சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் நிறைவில் இந்திய அணி ரிசாப் பாண்ட் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் சதங்களுடன் வலுப்பெற்றிருக்கின்றது.
>>கண்டி அணிக்காக அரைச்சதமடித்து அசத்திய ஓஷத பெர்னாண்டோ
முன்னதாக மொஹொலியில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹிட் சர்மா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை அணியில் லஹிரு திரிமான்ன இணைந்திருக்க, நீண்ட இடைவெளியின் பின்னர் நிரோஷன் டிக்வெல்லவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
மறுமுனையில் இந்திய அணி ஹனுமா விஹாரி, ரவிந்திர ஜடேஜா ஆகியோரினை தமது குழாத்தினுள் இணைந்திருந்தது.
இலங்கை அணி – திமுத் கருணாரட்ன(தலைவர்), லஹிரு திரிமான்ன, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார
இந்திய அணி – ரோஹித் சர்மா, மயான்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிசாப் பாண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜயன்த் யாதவ், மொஹமட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றிருந்தது. பின்னர், இந்திய அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற முயன்ற வீரர்களில் ஒருவரான ரோஹிட் சர்மா தனது விக்கெட்டினை அவர் 29 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், லஹிரு குமாரவிடம் பறிகொடுத்தார்.
இதனை தொடர்ந்து ஏனைய ஆரம்ப வீரரான மயான்க் அகர்வாலின் விக்கெட் லசித் எம்புல்தெனியவின் சுழலில் வீழ்த்தப்பட்டது. மயான்க் அகர்வால் 33 ஓட்டங்களைப் பெற்றவாறு தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.
இதன் பின்னர் ஹனுமா விஹாரி மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட ஆரம்பித்திருந்தனர். முதல் நாளின் மதிய போசண இடைவேளையினைத் தாடி நீடித்த இந்த இணைப்பாட்டத்தின் (90) முடிவாக விராட் கோலியின் விக்கெட் பறிபோயிருந்தது.
லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த கோலி 45 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு, டெஸ்ட் அரங்கில் 8,000 ஓட்டங்கள் கடந்த 6ஆவது இந்திய வீரராகவும் சாதனை படைத்திருந்தார்.
இதனையடுத்து ஹனுமா விஹாரி அரைச்சதம் பூர்த்தி செய்திருந்ததோடு, இந்திய அணியின் 4ஆம் விக்கெட்டாக விஷ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். இப்போட்டியின் மூலம் தன்னுடைய 5ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த விஹாரி 5 பெளண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி
இதன் பின்னர் போட்டியின் தேநீர் இடைவேளையை அடுத்து முதல் நாள் மூன்றாம் இடைவெளியில் ரிசாப் பாண்ட் – ஜடேஜா ஜோடி இந்திய அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக பெற்றுக் கொண்ட இணைப்பாட்டத்துடன் (104) இந்திய அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 85 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது.
இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த ரிசாப் பாண்ட் சதத்தினை 4 ஓட்டங்களினால் தவறவிட்டு தன்னுடைய 8ஆவது அரைச்சதத்துடன் 97 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் ரவிந்திர ஜடேஜா 45 ஓட்டங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சுரங்க லக்மால், தனன்ஞய டி சில்வா, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mayank Agarwal | lbw b Lasith Embuldeniya | 33 | 49 | 5 | 0 | 67.35 |
Rohit Sharma | c Suranga Lakmal b Lahiru Kumara | 29 | 28 | 6 | 0 | 103.57 |
Hanuma Vihari | b Vishwa Fernando | 58 | 128 | 5 | 0 | 45.31 |
Virat Kohli | b Lasith Embuldeniya | 45 | 76 | 5 | 0 | 59.21 |
Rishabh Pant | b Suranga Lakmal | 96 | 97 | 9 | 4 | 98.97 |
Shreyas Iyer | lbw b Dhananjaya de Silva | 27 | 48 | 3 | 0 | 56.25 |
Ravindra Jadeja | not out | 175 | 228 | 17 | 3 | 76.75 |
Ravichandran Ashwin | c Niroshan Dickwella b Suranga Lakmal | 61 | 82 | 8 | 0 | 74.39 |
Jayant Yadav | c Lahiru Thirimanne b Vishwa Fernando | 2 | 18 | 0 | 0 | 11.11 |
Mohammed Shami | not out | 20 | 34 | 3 | 0 | 58.82 |
Extras | 28 (b 4 , lb 12 , nb 12, w 0, pen 0) |
Total | 574/8 (129.2 Overs, RR: 4.44) |
