Home Tamil தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க போராட்டம் வீண்

தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க போராட்டம் வீண்

330
DDS
PA Images/Getty Images

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்

அதேநேரம், இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

வியாழக்கிழமை (01) லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கினார்.

தமது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் T20 தொடரினை அடுத்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி,  இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே தோல்வியுற்ற காரணத்தினால், இந்த ஒருநாள் தொடரினை தக்கவைக்க கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இந்தப் போட்டியில் விளையாடியிருந்தது.

>> இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்

இப்போட்டிக்கான இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி, தனன்ஞய டி சில்வா, அவிஷ்க பெர்னான்டோ மற்றும் அசித்த பெர்னான்டோ ஆகிய வீரர்கள் பிரவீன் ஜயவிக்ரம, தனன்ஞய லக்ஷான் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்களுக்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் டொம் கர்ரன் மற்றும் ஜேசன் ரோய் ஆகிய வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை XI – சரித் அசலன்க, குசல் பெரேரா (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, தனன்ஞய டி சில்வா, அவிஷ்க பெர்னான்டோ, அசித்த பெர்னான்டோ, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாந்து, சாமிக்க கருணாரட்ன

இங்கிலாந்து XI – ஜோ ரூட், ஜேசன் ரோய், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோவ், இயன் மோர்கன் (தலைவர்), டொம் கர்ரன், சாம் கர்ரன், டேவிட் வில்லி, ஆதீல் ரஷீட், மார்க் வூட்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சாம் கர்ரனின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் ஏமாற்றம் தந்தனர். இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த தனன்ஞய டி சில்வா மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் 5ஆம் விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர இலங்கை அணி சரிவிலிருந்து சற்று மீண்டு கொண்டது. பின்னர், வனிந்து ஹஸரங்க 26 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆட்டமிழந்து சென்றார்.

>> உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்

வனிந்து ஹஸரங்கவின் விக்கெட்டின் பின்னர் தசுன் ஷானக்கவுடன் மீண்டும் ஒரு இணைப்பாட்டத்தினை உருவாக்கிய தனன்ஞய டி சில்வா தன்னுடைய 7ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து தனன்ஞய டி சில்வாவின் விக்கெட் பறிபோன நிலையில் தசுன் ஷானக்க மற்றும் பின்வரிசை துடுப்பாட்டவீரர்கள் ஆகியோரின் பங்களிப்போடு இலங்கை கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது கன்னி ஒருநாள் சதத்தினை ஒன்பது ஓட்டங்களால் தவறவிட்ட தனன்ஞய டி சில்வா 91 பந்துகளில் 13 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களைப் பெற, தசுன் ஷானக்க 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 67 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் சாம் கர்ரன் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைபப்பற்றி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்ய, டேவிட் வில்லி 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைப் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 242 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறித்த வெற்றி இலக்கினை 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த வீரர்களான இயன் மோர்கன் 83 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களை எடுக்க, ஜோ ரூட்டும் 87 பந்துகளுக்கு தன்னுடைய 35ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 68 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களோடு ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜேசன் ரோயும் 52 பந்துகளில்  60 ஓட்டங்கள் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சாமிக்க கருணாரட்ன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சாம் கர்ரன் தெரிவாகினார்.

இலங்கை கிரிக்கெட் அணி தமது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் T20 தொடருடன் சேர்த்து ஒருநாள் தொடரினையும் இழந்துள்ள நிலையில், இந்த ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) பிரிஸ்டொல் நகரில் இடம்பெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
241/9 (50)

England
244/2 (43)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Sam Curran 5 12 1 0 41.67
Kusal Perera lbw b Sam Curran 0 2 0 0 0.00
Avishka Fernando lbw b Sam Curran 2 2 0 0 100.00
Dhananjaya de Silva c Joe Root b David Willey 91 91 13 0 100.00
Charith Asalanka c George Garton b David Willey 3 11 0 0 27.27
Wanindu Hasaranga c Sam Billings b Sam Curran 26 49 2 0 53.06
Dasun Shanaka c Sam Curran b David Willey 47 67 2 1 70.15
Chamika Karunaratne c Jonny Bairstow b Sam Curran 21 38 1 0 55.26
Binura Fernando c Adil Rashid b David Willey 17 15 3 0 113.33
Dushmantha Chameera not out 14 12 0 1 116.67
Asitha Fernando not out 1 1 0 0 100.00


Extras 14 (b 0 , lb 1 , nb 0, w 13, pen 0)
Total 241/9 (50 Overs, RR: 4.82)
Fall of Wickets 1-4 (1.2) Kusal Perera, 2-6 (1.4) Avishka Fernando, 3-12 (3.3) Pathum Nissanka, 4-21 (6.5) Charith Asalanka, 5-86 (20.3) Wanindu Hasaranga, 6-164 (34.3) Dhananjaya de Silva, 7-206 (44.7) Dasun Shanaka, 8-217 (46.1) Chamika Karunaratne, 9-229 (49.1) Binura Fernando,

Bowling O M R W Econ
David Willey 10 1 64 4 6.40
Sam Curran 10 1 48 5 4.80
Tom Curran 10 0 43 0 4.30
Mark Wood 10 1 35 0 3.50
Adil Rashid 10 0 50 0 5.00


Batsmen R B 4s 6s SR
Jonny Bairstow b Wanindu Hasaranga 60 52 10 0 115.38
Jason Roy c Dhananjaya de Silva b Chamika Karunaratne 29 36 3 1 80.56
Joe Root not out 68 87 5 0 78.16
Eoin Morgan not out 75 83 8 1 90.36


Extras 12 (b 1 , lb 0 , nb 0, w 11, pen 0)
Total 244/2 (43 Overs, RR: 5.67)
Fall of Wickets 1-76 (12.4) Jonny Bairstow, 2-104 (17.1) Jason Roy,

Bowling O M R W Econ
Dushmantha Chameera 9 0 46 0 5.11
Binura Fernando 9 0 53 0 5.89
Asitha Fernando 10 0 54 0 5.40
Wanindu Hasaranga 7 0 46 1 6.57
Chamika Karunaratne 6 0 34 1 5.67
Dhananjaya de Silva 2 0 10 0 5.00



முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<