சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அணியானது பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20I, மூன்று ஒருநாள் மற்றும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
முதலில் T20I தொடர் மார்ச் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 6 மற்றும் 9ம் திகதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது T20I போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த T20I தொடரானது சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
T20I தொடரையடுத்து மார்ச் 13, 15 மற்றும் 18ம் திகதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் செட்டகிரொமில் நடைபெறவுள்ளன.
இறுதியாக ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 22ம் திகதி சில்ஹெட்டில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி செட்டகிரொமில் மார்ச் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் T20I – மார்ச் 4 – சில்ஹெட்
- இரண்டாவது T20I – மார்ச் 6 – சில்ஹெட்
- மூன்றாவது T20I – மார்ச் 9 – சில்ஹெட்
- முதல் ஒருநாள் – மார்ச் 13 – செட்டகிரொம்
- இரண்டாவது ஒருநாள் – மார்ச் 15 – செட்டகிரொம்
- மூன்றாவது ஒருநாள் – மார்ச் 18 – செட்டகிரொம்
- முதல் டெஸ்ட் – மார்ச் 22 தொடக்கம் மார்ச் 26 – சில்ஹெட்
- இரண்டாவது டெஸ்ட் – மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் 03 – செட்டகிரொம்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<