Home Tamil மழைக்கு மத்தியில் இங்கிலாந்து அணி முன்னிலை

மழைக்கு மத்தியில் இங்கிலாந்து அணி முன்னிலை

2
Sri Lanka tour of England 2024 - 1st Test - Day 2

சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் மழையின் பாதிப்புக்கு மத்தியில் இங்கிலாந்து இலங்கையை விட சிறு முன்னிலையுடன் காணப்படுகின்றது. 

>>இலங்கை அணிக்காக போராடிய மிலான், தனன்ஞய<<

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வீரர்கள் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆடுகின்றனர். அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி புதன்கிழமை (21) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியது 

தொடர்ந்து போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் (236) துடுப்பாட்டத்தை அடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பம் செய்த இங்கிலாந்து அணி 22 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்பட்டது. 

தொடர்ந்து நேற்று (22) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மழையின் பாதிப்பு காரணமாக தாமதமாகவே போட்டி தொடங்கியது. 

பின்னர் இங்கிலாந்து அணிக்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர்களான அசித பெர்னாண்டோ துவக்கத்தில் நெருக்கடி உருவாக்கினார். அவ்வணியின் ஆரம்ப வீரராக வந்த பென் டக்கட் 18 ஓட்டங்களுடனும், இங்கிலாந்து தலைவர் ஒல்லி போப் 6 ஓட்டங்களையும் பெற்றனர். 

இதன் பின்னர் ஜோ ரூட், ஹர்ரி புரூக் ஆகியோர் இங்கிலாந்தை பலப்படுத்த தொடங்கினர். இந்த வீரர்களில் ஜோ ரூட் 42 ஓட்டங்களையும், ஹர்ரி புரூக் தன்னுடைய 09ஆவது அரைச்சதத்தோடு 56 ஓட்டங்களையும் எடுத்தனர். 

இதனையடுத்து ஜேமி ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தோடு இங்கிலாந்து அணி முன்னேறிய நிலையில் மழையின் தாக்கம், போதிய வெளிச்சமின்மை என்பவற்றின் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் மொத்தமாக 57 ஓவர்களே வீசப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியானது குறிப்பிட்ட ஓவர்கள் அனைத்தினையும் எதிர்கொண்டு 6 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

>>இலங்கை A – தென்னாபிரிக்கா A தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது<<

இங்கிலாந்து தற்போது 23 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்க அதன் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காது களத்தில் நிற்கும் ஜேமி ஸ்மித் 72 ஓட்டங்களுடனும், கஸ் அட்கின்ஸன் 04 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். 

இலங்கைப்பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 2 சாய்த்தனர். 

போட்டியின் சுருக்கம்  

Stumps


England
259/6 (61)

Sri Lanka
236/10 (74)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Joe Root b Chris Woakes 4 16 0 0 25.00
Dimuth Karunaratne c Jamie Smith b Gus Atkinson 2 18 0 0 11.11
Kusal Mendis c Harry Brook b Mark Wood 24 34 4 0 70.59
Angelo Mathews lbw b Chris Woakes 0 5 0 0 0.00
Dinesh Chandimal lbw b Shoaib Bashir 17 40 2 0 42.50
Dhananjaya de Silva c Dan Lawrence b Shoaib Bashir 74 84 8 0 88.10
Kamindu Mendis c Jamie Smith b Chris Woakes 12 25 1 0 48.00
Prabath Jayasuriya c Jamie Smith b Gus Atkinson 10 20 1 0 50.00
Milan Rathnayake c Chris Woakes b Shoaib Bashir 72 135 6 2 53.33
Vishwa Fernando run out (Ollie Pope) 13 62 2 0 20.97
Asitha Fernando not out 0 6 0 0 0.00


Extras 8 (b 0 , lb 4 , nb 1, w 3, pen 0)
Total 236/10 (74 Overs, RR: 3.19)
Bowling O M R W Econ
Chris Woakes 11 3 32 3 2.91
Gus Atkinson 16 3 48 2 3.00
Matthew Potts 9 0 48 0 5.33
Mark Wood 8 0 31 1 3.88
Shoaib Bashir 23 4 55 3 2.39
Joe Root 7 2 18 0 2.57


Batsmen R B 4s 6s SR
Ben Duckett lbw b Asitha Fernando 18 20 2 0 90.00
Dan Lawrence c Dinesh Chandimal b Vishwa Fernando 30 39 3 0 76.92
Ollie Pope b Asitha Fernando 6 8 1 0 75.00
Joe Root c Dinesh Chandimal b Asitha Fernando 42 57 4 0 73.68
Harry Brook b Prabath Jayasuriya 56 73 4 0 76.71
Jamie Smith not out 72 97 5 1 74.23
Chris Woakes b Prabath Jayasuriya 25 65 3 0 38.46
Gus Atkinson not out 4 10 0 0 40.00


Extras 6 (b 0 , lb 2 , nb 3, w 1, pen 0)
Total 259/6 (61 Overs, RR: 4.25)
Bowling O M R W Econ
Dhananjaya de Silva 2 0 14 0 7.00
Prabath Jayasuriya 21 4 58 2 2.76
Asitha Fernando 14 0 68 3 4.86
Vishwa Fernando 13 0 51 1 3.92
Milan Rathnayake 9 0 53 0 5.89
Kamindu Mendis 2 0 13 0 6.50



 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<