சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> இரண்டாம் இன்னிங்ஸில் சரிவை எதிர் நோக்கியுள்ள பங்களாதேஷ்
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
பங்களாதேஷின் சில்லேட் நகரில் நடைபெற்று வந்த இலங்கை – பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வரும் போது பங்களாதேஷ் அணி இலங்கையினால் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 511 ஓட்டங்களை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்திருந்தது. தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவுக்கு வர பங்களாதேஷ் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த மொமினுல் ஹக் 07 ஓட்டங்களையும், தய்ஜூல் இஸ்லாம் 06 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
இன்று போட்டியின் நான்காம் நாளில் பங்களாதேஷின் வெற்றிக்காக 464 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த பங்களாதேஷ் அணியானது தொடக்கத்தில் தய்ஜூல் இஸ்லாமின் விக்கெட்டினை அவர் 06 ஓட்டங்கள் பெற்ற போது பறிகொடுத்த போதும் மெஹிதி ஹஸன் மற்றும் மொமினுல் ஹக் ஜோடி 66 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து ஆறுதல் கொடுத்தது. எனினும் பங்களாதேஷின் 7ஆவது விக்கெட்டாக மெஹிதி ஹஸன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
>> தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் இமாத் வசீம்
மெஹிதி ஹஸனின் பின்னர் மீண்டும் தடுமாறத் தொடங்கிய பங்களாதேஷ் அணியானது நான்காம் நாளின் மதிய போசணத்தினை அடுத்து 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 02 விக்கெட்டுக்களையும் சுருட்டி தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தமை குறிப்பிடத்த்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – பங்களாதேஷ் தொடரில் அடுத்ததாக இரு அணிகளும் பங்கெடுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 30ஆம் திகதி சட்டோக்ரமில் ஆரம்பமாகுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Mehidy Hasan Miraz b Khaled Ahmed | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Dimuth Karunaratne | b Khaled Ahmed | 17 | 37 | 1 | 0 | 45.95 |
Kusal Mendis | c Zakir Hasan b Khaled Ahmed | 16 | 26 | 2 | 0 | 61.54 |
Angelo Mathews | run out (Najmul Hossain Shanto) | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Dinesh Chandimal | c Mehidy Hasan Miraz b Shoriful Islam | 9 | 13 | 0 | 0 | 69.23 |
Dhananjaya de Silva | c Mehidy Hasan Miraz b Nahid Rana | 102 | 131 | 12 | 1 | 77.86 |
Kamindu Mendis | c Liton Das b Nahid Rana | 102 | 127 | 11 | 3 | 80.31 |
Prabath Jayasuriya | c Liton Das b Nahid Rana | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Kasun Rajitha | not out | 6 | 27 | 0 | 0 | 22.22 |
Vishwa Fernando | c Liton Das b Taijul Islam | 9 | 19 | 0 | 0 | 47.37 |
Lahiru Kumara | run out (Shahadat Hossain) | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 2 , lb 4 , nb 5, w 0, pen 0) |
Total | 280/10 (68 Overs, RR: 4.12) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 14 | 0 | 59 | 1 | 4.21 | |
Khaled Ahmed | 17 | 2 | 72 | 3 | 4.24 | |
Nahid Rana | 14 | 2 | 87 | 3 | 6.21 | |
Taijul Islam | 13 | 6 | 31 | 1 | 2.38 | |
Mehidy Hasan Miraz | 10 | 1 | 25 | 0 | 2.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 12 | 46 | 1 | 0 | 26.09 |
Zakir Hasan | lbw b Vishwa Fernando | 9 | 8 | 2 | 0 | 112.50 |
Najmul Hossain Shanto | lbw b Vishwa Fernando | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Mominul Haque | c Kamindu Mendis b Kasun Rajitha | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Taijul Islam | c Kusal Mendis b Kasun Rajitha | 47 | 80 | 6 | 0 | 58.75 |
