Home Tamil மழைக்கு மத்தியில் இலங்கை அணியை பலப்படுத்திய தனன்ஞய, மெதிவ்ஸ்

மழைக்கு மத்தியில் இலங்கை அணியை பலப்படுத்திய தனன்ஞய, மெதிவ்ஸ்

1271

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணிக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் அரைச்சதங்களுடன் பெறுமதி சேர்த்திருக்கின்றனர்.

>>திமுத், ஓசதவின் அரைச்சதங்களோடு வலுப்பெறும் இலங்கை கிரிக்கெட் அணி

டாக்காவில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸின் (365) பின்னர்  தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்த இலங்கை அணி 143 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் திமுத் கருணாரத்ன 70 ஓட்டங்களுடனும், Night Watchman துடுப்பாட்டவீரரான கசுன் ராஜித ஓட்டமேதுமின்றியும் காணப்பட்டிருந்தனர்.

இன்று (25) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷினை விட 222 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு மழையின் நெருக்கடி உருவாகியிருந்ததோடு, இன்றைய நாளில் 51 ஓவர்களை மாத்திரமே வீச முடியுமாகவும் காணப்பட்டிருந்தது.

மூன்றாம் நாளில் இலங்கையின் முதல் விக்கெட்டாக கசுன் ராஜித ஓட்டமேதுமின்றி இபடொட் ஹொசைனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர்  திமுத் கருணாரட்ன மூன்றாம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக தனது விக்கெட்டினை சகீப் அல் ஹசனின் பந்துவீச்சில் பறிகொடுத்திருந்ததோடு அவர் 9 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>ஆஸி – இலங்கை தொடர் நடைபெறுவதில் சிக்கல்?

பின்னர் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றுக்கு வித்திட தொடங்கியிருந்ததோடு, இந்த இணைப்பாட்டம் மூன்றாம் நாளின் மதிய போசணம் வரை நீடித்தது.

மூன்றாம் நாளின் மதிய போசணத்திற்குப் பின்னர் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால், தேநீர் இடைவேளையினைத் தொடர்ந்தே ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்த ஆட்டத்தில் தனன்ஞய டி சில்வா தன்னுடைய 10ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினைப் பதிவு செய்தார்.

இதனையடுத்து தனன்ஞய டி சில்வாவின் விக்கெட் சகீப் அல் ஹசனின் பந்துவீச்சில் பறிபோனது. விக்கெட்காப்பாளர் லிடன் தாஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 9 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்திருந்தார். அத்துடன் தனன்ஞய டி சில்வா இலங்கை அணியின் 5ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களை அஞ்சலோ மெதிவ்ஸ் உடன் இணைந்து பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனன்ஞய டி சில்வாவின் பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் உம் அரைச்சதம் பூர்த்தி செய்ய, இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையினால் தடைப்படும் போது 97 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 282 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>IPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்ற குஜராத்!

பங்களாதேஷ் அணியினை விட தற்போது இலங்கை அணி 83 ஓட்டங்களால் பின்தங்கியிருக்க, களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் அஞ்செலோ மெதிவ்ஸ் 58 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.

இன்றைய நாளுக்கான பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சகீப் அல் ஹஸன் 2 விக்கெட்டுக்களையும், இபடொட் ஹொசைன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
506/10 (165.1) & 28/0 (3)

Bangladesh
365/9 (116.2) & 162/10 (55.3)

Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Kasun Rajitha 0 2 0 0 0.00
Tamim Iqbal c Praveen Jayawickrama b Asitha Fernando  0 4 0 0 0.00
Najmul Hossain Shanto b Kasun Rajitha 8 21 1 0 38.10
Mominul Haque c Niroshan Dickwella b Asitha Fernando  9 9 2 0 100.00
Mushfiqur Rahim not out 175 355 21 0 49.30
Shakib Al Hasan (vc) lbw b Kasun Rajitha 0 1 0 0 0.00
Liton Das c Kusal Mendis b Kasun Rajitha 141 246 16 1 57.32
Mosaddek Hossain c Niroshan Dickwella b Kasun Rajitha 0 3 0 0 0.00
Taijul Islam c Niroshan Dickwella b Asitha Fernando  15 37 0 0 40.54
Khaled Ahmed c Niroshan Dickwella b Asitha Fernando  0 2 0 0 0.00
Ebadot Hossain not out 0 20 0 0 0.00


Extras 17 (b 9 , lb 3 , nb 2, w 3, pen 0)
Total 365/9 (116.2 Overs, RR: 3.14)
Fall of Wickets 1-1 (0.2) Mahmudul Hasan Joy , 2-6 (1.4) Tamim Iqbal, 3-16 (5.1) Mominul Haque, 4-24 (6.4) Najmul Hossain Shanto, 5-24 (6.5) Shakib Al Hasan (vc), 6-296 (92.1) Liton Das, 7-296 (92.4) Taijul Islam, 8-349 (107.1) Khaled Ahmed,

