சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி திமுத் கருணாரட்ன மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களுடன் சமநிலை அடைந்திருக்கின்றது.
முஷ்பிகுர் ரஹீமின் சதத்துடன் வலுப்பெற்றிருக்கும் பங்களாதேஷ் அணி
சட்டோக்ரம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று (18) நிறைவுக்கு வந்தது.
போட்டியின் நான்காம் நாள் நிறைவுக்கு வந்த போது பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் (465) துடுப்பாட்டத்தை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி, 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த திமுத் கருணாரட்ன 18 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார்.
இன்று போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாளில், பங்களாதேஷை விட 29 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதனால் இலங்கை அணி பங்களாதேஷை விட துரித கதியில் முன்னிலை பெறத் தொடங்கியது.
பின்னர் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து இலங்கையின் மூன்றாம் விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த குசல் மெண்டிஸ் தைஜூல் இஸ்லாமின் பந்துவீச்சில் ஆட்டமிழக்கும் போது 43 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 48 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தின் மதிய போசணத்திற்கு பின்னர் இலங்கை அணி அஞ்சலோ மெதிவ்ஸின் விக்கெட்டினை அவர் ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் பறிகொடுத்த போதும் திமுத் கருணாரட்ன அரைச்சதம் விளாசி அணியினைப் பலப்படுத்தினார். தொடர்ந்து அவரின் விக்கெட் மீண்டும் சிறப்பாக பந்துவீசிய தைஜூல் இஸ்லாமின் பந்துவீச்சில் பிடியெடுப்பு காரணமாக பறிபோனது. திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்கும் போது தன்னுடைய 28ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 2 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனன்ஞய டி சில்வாவும் 33 ஓட்டங்களுடன் அணிக்கு பங்களிப்பு வழங்கினார். தனன்ஞய டி சில்வாவினை அடுத்து நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இலங்கை அணியின் 7ஆம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கத் தொடங்கினர்.
உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்
போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் வரை நீடித்த இந்த இணைப்பாட்டத்துடன், போட்டியும் இலங்கை அணி பங்களாதேஷை விட 192 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற போது சமநிலை அடைந்தது.
நிரோஷன் டிக்வெல்ல – தினேஷ் சந்திமால் ஜோடி 99 ஓட்டங்கள் வரை இலங்கை அணியின் 7ஆம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, இதில் நிரோஷன் டிக்வெல்ல தன்னுடைய 20ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 6 பெளண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்திருக்க, தினேஷ் சந்திமால் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, சகீப் அல் ஹஸன் ஒரு விக்கெட்டினைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக அஞ்செலோ மெதிவ்ஸ் இப்போட்டியில் பெற்ற 199 ஓட்டங்களுக்காக தெரிவாகினார்.
இதேநேரம் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (23) டாக்காவின் மிர்பூர் நகரில் ஆரம்பமாகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Liton Das b Nayeem Hasan | 36 | 76 | 3 | 1 | 47.37 |
Dimuth Karunaratne | lbw b Nayeem Hasan | 9 | 17 | 0 | 0 | 52.94 |
Kusal Mendis | c Nayeem Hasan b Taijul Islam | 54 | 131 | 3 | 0 | 41.22 |
Angelo Mathews | c Shakib Al Hasan (vc) b Nayeem Hasan | 199 | 397 | 19 | 1 | 50.13 |
Dhananjaya de Silva | c Mahmudul Hasan Joy b Shakib Al Hasan (vc) | 6 | 27 | 0 | 0 | 22.22 |
Dinesh Chandimal | lbw b Nayeem Hasan | 66 | 148 | 2 | 3 | 44.59 |
Niroshan Dickwella | b Nayeem Hasan | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Ramesh Mendis | b Shakib Al Hasan (vc) | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Lasith Embuldeniya | lbw b Shakib Al Hasan (vc) | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Vishwa Fernando | not out | 17 | 84 | 3 | 0 | 20.24 |
