சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை அணியானது அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் அபார சதங்களோடு வலுப் பெற்றிருக்கின்றது.
>> மழைக்கு மத்தியில் இலங்கை அணியை பலப்படுத்திய தனன்ஞய, மெதிவ்ஸ்
மழையின் குறுக்கீடு காணப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்திற்காக 282 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது நின்ற அஞ்செலோ மெதிவ்ஸ் 58 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று பங்களாதேஷ் அணியினை விட 83 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் – தினேஷ் சந்திமால் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தினை உருவாக்கத் தொடங்கியது. இதனால், இலங்கை அணி பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸ் (365) ஓட்டங்களை மிக விரைவாகத் தாண்டியது.
பின்னர் நான்காம் நாளின் மதியபோசணம், மற்றும் தேநீர் இடைவேளை என போட்டியின் இரு இடைவெளிகளை தாண்டியும் நீடித்த இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்திற்குள் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய 13ஆவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்ய, தினேஷ் சந்திமால் தன்னுடைய 12ஆவது டெஸ்ட் சதத்தினை விளாசியிருந்தார்.
>> தைஜூல் இஸ்லாமிற்கு அபராதம் விதித்த ஐசிசி!
இதனை அடுத்து இன்றைய நாளில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தினேஷ் சந்திமால் சகீப் அல் ஹஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக 256 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த தினேஷ் சந்திமால் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 124 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தினேஷ் சந்திமாலின் விக்கெட்டின் பின்னர் இலங்கை அணி தமது எஞ்சிய விக்கெட்டுக்களை சடுதியாக பறிகொடுத்த போதும், அஞ்செலோ மெதிவ்ஸ் தான் பெற்ற சதம் மூலம் இலங்கை அணியினை பலப்படுத்தியிருந்தார்.
இறுதியில் 165.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 506 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அஞ்செலோ மெதிவ்ஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 145 ஓட்டங்களை எடுத்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சகீப் அல் ஹஸன் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, இபடொட் ஹொசைன் 4 விக்கெட்டுக்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் இலங்கை அணியினை விட 141 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.
தற்போது இலங்கை அணியினை விட 107 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படும் பங்களாதேஷ் அணிக்காக களத்தில் முஷ்பிகுர் ரஹீம் 14 ஓட்டங்களைப் பெற்றும், லிடன் தாஸ் ஒரு ஓட்டத்தினைப் பெற்றும் நம்பிக்கை தருகின்றனர்.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Tamim Iqbal | c Praveen Jayawickrama b Asitha Fernando | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Najmul Hossain Shanto | b Kasun Rajitha | 8 | 21 | 1 | 0 | 38.10 |
Mominul Haque | c Niroshan Dickwella b Asitha Fernando | 9 | 9 | 2 | 0 | 100.00 |
Mushfiqur Rahim | not out | 175 | 355 | 21 | 0 | 49.30 |
Shakib Al Hasan (vc) | lbw b Kasun Rajitha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Liton Das | c Kusal Mendis b Kasun Rajitha | 141 | 246 | 16 | 1 | 57.32 |
Mosaddek Hossain | c Niroshan Dickwella b Kasun Rajitha | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Taijul Islam | c Niroshan Dickwella b Asitha Fernando | 15 | 37 | 0 | 0 | 40.54 |
Khaled Ahmed | c Niroshan Dickwella b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Ebadot Hossain | not out | 0 | 20 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 9 , lb 3 , nb 2, w 3, pen 0) |
Total | 365/9 (116.2 Overs, RR: 3.14) |
Fall of Wickets | 1-1 (0.2) Mahmudul Hasan Joy , 2-6 (1.4) Tamim Iqbal, 3-16 (5.1) Mominul Haque, 4-24 (6.4) Najmul Hossain Shanto, 5-24 (6.5) Shakib Al Hasan (vc), 6-296 (92.1) Liton Das, 7-296 (92.4) Taijul Islam, 8-349 (107.1) Khaled Ahmed, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 28.2 | 7 | 64 | 5 | 2.27 | |
Asitha Fernando | 26 | 2 | 93 | 4 | 3.58 | |
Praveen Jayawickrama | 38 | 9 | 108 | 0 | 2.84 | |