Bowling O M R W Econ
Kasun Rajitha 28.2 7 64 5 2.27
Asitha Fernando  26 2 93 4 3.58
Praveen Jayawickrama 38 9 108 0 2.84
Ramesh Mendis 14 0 53 0 3.79
Dhananjaya de Silva 6 0 27 0 4.50
Dimuth Karunarathne 4 1 8 0 2.00
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Najmul Hossain Shanto b Ebadot Hossain 57 91 8 1 62.64
Dimuth Karunarathne b Shakib Al Hasan (vc) 80 155 9 0 51.61
Kusal Mendis lbw b Shakib Al Hasan (vc) 11 49 0 0 22.45
Kasun Rajitha b Ebadot Hossain 0 12 0 0 0.00
Angelo Mathews not out 145 342 12 2 42.40
Dhananjaya de Silva c Liton Das b Shakib Al Hasan (vc) 58 95 9 0 61.05
Dinesh Chandimal c Tamim Iqbal b Ebadot Hossain 124 219 11 1 56.62
Niroshan Dickwella c Liton Das b Shakib Al Hasan (vc) 9 10 1 0 90.00
Ramesh Mendis lbw b Ebadot Hossain 10 11 2 0 90.91
Praveen Jayawickrama c Liton Das b Shakib Al Hasan (vc) 0 3 0 0 0.00
Asitha Fernando  run out (Shakib Al Hasan (vc)) 2 6 0 0 33.33


Extras 10 (b 0 , lb 8 , nb 2, w 0, pen 0)
Total 506/10 (165.1 Overs, RR: 3.06)
Fall of Wickets 1-95 (25.5) Oshada Fernando, 2-139 (43.1) Kusal Mendis, 3-144 (46.2) Kasun Rajitha, 4-164 (55.6) Dimuth Karunarathne, 5-266 (87.5) Dhananjaya de Silva, 6-465 (156.6) Dinesh Chandimal, 7-501 (162.5) Ramesh Mendis, 8-502 (163.3) Praveen Jayawickrama, 9-506 (165.1) Asitha Fernando , 10-482 (192.5) Niroshan Dickwella,

Bowling O M R W Econ
Khaled Ahmed 23 1 85 0 3.70
Ebadot Hossain 38 4 148 4 3.89
Shakib Al Hasan 40.1 11 96 5 2.39
Mosaddek Hossain 12 1 38 0 3.17
Taijul Islam 49 10 124 0 2.53
Mominul Haque 3 0 7 0 2.33
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Kusal Mendis b Asitha Fernando  15 27 3 0 55.56
Tamim Iqbal c Kusal Mendis b Asitha Fernando  0 11 0 0 0.00
Najmul Hossain Shanto run out (Praveen Jayawickrama) 2 11 0 0 18.18
Mominul Haque c Niroshan Dickwella b Kasun Rajitha 0 2 0 0 0.00
Mushfiqur Rahim b Kasun Rajitha 23 39 4 0 58.97
Liton Das c & b Asitha Fernando  52 135 3 0 38.52
Shakib Al Hasan (vc) c Niroshan Dickwella b Asitha Fernando  58 72 7 0 80.56
Mosaddek Hossain lbw b Ramesh Mendis 9 22 1 0 40.91
Taijul Islam lbw b Asitha Fernando  1 10 0 0 10.00
Ebadot Hossain not out 0 5 0 0 0.00
Khaled Ahmed b Asitha Fernando  0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 162/10 (55.3 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-19 (3.2) Mominul Haque, 2-15 (5.1) Tamim Iqbal, 3-19 (7.2) Najmul Hossain Shanto, 4-23 (9.1) Mahmudul Hasan Joy , 5-53 (20.3) Mushfiqur Rahim, 6-156 (47.5) Liton Das, 7-163 (51.1) Shakib Al Hasan (vc), 8-169 (52.2) Taijul Islam, 9-169 (54.1) Mosaddek Hossain, 10-169 (55.3) Khaled Ahmed,

Bowling O M R W Econ
Kasun Rajitha 12 5 40 2 3.33
Asitha Fernando  17.3 5 51 6 2.95
Praveen Jayawickrama 13 0 47 6 3.62
Ramesh Mendis 11 2 20 1 1.82
Dhananjaya de Silva 2 0 10 0 5.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando not out 21 9 3 1 233.33
Dimuth Karunaratne not out 7 9 1 0 77.78


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 28/0 (3 Overs, RR: 9.33)
Bowling O M R W Econ
Taijul Islam 1 0 16 0 16.00
Shakib Al Hasan 1 0 7 0 7.00
Ebadot Hossain 1 0 5 0 5.00



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<