சுற்றுலா இலங்கை கிரிக்கெட் மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை நிர்ணயம் செய்த போட்டி வெற்றி இலக்கை அடைய துடுப்பாடும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 75 ஓட்டங்கள் மாத்திரமே தேவையாக உள்ளது.
விஷ்மியின் கன்னி சதம் வீண் ; வெற்றியீட்டியது அயர்லாந்து
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முன்னர் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி மோதல் ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் ஆடுகின்றது.
இந்தப் பயிற்சிப் போட்டி புதன்கிழமை (14) வோர்கேஸ்டரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் முதல் இன்னிங்ஸை (139) அடுத்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியானது 324 ஓட்டங்கள் பெற்றது. பின்னர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது,
நேற்று (16) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணியானது 87.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 306 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களம் வந்த நிஷான் மதுஷ்க 77 ஓட்டங்கள் பெற, அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா 66 ஓட்டங்கள் எடுத்தார். இவர்கள் தவிர அரைச்சதம் தாண்டிய அஞ்செலோ மெதிவ்ஸ் 51 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மட் 3 விக்கெட்டுக்களையும் லின்டன் ஜேம்ஸ், சமான் அக்தார் மற்றும் ஜோஸ் ஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
மழையினால் பாதிக்கப்பட்ட பயிற்சி மோதலின் இரண்டாம் நாள் ஆட்டம்
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 122 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடும் இங்கிலாந்து லயன்ஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்களை சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<