Asitha Fernando | b Nayeem Hasan | 1 | 27 | 0 | 0 | 3.70 |
Extras | 5 (b 4 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 397/10 (153 Overs, RR: 2.59) |
Fall of Wickets | 1-23 (7.5) Dimuth Karunaratne, 2-66 (21.2) Oshada Fernando, 3-158 (56.1) Kusal Mendis, 4-183 (65.2) Dhananjaya de Silva, 5-319 (113.1) Dinesh Chandimal, 6-323 (113.5) Niroshan Dickwella, 7-328 (116.2) Ramesh Mendis, 8-328 (116.3) Lasith Embuldeniya, 9-390 (148.5) Asitha Fernando , 10-397 (152.6) Angelo Mathews, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 20 | 3 | 55 | 0 | 2.75 | |
Taskin Ahmed | 16 | 1 | 66 | 0 | 4.12 | |
Nayeem Hasan | 30 | 4 | 105 | 6 | 3.50 | |
Taijul Islam | 48 | 12 | 107 | 1 | 2.23 | |
Shakib Al Hasan (vc) | 39 | 12 | 60 | 3 | 1.54 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | c Niroshan Dickwella b Asitha Fernando | 58 | 142 | 9 | 0 | 40.85 |
Tamim Iqbal | b Kasun Rajitha | 133 | 218 | 15 | 0 | 61.01 |
Najmul Hossain Shanto | c Niroshan Dickwella b Kasun Rajitha | 1 | 22 | 0 | 0 | 4.55 |
Mominul Haque | b Kasun Rajitha | 2 | 19 | 0 | 0 | 10.53 |
Mushfiqur Rahim | b Lasith Embuldeniya | 105 | 282 | 4 | 0 | 37.23 |
Liton Das | c Niroshan Dickwella b Kasun Rajitha | 88 | 189 | 10 | 0 | 46.56 |
Shakib Al Hasan (vc) | c Niroshan Dickwella b Asitha Fernando | 26 | 44 | 3 | 0 | 59.09 |
Nayeem Hasan | c Kusal Mendis b Dhananjaya de Silva | 9 | 53 | 0 | 0 | 16.98 |
Taijul Islam | c Chamika Karunaratne b Asitha Fernando | 20 | 45 | 3 | 0 | 44.44 |
Shoriful Islam | retired | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Khaled Ahmed | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 20 (b 4 , lb 8 , nb 8, w 0, pen 0) |
Total | 465/10 (170.1 Overs, RR: 2.73) |
Fall of Wickets | 1-162 (48.5) Mahmudul Hasan Joy , 2-172 (54.4) Najmul Hossain Shanto, 3-184 (60.5) Mominul Haque, 4-385 (134.1) Liton Das, 5-385 (134.2) Tamim Iqbal, 6-421 (146.1) Shakib Al Hasan (vc), 7-439 (157.1) Mushfiqur Rahim, 8-450 (163.6) Nayeem Hasan, 9-465 (169.2) Taijul Islam, 10-465 (170.1) Shoriful Islam, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 8 | 0 | 42 | 0 | 5.25 | |
Asitha Fernando | 26 | 4 | 72 | 3 | 2.77 | |
Ramesh Mendis | 45 | 10 | 119 | 0 | 2.64 | |
Lasith Embuldeniya | 47 | 9 | 104 | 1 | 2.21 | |
Dhananjaya de Silva | 19 | 2 | 48 | 1 | 2.53 | |
Kasun Rajitha | 24.1 | 6 | 60 | 4 | 2.49 | |
Kusal Mendis | 1 | 0 | 8 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | run out (Taijul Islam) | 19 | 36 | 3 | 0 | 52.78 |
Dimuth Karunaratne | c Mominul Haque b Taijul Islam | 52 | 138 | 2 | 0 | 37.68 |
Lasith Embuldeniya | b Taijul Islam | 2 | 22 | 0 | 0 | 9.09 |
Kusal Mendis | b Taijul Islam | 48 | 43 | 8 | 1 | 111.63 |
Angelo Mathews | c & b Taijul Islam | 0 | 15 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c Mushfiqur Rahim b Shakib Al Hasan (vc) | 33 | 60 | 3 | 1 | 55.00 |
Dinesh Chandimal | not out | 39 | 135 | 4 | 1 | 28.89 |
Niroshan Dickwella | not out | 61 | 96 | 0 | 0 | 63.54 |
Extras | 6 (b 0 , lb 2 , nb 4, w 0, pen 0) |
Total | 260/6 (90.1 Overs, RR: 2.88) |
Fall of Wickets | 1-36 (11.5) Oshada Fernando, 2-39 (17.1) Lasith Embuldeniya, 3-106 (31.2) Kusal Mendis, 4-110 (35.6) Angelo Mathews, 5-143 (47.1) Dimuth Karunaratne, 6-161 (56.2) Dhananjaya de Silva, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nayeem Hasan | 23 | 5 | 79 | 0 | 3.43 | |
Khaled Ahmed | 7 | 2 | 37 | 0 | 5.29 | |
Shakib Al Hasan (vc) | 25 | 5 | 58 | 1 | 2.32 | |
Taijul Islam | 34 | 9 | 82 | 4 | 2.41 | |
Najmul Hossain Shanto | 1 | 0 | 2 | 0 | 2.00 | |
Mehidy Hasan Miraz | 0.1 | 0 | 0 | 0 | 0.00 |
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<