Fall of Wickets | 1-52 (9.5) Rohit Sharma, 2-80 (18.3) Mayank Agarwal, 3-170 (43.3) Virat Kohli, 4-175 (46.3) Hanuma Vihari, 5-228 (61.1) Shreyas Iyer, 6-332 (80.5) Rishabh Pant, 7-462 (109.4) Ravichandran Ashwin, 8-471 (113.6) Jayant Yadav, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 25 | 1 | 90 | 2 | 3.60 | |
Vishwa Fernando | 26 | 1 | 135 | 2 | 5.19 | |
Lahiru Kumara | 10.5 | 1 | 52 | 1 | 4.95 | |
Lasith Embuldeniya | 46 | 3 | 188 | 2 | 4.09 | |
Dhananjaya de Silva | 18.2 | 1 | 79 | 1 | 4.34 | |
Charith Asalanka | 3.1 | 0 | 14 | 0 | 4.52 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | lbw b Ravindra Jadeja | 28 | 71 | 5 | 0 | 39.44 |
Lahiru Thirimanne | lbw b Ravichandran Ashwin | 17 | 60 | 1 | 0 | 28.33 |
Pathum Nissanka | not out | 61 | 133 | 11 | 0 | 45.86 |
Angelo Mathews | lbw b Jasprit Bumrah | 22 | 39 | 1 | 1 | 56.41 |
Dhananjaya de Silva | lbw b Ravichandran Ashwin | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Charith Asalanka | lbw b Jasprit Bumrah | 29 | 64 | 5 | 0 | 45.31 |
Niroshan Dickwella | c Shreyas Iyer b Ravindra Jadeja | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Suranga Lakmal | c Ravichandran Ashwin b Ravindra Jadeja | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | c Mayank Agarwal b Mohammed Shami | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Vishwa Fernando | c Rohit Sharma b Ravindra Jadeja | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | b Ravindra Jadeja | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 0 , lb 6 , nb 8, w 0, pen 0) |
Total | 174/10 (65 Overs, RR: 2.68) |
Fall of Wickets | 1-48 (18.2) Lahiru Thirimanne, 2-59 (24.2) Dimuth Karunaratne, 3-96 (33.6) Angelo Mathews, 4-103 (38.1) Dhananjaya de Silva, 5-161 (57.6) Charith Asalanka, 6-164 (60.4) Niroshan Dickwella, 7-164 (60.6) Suranga Lakmal, 8-173 (63.3) Lasith Embuldeniya, 9-174 (64.5) Vishwa Fernando, 10-174 (64.6) Lahiru Kumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammed Shami | 12 | 5 | 27 | 1 | 2.25 | |
Jasprit Bumrah | 14 | 3 | 36 | 2 | 2.57 | |
Ravichandran Ashwin | 20 | 7 | 49 | 2 | 2.45 | |
Jayant Yadav | 6 | 2 | 15 | 0 | 2.50 | |
Ravindra Jadedja | 13 | 4 | 41 | 5 | 3.15 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | c Rohit Sharma b Ravichandran Ashwin | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Dimuth Karunaratne | c Rishab Pant b Mohammed Shami | 27 | 42 | 6 | 0 | 64.29 |
Pathum Nissanka | c Rishab Pant b Ravichandran Ashwin | 6 | 19 | 1 | 0 | 31.58 |
Angelo Mathews | lbw b | 28 | 75 | 2 | 1 | 37.33 |
Dhananjaya de Silva | c Shreyas Iyer b Ravindra Jadeja | 30 | 58 | 5 | 0 | 51.72 |
Charith Asalanka | c Virat Kohli b Ravichandran Ashwin | 20 | 9 | 2 | 2 | 222.22 |
Niroshan Dickwella | not out | 51 | 81 | 0 | 0 | 62.96 |
Suranga Lakmal | c Jayant Yadav b Ravindra Jadedja | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | c Rishab Pant b Ravindra Jadeja | 2 | 42 | 0 | 0 | 4.76 |
Vishwa Fernando | lbw b Mohammed Shami | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | c Mohammed Shami b Ravichandran Ashwin | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Extras | 10 (b 4 , lb 5 , nb 1, w 0, pen 0) |
Total | 178/10 (60 Overs, RR: 2.97) |
Fall of Wickets | 1-9 (2.3) Lahiru Thirimanne, 2-19 (6.5) Pathum Nissanka, 3-45 (15.5) Dimuth Karunaratne, 4-94 (32.5) Dhananjaya de Silva, 5-121 (35.3) Charith Asalanka, 6-121 (36.2) Angelo Mathews, 7-121 (36.5) Suranga Lakmal, 8-153 (50.6) Lasith Embuldeniya, 9-170 (53.6) Vishwa Fernando, 10-178 (59.6) Lahiru Kumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ravichandran Ashwin | 21 | 5 | 47 | 4 | 2.24 | |
Mohammed Shami | 8 | 1 | 48 | 2 | 6.00 | |
Ravindra Jadedja | 16 | 5 | 46 | 4 | 2.88 | |
Jayant Yadav | 11 | 3 | 21 | 0 | 1.91 | |
Jasprit Bumrah | 4 | 1 | 7 | 0 | 1.75 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<