Home Tamil இலங்கைக்கு எதிராக அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிராக அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய பங்களாதேஷ்

307

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், பங்களாதேஷ் அணி தமிம் இக்பாலின் அபார சதத்தோடு வலுப்பெற்றுள்ளது.

>>மெதிவ்ஸின் அபார துடுப்பாட்டத்துடன் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

சட்டோக்ராம் நகரில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்த போது, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (397) அடுத்து பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 76 ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்கள் எதனையும் இழக்காத நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த தமிம் இக்பால் 35 ஓட்டங்களையும், மஹ்முதுல் ஹஸன் ஜோய் 31 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று தொடர்ந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பவீரர்களாக இருந்த தமிம் இக்பால் மற்றும் மஹ்முதுல் ஹஸன் ஜோய் ஆகிய இருவரும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 162 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மூன்றாம் நாளின் மதிய போசணத்தின் பின்னரும் நீடித்த இந்த இணைப்பாட்டத்தின் முடிவாக ஆட்டமிழந்த மஹ்முதுல் ஹஸன் ஜோய் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்துடன் 58 ஓட்டங்கள் பெற்று, அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மஹ்முதுல் ஹஸனின் விக்கெட்டின் பின்னர், விஷ்வ பெர்னாண்டோவின் பிரதியீட்டு வீரராக உள்வாங்கப்பட்ட கசுன் ராஜித இரண்டு விக்கெட்டுக்களை துரித கதியில் கைப்பற்றிய போதும், தமிம் இக்பால் தன்னுடைய 10 ஆவது டெஸ்ட் சதத்துடன் தனது தரப்பிற்கு பெறுமதி சேர்த்தார்.

இதன் பின்னர் உபாதை காரணமாக தமிம் இக்பால் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்ததோடு, அவர் வெளியேறும் போது 15 பெளண்டரிகள் அடங்கலாக 133 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிம் இக்பாலின் பின்னர் பங்களாதேஷ் அணிக்காக களம் வந்த முஷ்பிகுர் ரஹீம் மற்றும் லிடன் தாஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்ததோடு, அவர்கள் மூன்றாம் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணியினை சிறந்த நிலைக்கும் எடுத்துச் சென்றிருந்தனர்.

அந்தவகையில் பங்களாதேஷ் அணி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 318 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

>>கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ தயார் என்கிறது பாகிஸ்தான்

இலங்கை அணியினை விட 79 ஓட்டங்கள் மாத்திரமே தற்போது பின்தங்கியிருக்கும் பங்களாதேஷ் அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் லிடன் தாஸ் 54 ஓட்டங்களை எடுத்திருக்க, முஷ்பிகுர் ரஹீம் 53 ஓட்டங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்


Result

Match drawn

Sri Lanka
397/10 (153) & 260/6 (90.1)

Bangladesh
465/10 (170.1)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Liton Das b Nayeem Hasan 36 76 3 1 47.37
Dimuth Karunaratne lbw b Nayeem Hasan 9 17 0 0 52.94
Kusal Mendis c Nayeem Hasan b Taijul Islam 54 131 3 0 41.22
Angelo Mathews c Shakib Al Hasan (vc) b Nayeem Hasan 199 397 19 1 50.13
Dhananjaya de Silva c Mahmudul Hasan Joy  b Shakib Al Hasan (vc) 6 27 0 0 22.22
Dinesh Chandimal lbw b Nayeem Hasan 66 148 2 3 44.59
Niroshan Dickwella b Nayeem Hasan 3 3 0 0 100.00
Ramesh Mendis b Shakib Al Hasan (vc) 1 8 0 0 12.50
Lasith Embuldeniya lbw b Shakib Al Hasan (vc) 0 1 0 0 0.00
Vishwa Fernando not out 17 84 3 0 20.24
Asitha Fernando  b Nayeem Hasan 1 27 0 0 3.70


Extras 5 (b 4 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 397/10 (153 Overs, RR: 2.59)
Fall of Wickets 1-23 (7.5) Dimuth Karunaratne, 2-66 (21.2) Oshada Fernando, 3-158 (56.1) Kusal Mendis, 4-183 (65.2) Dhananjaya de Silva, 5-319 (113.1) Dinesh Chandimal, 6-323 (113.5) Niroshan Dickwella, 7-328 (116.2) Ramesh Mendis, 8-328 (116.3) Lasith Embuldeniya, 9-390 (148.5) Asitha Fernando , 10-397 (152.6) Angelo Mathews,

