Home Tamil தனன்ஜயவின் போராட்டம் வீணாக தொடரை வென்றது இந்தியா

தனன்ஜயவின் போராட்டம் வீணாக தொடரை வென்றது இந்தியா

230
AFP

இலங்கை அணிக்கு எதிராக பூனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் 78 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது. இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

எமக்கு சிறந்த ஆரம்பம் மாத்திரம் போதாது – மிக்கி ஆத்தர்

தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தரின்….

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் தசுன் ஷானகவின் தவறவிடப்பட்ட பிடியெடுப்பு வாய்ப்புடன் சிக்கர் தவான் ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் லோகேஷ் ராஹுல் ஓட்டங்களை நகர்த்தினார்.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 100 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இதன் பின்னர் மனிஷ் பாண்டே, விராட் கோஹ்லி மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் இறுதியில் வேகமாக ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தனர்.

இந்திய அணியை பொருத்தவரையில், அதிகபட்சமாக லோகேஷ் ராஹுல் 5 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 54 ஓட்டங்கள், சிக்கர் தவான் 52 ஓட்டங்கள் மற்றும் மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை வேகப் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றமளித்திருந்தனர். எனினும், லக்ஷான் சந்தகன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, வனிந்து ஹசரங்க மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லஹிரு குமார தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், இந்திய அணியின் மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாறியது.  முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாற்றம் கண்டது.

எனினும், இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு இணைப்பாட்டத்தை அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா பெற்றுக்கொடுத்தனர். எவ்வாறாயினும், இந்த இணைப்பாட்டம் 68 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட, இலங்கை அணியின் தோல்வி உறுதியாகியிருந்தது.

இலங்கை  அணிக்கு சகலதுறை வீரர்களில் ஒருவராக நம்பிக்கை கொடுத்திருந்த தனன்ஜய டிசில்வா, தனது இரண்டாவது T20 அரைச் சதத்தை கடந்து 8 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் வேகமாக ஓட்டங்களை குவித்து 20 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதில், ஏனைய இலங்கை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சை பொருத்தவரை வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். நவ்தீப் ஷைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, சர்துல் தாகூர் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, இந்த தொடரை வெற்றிக்கொண்டதன் ஊடாக இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 6 ஆவது தொடர் வெற்றியை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியை பொருத்தவரை, இந்திய அணிக்கு எதிராக எந்தவொரு T20 தொடரையும் வெற்றிகொள்ளாத அணியாக நாடு திரும்பவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
123/10 (15.5)

India
201/6 (20)

Batsmen R B 4s 6s SR
KL Rahul st Kusal Perera b Lakshan Sandakan 54 36 5 1 150.00
Shikhar Dhawan c Danushka Gunathilaka b Lakshan Sandakan 52 36 7 1 144.44
Sanju Samson lbw b Wanindu Hasaranga 6 2 0 1 300.00
Manish Pandey not out 31 18 4 0 172.22
Shreyas Iyer c & b Lakshan Sandakan 4 2 1 0 200.00
Virat Kohli run out (Danushka Gunathilaka) 26 17 2 1 152.94
Washington Sundar c Lakshan Sandakan b Lahiru Kumara 0 1 0 0 0.00
Shardul Thakur not out 22 8 1 2 275.00


Extras 6 (b 0 , lb 2 , nb 0, w 4, pen 0)
Total 201/6 (20 Overs, RR: 10.05)
Fall of Wickets 1-97 (10.5) Shikhar Dhawan, 2-106 (11.3) Sanju Samson, 3-118 (12.3) KL Rahul, 4-122 (12.5) Shreyas Iyer, 5-164 (17.3) Virat Kohli, 6-164 (17.4) Washington Sundar,

Bowling O M R W Econ
Lasith Malinga 4 0 40 0 10.00
Angelo Mathews 3 0 38 0 12.67
Dhananjaya de Silva 1 0 13 0 13.00
Lahiru Kumara 4 0 46 1 11.50
Wanindu Hasaranga 4 0 27 1 6.75
Lakshan Sandakan 4 0 35 3 8.75


Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Washington Sundar b Jasprit Bumrah 1 2 0 0 50.00
Avishka Fernando c Shreyas Iyer b Shardul Thakur 9 7 0 1 128.57
Kusal Perera b Navdeep Saini 7 10 1 0 70.00
Oshada Fernando run out (Manish Pandey) 2 5 0 0 40.00
Angelo Mathews c Manish Pandey b Washington Sundar 31 20 1 3 155.00
Dhananjaya de Silva c Jasprit Bumrah b Navdeep Saini 57 36 8 1 158.33
Dasun Shanaka c & b Shardul Thakur 9 9 0 1 100.00
Wanindu Hasaranga run out (Yuzvendra Chahal) 0 1 0 0 0.00
Lakshan Sandakan st Sanju Samson b Washington Sundar 1 2 0 0 50.00
Lasith Malinga c Virat Kohli b Navdeep Saini 0 1 0 0 0.00
Lahiru Kumara not out 1 1 0 0 100.00


Extras 5 (b 1 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 123/10 (15.5 Overs, RR: 7.77)
Fall of Wickets 1-5 (0.6) Danushka Gunathilaka, 2-11 (1.3) Avishka Fernando, 3-15 (3.1) Oshada Fernando, 4-26 (5.1) Kusal Perera, 5-94 (11.2) Angelo Mathews, 6-110 (13.3) Dasun Shanaka, 7-110 (13.4) Wanindu Hasaranga, 8-118 (14.6) Lakshan Sandakan, 9-122 (15.3) Dhananjaya de Silva, 10-123 (15.5) Lasith Malinga,

Bowling O M R W Econ
Jasprit Bumrah 2 1 5 1 2.50
Shardul Thakur 3 0 19 2 6.33
Navdeep Saini 3.5 0 28 3 8.00
Washington Sundar 4 0 37 2 9.25
Yuzvendra Chahal 3 0 33 0 11.00



முடிவு – இந்திய அணி 78 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<