Home Tamil இலகு வெற்றியுடன் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை

இலகு வெற்றியுடன் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை

306
AFP/Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மெதிவ்ஸ், சந்திமால் ஆகியோரின் சதங்களோடு பலம் பெற்ற இலங்கை

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 1-0 எனக் கைப்பற்றிக் கொள்கின்றது.

டாக்காவில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் நேற்று இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் (506) துடுப்பாட்டத்தினை அடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காமல் நின்ற முஷ்பிகுர் ரஹீம் 14 ஓட்டங்களையும், லிடன் தாஸ் ஒரு ஓட்டத்தினையும் பெற்றிருந்தனர்.

இன்று போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியினை விட 107 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டான முஷ்பிகுர் ரஹீம், கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு 24 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த ரஜட் பட்டிதார்

இதன் பின்னர் பங்களாதேஷ் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக லிடன் தாஸ் மற்றும் சகீப் அல் ஹஸன் ஜோடி பொறுப்பான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கியது. இந்த இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணியினை விட பின்தங்கியருந்த ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணி தாண்டியது.

எனினும் ஐந்தாம் நாளின் மதிய போசணத்திற்குப் பின்னர் இந்த இணைப்பாட்டம் அசித்த பெர்னாண்டோவின் அபார பந்துவீச்சு மூலம் தகர்க்கப்பட்டதோடு, பங்களாதேஷ் அணியின் ஆறாம் விக்கெட்டாக லிடன் தாஸ் 52 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதேநேரம் லிடன் தாஸ் பங்களாதேஷ் அணியின் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 103 ஓட்டங்களை சகீப் அல் ஹஸனுடன் இணைந்து பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லிடன் தாஸின் பின்னர் பங்களாதேஷ் அணிக்கு அசித் பெர்னாண்டோ மீண்டும் நெருக்கடி உருவாக்க சகீப் அல் ஹஸனின் விக்கெட்டும் பறிபோனது. சகீப் அல் ஹஸன் தன்னுடைய 26ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 72 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஹீப் அல் ஹஸனின் விக்கெட்டினை அடுத்து சடுதியாக அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சுக்கு தடுமாறி தமது எஞ்சிய விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 55.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களை தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக எடுத்தது.

பாகிஸ்தானிடம் 2-0 என T20I தொடரை இழந்த இலங்கை மகளிர் அணி

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்தார். அத்துடன் இந்த போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர் இலங்கை அணி சார்பில் டெஸ்ட் போட்டியொன்றில் 10 விக்கெட்டுக்களைச் சாய்த்த இரண்டாவது பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்திருந்தார்.

பங்களாதேஷ் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 29 ஓட்டங்கள் மாத்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 3 ஓவர்களில் விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் 29 ஓட்டங்களுடன் அடைந்தது. இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த ஓசத பெர்னாண்டோ 9 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக அசித் பெர்னாண்டோ தெரிவாக, தொடர் நாயகனாக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
506/10 (165.1) & 28/0 (3)

Bangladesh
365/9 (116.2) & 162/10 (55.3)

Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Kasun Rajitha 0 2 0 0 0.00
Tamim Iqbal c Praveen Jayawickrama b Asitha Fernando  0 4 0 0 0.00
Najmul Hossain Shanto b Kasun Rajitha 8 21 1 0 38.10
Mominul Haque c Niroshan Dickwella b Asitha Fernando  9 9 2 0 100.00
Mushfiqur Rahim not out 175 355 21 0 49.30
Shakib Al Hasan (vc) lbw b Kasun Rajitha 0 1 0 0 0.00
Liton Das c Kusal Mendis b Kasun Rajitha 141 246 16 1 57.32
Mosaddek Hossain c Niroshan Dickwella b Kasun Rajitha 0 3 0 0 0.00
Taijul Islam c Niroshan Dickwella b Asitha Fernando  15 37 0 0 40.54
Khaled Ahmed c Niroshan Dickwella b Asitha Fernando  0 2 0 0 0.00
Ebadot Hossain not out 0 20 0 0 0.00


Extras 17 (b 9 , lb 3 , nb 2, w 3, pen 0)
Total 365/9 (116.2 Overs, RR: 3.14)
Fall of Wickets 1-1 (0.2) Mahmudul Hasan Joy , 2-6 (1.4) Tamim Iqbal, 3-16 (5.1) Mominul Haque, 4-24 (6.4) Najmul Hossain Shanto, 5-24 (6.5) Shakib Al Hasan (vc), 6-296 (92.1) Liton Das, 7-296 (92.4) Taijul Islam, 8-349 (107.1) Khaled Ahmed,

