Home Tamil த்ரில் வெற்றியுடன் T20I தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை

த்ரில் வெற்றியுடன் T20I தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை

211

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை 03 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>முன்னணி வீரரை இழக்கும் சென்னை சபர் கிங்ஸ்!

முன்னதாக பங்களாதேஷின் சில்லேட் நகரில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலன்க ஆகியோரது அதிரடியான ஆட்டங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 48 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் மெண்டிஸ் தன்னுடைய 13ஆவது T20I அரைச்சதத்துடன் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 59 ஓட்டங்கள் எடுத்தார்.

>>ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க இல்லாதது புதிய வாய்ப்பு – கிறிஸ் சில்வர்வூட்

இவர்கள் தவிர இப்போட்டியில் இலங்கை அணியினை வழிநடாத்திய சரித் அசலன்க வெறும் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் றிசாட் ஹொசைன், தஸ்கின் அஹ்மட் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 207 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும் மஹமதுல்லா மற்றும் ஜாகேர் அலி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் போட்டியில் வெற்றியை நெருங்கியிருந்தது.

எனினும் இறுதியில் குறிப்பிட்ட வீரர்கள் இருவரினதும் முயற்சிகள் வீணாக பங்களாதேஷ் அணியினால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் அவ்வணி 03 ஓட்டங்களால் துரதிஷ்டவசமாக வெற்றியினைத் தவறவிட்டிருந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜாகேர் அலி வெறும் 34 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் மஹமதுல்லா 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளோடு 54 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவாகியிருந்தார். இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடரின் அடுத்த போட்டி புதன்கிழமை (06) முதல் போட்டி இடம்பெற்ற இதே சில்லேட் மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
203/8 (20)

Sri Lanka
206/3 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Liton Das b Shaiful Islam 4 2 1 0 200.00
Kusal Mendis c Mahmudullah b Rishad Hossain 59 36 6 3 163.89
Kamindu Mendis c Soumya Sarkar b Taskin Ahamed 19 14 1 2 135.71
Sadeera Samarawickrama not out 61 48 8 1 127.08
Charith Asalanka not out 44 21 0 6 209.52


Extras 19 (b 1 , lb 6 , nb 1, w 11, pen 0)
Total 206/3 (20 Overs, RR: 10.3)
Bowling O M R W Econ
Shaiful Islam 4 0 47 1 11.75
Taskin Ahamed 4 0 40 1 10.00
Mahedi Hasan 3 0 30 0 10.00
Mustafizur Rahman 4 0 42 0 10.50
Rishad Hossain 4 0 32 1 8.00
Soumya Sarkar 1 0 8 0 8.00


Batsmen R B 4s 6s SR
Liton Das c b Angelo Mathews 0 3 0 0 0.00
Soumya Sarkar c Charith Asalanka b Binura Fernando 12 11 2 0 109.09
Najmul Hossain Shanto c Angelo Mathews b Matheesha Pathirana 20 22 3 0 90.91
Towhid Hridoy c & b Angelo Mathews 8 5 0 1 160.00
Mahmudullah c b Maheesh Theekshana 54 31 2 4 174.19
Jaker Ali c Charith Asalanka b Dasun Shanaka 68 34 4 6 200.00
Mahedi Hasan c Angelo Mathews b Binura Fernando 16 11 2 0 145.45
Rishad Hossain c Charith Asalanka b Dasun Shanaka 0 2 0 0 0.00
Taskin Ahmed not out 2 2 0 0 100.00
Shoriful Islam not out 4 2 1 0 200.00


Extras 19 (b 0 , lb 2 , nb 3, w 14, pen 0)
Total 203/8 (20 Overs, RR: 10.15)
Bowling O M R W Econ
Angelo Mathews 3 0 17 2 5.67
Binura Fernando 4 0 41 2 10.25
Maheesh Theekshana 4 0 32 1 8.00
Dasun Shanaka 3 0 36 2 12.00
Akila Dananjaya 2 0 19 0 9.50
Matheesha Pathirana 4 0 56 1 14.00




[/vc_column_text]

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<