Home Tamil நுவான் துஷாரவின் ஹெட்ரிக்குடன் இலங்கைக்கு தொடர் வெற்றி

நுவான் துஷாரவின் ஹெட்ரிக்குடன் இலங்கைக்கு தொடர் வெற்றி

Sri Lanka tour of Bangladesh 2024

209
Sri Lanka tour of Bangladesh 2024

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. பங்களாதேஷ் அணி மாற்றங்களின்றி களமிறங்க இலங்கை அணி மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

>>டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெரன்ணாடோ, மதீஷ பதிரண மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோருக்கு பதிலாக தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க மற்றும் நுவான் துஷார ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்காக குசல் மெண்டிஸ் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இவர் அரைச்சதம் கடந்தது மாத்திரமின்றி தொடர்ந்து அபாரமாக ஆடினார்.

அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்த போதும் குசல் மெண்டிஸ் அபாரமாக ஆடி 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை குவித்தார். இறுதியாக தசுன் ஷானக 9 பந்துகளில் 19 ஓட்டங்களை விளாச 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை இலங்கை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் டஸ்கின் அஹ்மட் மற்றும் ரிஷாட் ஹொஷைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை கொடுத்தனர். அஞ்செலோ மெதிவ்ஸ் 2வது ஓவரை வீசியபோது உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக ஓவரை தொடர்ந்த தனன்ஜய டி சில்வா முதல் பந்தில் லிடன் டாஸின் விக்கெட்டினை வீழ்த்தினார்.

முதல் விக்கெட் வீழ்ந்ததை தொடர்ந்து அணியின் நான்காவது ஓவரை வீச ஆரம்பித்த நுவான் துஷார தன்னுடைய இரண்டாவது பந்தில் பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹுசைன் செண்டோவின் விக்கெட்டினை வீழ்த்தினார். அதனை தொடர்ந்த இரண்டு பந்துகளிலும் ரிடோய் மற்றும் மஹ்மதுல்லாஹ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி T20I கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரம், இலங்கை அணிக்காக ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

>>117ஆவது வடக்கின் சமர் சம்பியனாக யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி

இதனை தொடர்ந்து வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு பலம் கொடுத்த போதும், ரிஷாட் ஹொஷைன் அபாரமாக ஆடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தார். இவர் 30 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசியதுடன், டஸ்கின் அஹ்மட் 31 ஓட்டங்களை அடித்தாடினார்.

எனினும் நுவான் துஷார 5 விக்கெட்டுகளை வீழ்த்த பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தநிலையில் T20I தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 13 திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Bangladesh
146/10 (19.4)

Sri Lanka
174/7 (20)

Batsmen R B 4s 6s SR
Dhananjaya de Silva c Soumya Sarkar b Taskin Ahmed 8 12 1 0 66.67
Kusal Mendis c Soumya Sarkar b Taskin Ahmed 86 55 6 6 156.36
Kamindu Mendis c Shoriful Islam b Rishad Hossain 12 12 2 0 100.00
Wanidu Hasaranga c Shoriful Islam b Mustafizur Rahman 15 13 1 1 115.38
Charith Asalanka c Mustafizur Rahman b Shoriful Islam 3 5 0 0 60.00
Angelo Mathews c Soumya Sarkar b Rishad Hossain 10 7 0 1 142.86
Dasun Shanaka run out (Liton Das) 19 9 2 1 211.11
Sadeera Samarawickrama not out 7 7 1 0 100.00


Extras 14 (b 5 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 174/7 (20 Overs, RR: 8.7)
Bowling O M R W Econ
Shoriful Islam 4 0 28 1 7.00
Taskin Ahmed 4 0 25 2 6.25
Mahedi Hasan 3 0 22 0 7.33
Mustafizur Rahman 4 0 47 1 11.75
Rishad Hossain 4 0 35 2 8.75
Soumya Sarkar 1 0 11 0 11.00


Batsmen R B 4s 6s SR
Liton Das c Dasun Shanaka b Dhananjaya de Silva 7 11 1 0 63.64
Soumya Sarkar b Nuwan Thushara 11 10 2 0 110.00
Najmul Hossain Shanto b Nuwan Thushara 1 6 0 0 16.67
Towhid Hridoy b Nuwan Thushara 0 1 0 0 0.00
Mahmudullah lbw b Nuwan Thushara 0 1 0 0 0.00
Jaker Ali lbw b Wanidu Hasaranga 4 13 0 0 30.77
Mahedi Hasan b Wanidu Hasaranga 19 20 2 0 95.00
Rishad Hossain c Sadeera Samarawickrama b Maheesh Theekshana 53 30 0 7 176.67
Taskin Ahmed c Dhananjaya de Silva b Dasun Shanaka 31 21 3 2 147.62
Shoriful Islam c Dasun Shanaka b Nuwan Thushara 4 2 1 0 200.00
Mustafizur Rahman not out 7 3 0 1 233.33


Extras 9 (b 1 , lb 1 , nb 0, w 7, pen 0)
Total 146/10 (19.4 Overs, RR: 7.42)
Bowling O M R W Econ
Angelo Mathews 1.1 0 5 0 4.55
Binura Fernando 4 0 39 0 9.75
Dhananjaya de Silva 0.5 0 2 1 4.00
Nuwan Thushara 4 1 20 5 5.00
Wanidu Hasaranga 4 0 32 2 8.00
Maheesh Theekshana 4 0 35 1 8.75
Dasun Shanaka 1.4 0 11 1 7.86



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<