Bowling O M R W Econ
Kasun Rajitha 28.2 7 64 5 2.27
Asitha Fernando  26 2 93 4 3.58
Praveen Jayawickrama 38 9 108 0 2.84
Ramesh Mendis 14 0 53 0 3.79
Dhananjaya de Silva 6 0 27 0 4.50
Dimuth Karunarathne 4 1 8 0 2.00
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Najmul Hossain Shanto b Ebadot Hossain 57 91 8 1 62.64
Dimuth Karunarathne b Shakib Al Hasan (vc) 80 155 9 0 51.61
Kusal Mendis lbw b Shakib Al Hasan (vc) 11 49 0 0 22.45
Kasun Rajitha b Ebadot Hossain 0 12 0 0 0.00
Angelo Mathews not out 145 342 12 2 42.40
Dhananjaya de Silva c Liton Das b Shakib Al Hasan (vc) 58 95 9 0 61.05
Dinesh Chandimal c Tamim Iqbal b Ebadot Hossain 124 219 11 1 56.62
Niroshan Dickwella c Liton Das b Shakib Al Hasan (vc) 9 10 1 0 90.00
Ramesh Mendis lbw b Ebadot Hossain 10 11 2 0 90.91
Praveen Jayawickrama c Liton Das b Shakib Al Hasan (vc) 0 3 0 0 0.00
Asitha Fernando  run out (Shakib Al Hasan (vc)) 2 6 0 0 33.33


Extras 10 (b 0 , lb 8 , nb 2, w 0, pen 0)
Total 506/10 (165.1 Overs, RR: 3.06)
Fall of Wickets 1-95 (25.5) Oshada Fernando, 2-139 (43.1) Kusal Mendis, 3-144 (46.2) Kasun Rajitha, 4-164 (55.6) Dimuth Karunarathne, 5-266 (87.5) Dhananjaya de Silva, 6-465 (156.6) Dinesh Chandimal, 7-501 (162.5) Ramesh Mendis, 8-502 (163.3) Praveen Jayawickrama, 9-506 (165.1) Asitha Fernando , 10-482 (192.5) Niroshan Dickwella,

Bowling O M R W Econ
Khaled Ahmed 23 1 85 0 3.70
Ebadot Hossain 38 4 148 4 3.89
Shakib Al Hasan 40.1 11 96 5 2.39
Mosaddek Hossain 12 1 38 0 3.17
Taijul Islam 49 10 124 0 2.53
Mominul Haque 3 0 7 0 2.33
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Kusal Mendis b Asitha Fernando  15 27 3 0 55.56
Tamim Iqbal c Kusal Mendis b Asitha Fernando  0 11 0 0 0.00
Najmul Hossain Shanto run out (Praveen Jayawickrama) 2 11 0 0 18.18
Mominul Haque c Niroshan Dickwella b Kasun Rajitha 0 2 0 0 0.00
Mushfiqur Rahim b Kasun Rajitha 23 39 4 0 58.97
Liton Das c & b Asitha Fernando  52 135 3 0 38.52
Shakib Al Hasan (vc) c Niroshan Dickwella b Asitha Fernando  58 72 7 0 80.56
Mosaddek Hossain lbw b Ramesh Mendis 9 22 1 0 40.91
Taijul Islam lbw b Asitha Fernando  1 10 0 0 10.00
Ebadot Hossain not out 0 5 0 0 0.00
Khaled Ahmed b Asitha Fernando  0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 162/10 (55.3 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-19 (3.2) Mominul Haque, 2-15 (5.1) Tamim Iqbal, 3-19 (7.2) Najmul Hossain Shanto, 4-23 (9.1) Mahmudul Hasan Joy , 5-53 (20.3) Mushfiqur Rahim, 6-156 (47.5) Liton Das, 7-163 (51.1) Shakib Al Hasan (vc), 8-169 (52.2) Taijul Islam, 9-169 (54.1) Mosaddek Hossain, 10-169 (55.3) Khaled Ahmed,

Bowling O M R W Econ
Kasun Rajitha 12 5 40 2 3.33
Asitha Fernando  17.3 5 51 6 2.95
Praveen Jayawickrama 13 0 47 6 3.62
Ramesh Mendis 11 2 20 1 1.82
Dhananjaya de Silva 2 0 10 0 5.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando not out 21 9 3 1 233.33
Dimuth Karunaratne not out 7 9 1 0 77.78


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 28/0 (3 Overs, RR: 9.33)
Bowling O M R W Econ
Taijul Islam 1 0 16 0 16.00
Shakib Al Hasan 1 0 7 0 7.00
Ebadot Hossain 1 0 5 0 5.00



முடிவு – இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<