Bowling O M R W Econ
Shoriful Islam 20 3 55 0 2.75
Taskin Ahmed 16 1 66 0 4.12
Nayeem Hasan 30 4 105 6 3.50
Taijul Islam 48 12 107 1 2.23
Shakib Al Hasan (vc) 39 12 60 3 1.54
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Niroshan Dickwella b Asitha Fernando  58 142 9 0 40.85
Tamim Iqbal b Kasun Rajitha 133 218 15 0 61.01
Najmul Hossain Shanto c Niroshan Dickwella b Kasun Rajitha 1 22 0 0 4.55
Mominul Haque b Kasun Rajitha 2 19 0 0 10.53
Mushfiqur Rahim b Lasith Embuldeniya 105 282 4 0 37.23
Liton Das c Niroshan Dickwella b Kasun Rajitha 88 189 10 0 46.56
Shakib Al Hasan (vc) c Niroshan Dickwella b Asitha Fernando  26 44 3 0 59.09
Nayeem Hasan c Kusal Mendis b Dhananjaya de Silva 9 53 0 0 16.98
Taijul Islam c Chamika Karunaratne b Asitha Fernando  20 45 3 0 44.44
Shoriful Islam retired 3 11 0 0 27.27
Khaled Ahmed not out 0 4 0 0 0.00


Extras 20 (b 4 , lb 8 , nb 8, w 0, pen 0)
Total 465/10 (170.1 Overs, RR: 2.73)
Fall of Wickets 1-162 (48.5) Mahmudul Hasan Joy , 2-172 (54.4) Najmul Hossain Shanto, 3-184 (60.5) Mominul Haque, 4-385 (134.1) Liton Das, 5-385 (134.2) Tamim Iqbal, 6-421 (146.1) Shakib Al Hasan (vc), 7-439 (157.1) Mushfiqur Rahim, 8-450 (163.6) Nayeem Hasan, 9-465 (169.2) Taijul Islam, 10-465 (170.1) Shoriful Islam,

Bowling O M R W Econ
Vishwa Fernando 8 0 42 0 5.25
Asitha Fernando  26 4 72 3 2.77
Ramesh Mendis 45 10 119 0 2.64
Lasith Embuldeniya 47 9 104 1 2.21
Dhananjaya de Silva 19 2 48 1 2.53
Kasun Rajitha 24.1 6 60 4 2.49
Kusal Mendis 1 0 8 0 8.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando run out (Taijul Islam) 19 36 3 0 52.78
Dimuth Karunaratne c Mominul Haque b Taijul Islam 52 138 2 0 37.68
Lasith Embuldeniya b Taijul Islam 2 22 0 0 9.09
Kusal Mendis b Taijul Islam 48 43 8 1 111.63
Angelo Mathews c & b Taijul Islam 0 15 0 0 0.00
Dhananjaya de Silva c Mushfiqur Rahim b Shakib Al Hasan (vc) 33 60 3 1 55.00
Dinesh Chandimal not out 39 135 4 1 28.89
Niroshan Dickwella not out 61 96 0 0 63.54


Extras 6 (b 0 , lb 2 , nb 4, w 0, pen 0)
Total 260/6 (90.1 Overs, RR: 2.88)
Fall of Wickets 1-36 (11.5) Oshada Fernando, 2-39 (17.1) Lasith Embuldeniya, 3-106 (31.2) Kusal Mendis, 4-110 (35.6) Angelo Mathews, 5-143 (47.1) Dimuth Karunaratne, 6-161 (56.2) Dhananjaya de Silva,

Bowling O M R W Econ
Nayeem Hasan 23 5 79 0 3.43
Khaled Ahmed 7 2 37 0 5.29
Shakib Al Hasan (vc) 25 5 58 1 2.32
Taijul Islam 34 9 82 4 2.41
Najmul Hossain Shanto 1 0 2 0 2.00
Mehidy Hasan Miraz 0.1 0 0 0 0.00



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<