Home Tamil இறுதிவரை போராடிய இலங்கை கிரிக்கெட் அணி

இறுதிவரை போராடிய இலங்கை கிரிக்கெட் அணி

Sri Lanka Tour of India 2023

402

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான முதல் T20i கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 02 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20i மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் விளையாடுகின்றது.

இலங்கைக்கு எதிரான தொடரில் களமிறங்கும் ஜஸ்ப்ரிட் பும்ரா!

இந்த நிலையில் இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதலாவதாக T20 தொடர் நடைபெறுவதோடு, தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (03) மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய வீரர்களுக்கு வழங்கினார்.

இந்திய அணி இப்போட்டியில் சிவம் மாவி மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு T20i அறிமுகம் வழங்க, இலங்கை அணி வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுசங்கவினை மீண்டும் குழாத்தில் இணைத்திருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுசங்க

இந்தியா XI

சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (தலைவர்), சஞ்சு சாம்சன், தீபக் ஹுடா, அக்ஷார் பட்டேல், ஹர்சால் பட்டேல், சிவம் மாவி, உம்ரான் மலிக், யுஸ்வேந்திர சாஹல்

இதனை அடுத்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த இஷான் கிஷன் சிறந்த ஆரம்பத்தை வழங்கிய போதும், மகீஷ் தீக்ஷன இந்திய அணியின் முதல் விக்கெட்டினை கைப்பற்றி நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த சுப்மன் கில் 7 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தார்.

மறுமுனையில், புதிய வீரர்களாக வந்த சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஏமாற்றமான ஆட்டத்துடன் வெளியேறினர். இதில் சாமிக்க கருணாரட்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டங்களை எடுக்க, தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்த சஞ்சு சம்சன் 5 ஓட்டங்களுடன் ஓய்வறை சென்றிருந்தார்.

இதன் பின்னர் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா இஷான் கிஷனுடன் இணைந்து அணியைப் பலப்படுத்த தொடங்கினார். இந்த நிலையில் இஷன் கிஷானின் விக்கெட் வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் பறிபோனது. இஷான் கிஷன் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பெளண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டும் பறிபோனது. டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்த ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பெளண்டரிகள் உடன் 29 ஓட்டங்களை எடுத்திருந்தார். பாண்டியாவின் விக்கெட்டினை அடுத்து இந்தியா 94 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

அப்போது இந்திய அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தீபக் ஹுடா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகிய இருவரும் இணைப்பாட்டமாக 68 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்ட உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் தீபக் ஹுடா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுக்க, அக்ஷார் பட்டேல் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் 3 பெளண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க, சாமிக்க கருணாரட்ன மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாறியதோடு ஒரு கட்டத்தில் 68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் ஆடத் தொடங்கிய அணித்தலைவர் தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க ஆகியோர் இலங்கை அணியின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினர். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் ஆறாவது விக்கெட்டாக சிவம் மாவியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த வனிந்து ஹஸரங்க ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 40 ஓட்டங்களைப் பகிர்ந்து 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் தசுன் ஷானக்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் இறுதிவரை இலங்கை அணியின் வெற்றிக்காக போராடிய போதும் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 160 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

புத்தாண்டின் புதிய சவாலை சமாளிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி?

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சாமிக்க கருணாரட்ன இறுதிவரை களத்தில் நின்று 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் அறிமுக வீரரான சிவம் மாவி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, உம்ரான் மலிக் மற்றும் ஹர்ஷால் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக தீபக் ஹுடா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இனி இலங்கை – இந்திய அணிகள் T20 தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை பூனே நகரில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

Result


India
162/5 (20)

Sri Lanka
160/10 (20)

Batsmen R B 4s 6s SR
Ishan Kishan c Dhananjaya de Silva b Wanidu Hasaranga 37 29 3 2 127.59
Shubman Gill lbw b Maheesh Theekshana 7 5 1 0 140.00
Suryakumar Yadav c Bhanuka Rajapaksa b Chamika Karunaratne 7 10 1 0 70.00
Sanju Samson c Dilshan Madushanka b Dhananjaya de Silva 5 6 0 0 83.33
Hardik Pandya c Kusal Mendis b Dilshan Madushanka 29 27 4 0 107.41
Deepak Hooda  not out 41 23 1 4 178.26
Axar Patel not out 31 20 3 1 155.00


Extras 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 162/5 (20 Overs, RR: 8.1)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 0 47 0 11.75
Dilshan Madushanka 4 0 35 1 8.75
Maheesh Theekshana 4 0 29 1 7.25
Chamika Karunaratne 3 0 22 1 7.33
Dhananjaya de Silva 1 0 6 1 6.00
Wanidu Hasaranga 4 0 22 1 5.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Shivam Mavi 1 3 0 0 33.33
Kusal Mendis c Sanju Samson b Harshal Patel 28 25 5 0 112.00
Dhananjaya de Silva c Sanju Samson b Shivam Mavi 8 6 2 0 133.33
Charith Asalanka c Ishan Kishan b Umran Malik 12 15 1 1 80.00
Bhanuka Rajapaksa c Hardik Pandya b Harshal Patel 10 11 1 0 90.91
Dasun Shanaka c Yuzvendra Chahal b Umran Malik 45 27 3 3 166.67
Wanidu Hasaranga c Hardik Pandya b Shivam Mavi 21 10 1 2 210.00
Chamika Karunaratne not out 23 16 0 2 143.75
Maheesh Theekshana c Suryakumar Yadav b Shivam Mavi 1 4 0 0 25.00
Kasun Rajitha run out (Deepak Hooda ) 5 4 0 0 125.00
Dilshan Madushanka run out (Deepak Hooda ) 0 0 0 0 0.00


Extras 6 (b 0 , lb 1 , nb 1, w 4, pen 0)
Total 160/10 (20 Overs, RR: 8)
Bowling O M R W Econ
Hardik Pandya 3 0 12 0 4.00
Shivam Mavi 4 0 22 4 5.50
Umran Malik 4 0 27 2 6.75
Yuzvendra Chahal 2 0 26 0 13.00
Harshal Patel 4 0 41 2 10.25
Axar Patel 3 0 31 0 10.33



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<