 0 117.65
Nuwan Pradeep run out (Shubman Gill) 50 63 6 0 79.37
Kusal Mendis lbw b Kuldeep Yadav 34 34 3 1 100.00
Dhananjaya de Silva b Axar Patel 0 1 0 0 0.00
Charith Asalanka c & b Kuldeep Yadav 15 21 1 0 71.43
Dasun Shanaka b Kuldeep Yadav 2 4 0 0 50.00
Wanidu Hasaranga c Axar Patel b Umran Malik 21 17 3 1 123.53
Dunith Wellalage c Axar Patel b Mohammed Siraj 32 34 3 1 94.12
Chamika Karunaratne c Axar Patel b Umran Malik 17 25 3 0 68.00
Kasun Rajitha not out 17 21 3 0 80.95
Lahiru Kumara b Mohammed Siraj 0 2 0 0 0.00


Extras 7 (b 0 , lb 1 , nb 1, w 5, pen 0)
Total 215/10 (39.4 Overs, RR: 5.42)
Bowling O M R W Econ
Mohammed Shami 7 0 43 0 6.14
Mohammed Siraj 5.4 0 30 3 5.56
Hardik Pandya 5 0 26 0 5.20
Umran Malik 7 0 48 2 6.86
Kuldeep Yadav 10 0 51 3 5.10
Axar Patel 5 0 16 1 3.20


Batsmen R B 4s 6s SR
Rohit Sharma c Kusal Mendis b Chamika Karunaratne 17 21 2 1 80.95
Shubman Gill c Avishka Fernando b Lahiru Kumara 21 12 5 0 175.00
Virat Kohli b Lahiru Kumara 4 9 1 0 44.44
Shreyas Iyer lbw b Kasun Rajitha 28 33 5 0 84.85
KL Rahul not out 64 103 6 0 62.14
Hardik Pandya c Kusal Mendis b Chamika Karunaratne 36 53 4 0 67.92
Axar Patel c Chamika Karunaratne b Dhananjaya de Silva 21 21 1 1 100.00
Kuldeep Yadav not out 10 10 2 0 100.00


Extras 18 (b 0 , lb 3 , nb 2, w 13, pen 0)
Total 219/6 (43.2 Overs, RR: 5.05)
Bowling O M R W Econ
Kasun Rajitha 9 0 46 1 5.11
Lahiru Kumara 9.2 0 64 2 6.96
Chamika Karunaratne 8 0 51 2 6.38
Wanidu Hasaranga 10 0 28 0 2.80
Dunith Wellalage 2 0 12 0 6.00
Dasun Shanaka 2 0 6 0 3.00
Dhananjaya de Silva 3 0 9 1 3.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<