Shahadat Hossain | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 18 | 26 | 3 | 0 | 69.23 |
Liton Das | b Lahiru Kumara | 25 | 43 | 4 | 0 | 58.14 |
Mehidy Hasan Miraz | c Nishan Madushka b Kasun Rajitha | 11 | 34 | 1 | 0 | 32.35 |
Shoriful Islam | c & b Vishwa Fernando | 15 | 21 | 0 | 2 | 71.43 |
Khaled Ahmed | c Kusal Mendis b Vishwa Fernando | 22 | 28 | 1 | 2 | 78.57 |
Nahid Rana | not out | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Extras | 19 (b 9 , lb 7 , nb 2, w 1, pen 0) |
Total | 188/10 (51.3 Overs, RR: 3.65) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 15.3 | 2 | 48 | 4 | 3.14 | |
Kasun Rajitha | 16 | 3 | 56 | 3 | 3.50 | |
Lahiru Kumara | 12 | 1 | 31 | 3 | 2.58 | |
Prabath Jayasuriya | 7 | 1 | 33 | 0 | 4.71 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 4 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Liton Das b Nahid Rana | 10 | 20 | 1 | 0 | 50.00 |
Dimuth Karunaratne | c Nahid Rana b Shoriful Islam | 52 | 101 | 7 | 1 | 51.49 |
Kusal Mendis | c Liton Das b Nahid Rana | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Angelo Mathews | c Liton Das b Taijul Islam | 22 | 24 | 3 | 0 | 91.67 |
Dinesh Chandimal | lbw b Mehidy Hasan Miraz | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c Zakir Hasan b Mehidy Hasan Miraz | 108 | 179 | 9 | 2 | 60.34 |
Vishwa Fernando | c Mehidy Hasan Miraz b Khaled Ahmed | 4 | 24 | 0 | 0 | 16.67 |
Kamindu Mendis | c Mehidy Hasan Miraz b Taijul Islam | 164 | 237 | 14 | 0 | 69.20 |
Prabath Jayasuriya | b Mehidy Hasan Miraz | 25 | 47 | 4 | 0 | 53.19 |
Lahiru Kumara | lbw b Mehidy Hasan Miraz | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | not out | 4 | 20 | 0 | 0 | 20.00 |
Extras | 26 (b 12 , lb 3 , nb 1, w 10, pen 0) |
Total | 418/10 (110.4 Overs, RR: 3.78) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 21 | 1 | 75 | 1 | 3.57 | |
Khaled Ahmed | 18 | 1 | 46 | 1 | 2.56 | |
Nahid Rana | 20 | 0 | 128 | 2 | 6.40 | |
Taijul Islam | 20.4 | 2 | 75 | 2 | 3.68 | |
Mehidy Hasan Miraz | 29 | 6 | 74 | 4 | 2.55 | |
Mominul Haque | 1 | 1 | 0 | 0 | 0.00 | |
Najmul Hossain Shanto | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | lbw b Vishwa Fernando | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Zakir Hasan | c Kusal Mendis b Lahiru Kumara | 19 | 22 | 2 | 0 | 86.36 |
Najmul Hossain Shanto | c Dimuth Karunaratne b Kasun Rajitha | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Mominul Haque | not out | 87 | 148 | 12 | 1 | 58.78 |
Shahadat Hossain | c Kusal Mendis b Vishwa Fernando | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Liton Das | c Angelo Mathews b Vishwa Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Taijul Islam | lbw b Kasun Rajitha | 6 | 15 | 1 | 0 | 40.00 |
Mehidy Hasan Miraz | c Dhananjaya de Silva b Kasun Rajitha | 33 | 50 | 6 | 0 | 66.00 |
Shoriful Islam | c & b Kasun Rajitha | 12 | 42 | 0 | 0 | 28.57 |
Khaled Ahmed | c Kusal Mendis b Kasun Rajitha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Nahid Rana | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Extras | 19 (b 11 , lb 3 , nb 3, w 2, pen 0) |
Total | 182/10 (49.2 Overs, RR: 3.69) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 15 | 5 | 36 | 3 | 2.40 | |
Kasun Rajitha | 14 | 1 | 56 | 5 | 4.00 | |
Lahiru Kumara | 11.2 | 1 | 39 | 2 | 3.48 | |
Prabath Jayasuriya | 9 | 1 | 37 | 0 | 4.11 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<