Ramesh Mendis | 14 | 0 | 53 | 0 | 3.79 | |
Dhananjaya de Silva | 6 | 0 | 27 | 0 | 4.50 | |
Dimuth Karunarathne | 4 | 1 | 8 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Najmul Hossain Shanto b Ebadot Hossain | 57 | 91 | 8 | 1 | 62.64 |
Dimuth Karunarathne | b Shakib Al Hasan (vc) | 80 | 155 | 9 | 0 | 51.61 |
Kusal Mendis | lbw b Shakib Al Hasan (vc) | 11 | 49 | 0 | 0 | 22.45 |
Kasun Rajitha | b Ebadot Hossain | 0 | 12 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | not out | 145 | 342 | 12 | 2 | 42.40 |
Dhananjaya de Silva | c Liton Das b Shakib Al Hasan (vc) | 58 | 95 | 9 | 0 | 61.05 |
Dinesh Chandimal | c Tamim Iqbal b Ebadot Hossain | 124 | 219 | 11 | 1 | 56.62 |
Niroshan Dickwella | c Liton Das b Shakib Al Hasan (vc) | 9 | 10 | 1 | 0 | 90.00 |
Ramesh Mendis | lbw b Ebadot Hossain | 10 | 11 | 2 | 0 | 90.91 |
Praveen Jayawickrama | c Liton Das b Shakib Al Hasan (vc) | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | run out (Shakib Al Hasan (vc)) | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Extras | 10 (b 0 , lb 8 , nb 2, w 0, pen 0) |
Total | 506/10 (165.1 Overs, RR: 3.06) |
Fall of Wickets | 1-95 (25.5) Oshada Fernando, 2-139 (43.1) Kusal Mendis, 3-144 (46.2) Kasun Rajitha, 4-164 (55.6) Dimuth Karunarathne, 5-266 (87.5) Dhananjaya de Silva, 6-465 (156.6) Dinesh Chandimal, 7-501 (162.5) Ramesh Mendis, 8-502 (163.3) Praveen Jayawickrama, 9-506 (165.1) Asitha Fernando , 10-482 (192.5) Niroshan Dickwella, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Khaled Ahmed | 23 | 1 | 85 | 0 | 3.70 | |
Ebadot Hossain | 38 | 4 | 148 | 4 | 3.89 | |
Shakib Al Hasan | 40.1 | 11 | 96 | 5 | 2.39 | |
Mosaddek Hossain | 12 | 1 | 38 | 0 | 3.17 | |
Taijul Islam | 49 | 10 | 124 | 0 | 2.53 | |
Mominul Haque | 3 | 0 | 7 | 0 | 2.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | c Kusal Mendis b Asitha Fernando | 15 | 27 | 3 | 0 | 55.56 |
Tamim Iqbal | c Kusal Mendis b Asitha Fernando | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Najmul Hossain Shanto | run out (Praveen Jayawickrama) | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Mominul Haque | c Niroshan Dickwella b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Mushfiqur Rahim | b Kasun Rajitha | 23 | 39 | 4 | 0 | 58.97 |
Liton Das | c & b Asitha Fernando | 52 | 135 | 3 | 0 | 38.52 |
Shakib Al Hasan (vc) | c Niroshan Dickwella b Asitha Fernando | 58 | 72 | 7 | 0 | 80.56 |
Mosaddek Hossain | lbw b Ramesh Mendis | 9 | 22 | 1 | 0 | 40.91 |
Taijul Islam | lbw b Asitha Fernando | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Ebadot Hossain | not out | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Khaled Ahmed | b Asitha Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 162/10 (55.3 Overs, RR: 2.92) |
Fall of Wickets | 1-19 (3.2) Mominul Haque, 2-15 (5.1) Tamim Iqbal, 3-19 (7.2) Najmul Hossain Shanto, 4-23 (9.1) Mahmudul Hasan Joy , 5-53 (20.3) Mushfiqur Rahim, 6-156 (47.5) Liton Das, 7-163 (51.1) Shakib Al Hasan (vc), 8-169 (52.2) Taijul Islam, 9-169 (54.1) Mosaddek Hossain, 10-169 (55.3) Khaled Ahmed, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 12 | 5 | 40 | 2 | 3.33 | |
Asitha Fernando | 17.3 | 5 | 51 | 6 | 2.95 | |
Praveen Jayawickrama | 13 | 0 | 47 | 6 | 3.62 | |
Ramesh Mendis | 11 | 2 | 20 | 1 | 1.82 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 10 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | not out | 21 | 9 | 3 | 1 | 233.33 |
Dimuth Karunaratne | not out | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 28/0 (3 Overs, RR: 9.33) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Taijul Islam | 1 | 0 | 16 | 0 | 16.00 | |
Shakib Al Hasan | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Ebadot Hossain | 1 | 0 | 5 | 0 | 5.00 |
போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<