சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியானது 3 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
சென்னை சுபர் கிங்ஸ் உடன் இணையும் யாழ்ப்பாண இளம் வேகப்பந்துவீச்சாளர்
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது.
முன்னதாக சட்டோக்ராமில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று பங்களாதேஷ் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்த காரணத்தினால தொடரை தக்க வைக்க கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து களமிறங்கிய இப்போட்டிக்கான இலங்கை அணி ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அந்தவகையில் மகீஷ் தீக்ஷனவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு இடதுகை சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரரான துனித் வெல்லாலகே இணைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை XI
குசல் மெண்டிஸ், (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, ப்ரமோத் மதுசான், டில்சான் மதுசங்க, லஹிரு குமார
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பத்தில் டில்சான் மதுசங்க நெருக்கடி உருவாக்கினார். இதனால் பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக ஓட்டமேதுமின்றி லிடன் தாஸ் ஓய்வறை நடந்தார்.
எனினும் புதிய வீரர்களில் ஒருவராக வந்த பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ, ஏனைய ஆரம்பவீரர் சௌம்யா சர்க்கார் ஆகியோர் பங்களாதேஷ் தரப்பினை பலப்படுத்தினர். இந்த வீரர்களில் பங்களாதேஷ் அணியின் இரண்டாம் விக்கெட்டாக மாறிய நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 39 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுக்க, சௌம்யா சர்க்கார் தன்னுடைய 12ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 66 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் பின்னர் பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை தடுமாறிய போதிலும் தவ்ஹித் ரிதோயின் பொறுப்பான ஆட்டத்தோடு பங்களாதேஷ் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த தவ்ஹித் ரிதோய் 102 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளோடு 96 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க தனது அபார சுழலின் மூலம் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டில்சான் மதுசங்க 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 287 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாற்றம் ஒன்றை காட்டி ஒரு கட்டத்தில் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க, சரித் அலசன்க ஜோடி 185 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கை முன்னேறியது. பின்னர் இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக தன்னுடைய ஆறாவது ஒருநாள் சதத்தினைப் பூர்த்தி செய்த பெதும் நிஸ்ஸங்க 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 114 ஓட்டங்கள் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தும் புதிய விதிமுறை
தொடர்ந்து சரித் அசலன்கவும் சதத்தினை நெருங்கிய நிலையில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். இதனால் சற்று தடுமாற்றம் ஒன்றை எதிர்கொண்ட போதிலும் இலங்கை வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகேவின் நிதான ஆட்டத்தினால் போட்டியின் வெற்றி இலக்கினை 47.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் சரித் அசலன்க 93 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 91 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை வனிந்து ஹஸரங்க 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியோடு 25 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவாகியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Liton Das | c Dunith Wellalage b Dilshan Madushanka | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Soumya Sarkar | c Dilshan Madushanka b Wanidu Hasaranga | 68 | 66 | 11 | 1 | 103.03 |
Najmul Hossain Shanto | c Kusal Mendis b Dilshan Madushanka | 40 | 39 | 6 | 0 | 102.56 |
Towhid Hridoy | not out | 96 | 102 | 3 | 5 | 94.12 |
Mahmudullah | st Kusal Mendis b Wanidu Hasaranga | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Mushfiqur Rahim | lbw b Wanidu Hasaranga | 25 | 28 | 3 | 0 | 89.29 |
Mehidy Hasan Miraz | b Wanidu Hasaranga | 12 | 18 | 1 | 0 | 66.67 |
Tanzim Hasan | c Wanidu Hasaranga b Pramod Madushan | 18 | 33 | 1 | 0 | 54.55 |
Taskin Ahmed | not out | 18 | 10 | 2 | 1 | 180.00 |
Extras | 9 (b 1 , lb 1 , nb 1, w 6, pen 0) |
Total | 286/7 (50 Overs, RR: 5.72) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 6.4 | 1 | 30 | 2 | 4.69 | |
Pramod Madushan | 9 | 0 | 72 | 1 | 8.00 | |
Lahiru Kumara | 8 | 0 | 50 | 0 | 6.25 | |
Janith Liyanage | 4.2 | 0 | 30 | 0 | 7.14 | |
Charith Asalanka | 2 | 0 | 10 | 0 | 5.00 | |
Dunith Wellalage | 10 | 0 | 47 | 0 | 4.70 | |
Wanidu Hasaranga | 10 | 1 | 45 | 4 | 4.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Liton Das b Mehidy Hasan Miraz | 114 | 113 | 13 | 3 | 100.88 |
Avishka Fernando | c Soumya Sarkar b Shoriful Islam | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kusal Mendis | c Mushfiqur Rahim b Taskin Ahmed | 16 | 13 | 3 | 0 | 123.08 |
Sadeera Samarawickrama | c Mehidy Hasan Miraz b Shoriful Islam | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Charith Asalanka | c Mushfiqur Rahim b Taskin Ahmed | 91 | 93 | 6 | 4 | 97.85 |
Janith Liyanage | lbw b Tanzim Hasan | 9 | 16 | 0 | 0 | 56.25 |
Dunith Wellalage | not out | 15 | 27 | 0 | 0 | 55.56 |
Wanidu Hasaranga | c Liton Das b Taijul Islam | 25 | 16 | 1 | 2 | 156.25 |
Pramod Madushan | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 0 , lb 0 , nb 0, w 16, pen 0) |
Total | 287/7 (47.1 Overs, RR: 6.08) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 9 | 0 | 49 | 2 | 5.44 | |
Tanzim Hasan | 10 | 0 | 65 | 1 | 6.50 | |
Taskin Ahmed | 9 | 0 | 49 | 2 | 5.44 | |
Mehidy Hasan Miraz | 10 | 0 | 58 | 1 | 5.80 | |
Taijul Islam | 5 | 0 | 43 | 1 | 8.60 | |
Soumya Sarkar | 4 | 0 | 21 | 0 | 5.25 | |
Najmul Hossain Shanto | 0.1 | 0 | 2 | 0 | 20.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<