சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> இந்திய அணிக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு
மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
முன்னதாக தரம்சலாவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹிட் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணி ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தனுஷ்க குணத்திலக்க மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருக்க, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் ஜனித் லியனகே ஆகியோருக்கு ஓய்வும் வழங்கியிருந்தது.
மறுமுனையில் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்ற ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றங்களின்றி களமிறங்கியிருந்தது.
இலங்கை அணி
பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ
இந்திய அணி
ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவிந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷால் படேல், புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்
பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் வந்திருந்தனர்.
இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணிக்கு மெதுவான ஆரம்பத்தினை வழங்கிய போதும், முதல் இன்னிங்ஸின் பவர் பிளேயை அடுத்து தனுஷ்க குணத்திலக்க அதிரடியான முறையில் ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பின்னர் தனுஷ்க குணத்திலக்கவின் விக்கெட் ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் பறிபோனது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறிய குணத்திலக்க ஆட்டமிழக்கும் போது 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
>>NSL தொடரின் 2ஆவது நாளில் சதமடித்த கமிந்து மற்றும் பபசர
தனுஷ்க குணத்திலக்கவின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணியின் முன் வரிசையில் களம் வந்த சரித் அசலன்க, கமில் மிஷார மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 102 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் இந்த நேரத்தில் களம் வந்த அணித்தலைவர் தசுன் ஷானக்க , பெதும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து அதிரடியான முறையில் ஓட்டங்களைப் பெற இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தன்னுடைய 5ஆவது அரைச்சதத்துடன் சிறந்த T20I இன்னிங்ஸினை பதிவு செய்த பெதும் நிஸ்ஸங்க 53 பந்துகளில் 11 பெளண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களைப் பெற, தசுன் ஷானக்க வெறும் 19 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் புவ்னேஸ்வர் குமார், ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷால் படேல் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 184 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி, தொடக்கத்தில் துஷ்மன்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோரின் பந்துவீச்சு காரணமாக வெற்றி இலக்கிற்கான பயணத்தில் சிறிய தடுமாற்றத்தினைக் வெளிக் காட்டியது.
எனினும் பின்னர் துடுப்பாட வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரவிந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த இந்திய அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 17.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களுடன் அடைந்தது.
>>2022 IPL இல் வெவ்வேறு குழுவில் சென்னை, மும்பை அணிகள்
இந்திய அணியின் வெற்றிக்கு தொடர்ச்சியான அரைச்சதங்களுடன் பங்களிப்பு வழங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, ரவிந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் உடன் 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவர்களோடு இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த சஞ்சு சாம்சன் 25 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துடுப்பாட்டவீரரான ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவாகினார். இனி இரு அணிகளும் பங்கெடுக்கும் இந்த T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (27) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b | 75 | 53 | 0 | 0 | 141.51 |
Dhanushka Gunathilake | c & b | 38 | 29 | 0 | 0 | 131.03 |
Charith Asalanka | lbw b | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Kamil Mishara | c & b | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Dinesh Chandimal | c & b | 9 | 10 | 0 | 0 | 90.00 |
Dasun Shanaka | not out | 47 | 19 | 0 | 0 | 247.37 |
Extras | 11 (b 0 , lb 7 , nb 0, w 4, pen 0) |
Total | 183/5 (20 Overs, RR: 9.15) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bhuvneshwar Kumar | 4 | 0 | 36 | 1 | 9.00 | |
Jasprit Bumrah | 4 | 0 | 24 | 1 | 6.00 | |
Deepak Chahar | 4 | 0 | 52 | 1 | 13.00 | |
Yuzvendra Chahal | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Ravindra Jadedja | 4 | 0 | 37 | 1 | 9.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rohit Sharma | b | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Ishan Kishan | c & b | 16 | 15 | 0 | 0 | 106.67 |
Shreyas Iyer | not out | 74 | 44 | 0 | 0 | 168.18 |
Sanju Samson | c & b | 39 | 25 | 0 | 0 | 156.00 |
Ravindra Jadedja | not out | 45 | 18 | 0 | 0 | 250.00 |
Extras | 11 (b 0 , lb 2 , nb 1, w 8, pen 0) |
Total | 186/3 (17.1 Overs, RR: 10.83) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dushmantha Chameera | 3.1 | 0 | 39 | 1 | 12.58 | |
Binura Fernando | 4 | 0 | 47 | 0 | 11.75 | |
Lahiru Kumara | 3 | 0 | 31 | 2 | 10.33 | |
Praveen Jayawickrama | 2 | 0 | 19 | 0 | 9.50 | |
Chamika Karunaratne | 3 | 0 | 24 | 0 | 8.00 | |
Dasun Shanaka | 2 | 0 | 24 | 0 | 12.00 |
முடிவு – இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<