Home Tamil ஆறுதல் வெற்றியுடன் T20I தொடரை நிறைவு செய்த இலங்கை

ஆறுதல் வெற்றியுடன் T20I தொடரை நிறைவு செய்த இலங்கை

405

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்தாவதும், இறுதியுமான T20I போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

பல மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணி

மேலும் இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட் அணிக்கு தொடரில் கிடைத்த ஆறுதல் வெற்றியாக அமைந்திருப்பதுடன், 4-1 என்கிற முன்னிலையுடன் தொடரினை அவுஸ்திரேலிய அணி நிறைவு செய்து கொள்கின்றது.

முன்னதாக மெல்பர்ன் நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது.

அதேநேரம் இந்த தொடரில் ஏற்கனவே 4-0 என முன்னிலை பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி, இப்போட்டிக்காக மாற்றங்கள் இன்றி களமிறங்க இலங்கை அணி ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்து மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது.

அதன்படி இன்றைய போட்டிக்கான இலங்கை அணி மூலம் ஜனித் லியனகே மற்றும் கமில் மிஷார ஆகியோர் சர்வதேச அறிமுகம் பெற, சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரமவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை அணி

பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார

அவுஸ்திரேலிய அணி

ஆரோன் பின்ச்(அணித்தலைவர்), பென் மெக்டோர்மெட், ஜோஸ் இங்கிலீஸ், டேனியல் சேம்ஸ், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், கேன் ரிச்சர்ட்ஸன், ஜை ரிச்சர்ட்ஸன், அஸ்டன் ஏகார், அடம் ஷம்பா

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, தொடக்கத்தில் இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் தடுமாற்றம் காட்டியது.

அதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த அதன் தலைவர் ஆரோன் பின்ச் வெறும் 8 ஓட்டங்களுடன் துஷ்மன்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், ஏனைய ஆரம்பவீரர் பென் மெக்டெர்மோன்ட்டின் விக்கெட்டும் அவர் 3 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பிரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் பறிபோனது.

இதனையடுத்து கிளன் மெக்ஸ்வெல், ஜோஸ் இங்கிலீஷ் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய வீரர்களும் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர். இதனால், ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>>டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் சம்பியனாக முடிசூடியது ஜப்னா!

எனினும் இறுதிக்கட்டத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்த மெதிவ் வேட், அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்கள் பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் மெதிவ் வேட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லஹிரு குமார மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி, தொடக்கத்தில் தடுமாற்றத்தினை காட்டியிருந்தது.

இலங்கை அணிக்காக ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த பெதும் நிஸ்ஸங்க 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன் பின்னர் புதிய வீரராக களம் வந்த கமில் மிஷார ஒரு ஓட்டத்துடன் துரதிஷ்டவசமான ரன் அவுட்டுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சரித் அசலன்க சிறு அதிரடி ஒன்றினை வெளிப்படுத்திய போதும் அது நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. இதனையடுத்து புதிய வீரராக வந்த ஜனித் லியனகேவும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் காட்டியது. எனினும், ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் பொறுப்பான முறையில் ஆடியதுடன், ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக 83 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

பின்னர் இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு இலங்கை அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்டளுடன் அடைந்தது.

>>உபாதை காரணமாக பல மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் அவிஷ்க!

இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த குசல் மெண்டிஸ், தன்னுடைய 6ஆவது T20I அரைச்சதத்துடன் 58 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், தசுன் ஷானக்க 31 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் தெரிவாக, தொடர் நாயகன் விருது அவுஸ்திரேலிய வீரரான கிளன் மெக்ஸ்வெலிற்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
155/5 (19.4)

Australia
154/6 (20)

Batsmen R B 4s 6s SR
Aaron Finch c & b 8 12 0 0 66.67
Ben McDermott c & b 3 13 0 0 23.08
Josh Inglis c & b 23 20 0 0 115.00
Glenn Maxwell c & b 29 21 0 0 138.10
Marcus Stoinis c & b 17 10 0 0 170.00
Matthew Wade not out 43 27 0 0 159.26
Daniel Sams c & b 18 15 0 0 120.00
Ashton Agar not out 4 2 0 0 200.00


Extras 9 (b 0 , lb 2 , nb 0, w 7, pen 0)
Total 154/6 (20 Overs, RR: 7.7)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 27 0 6.75
Lahiru Kumara 4 0 34 2 8.50
Dushmantha Chameera 4 0 30 2 7.50
Praveen Jayawickrama 4 0 29 1 7.25
Chamika Karunaratne 4 0 32 1 8.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c & b 13 8 0 0 162.50
Kusal Mendis not out 69 58 0 0 118.97
Kamil Mishara  run out () 1 3 0 0 33.33
Charith Asalanka b 20 9 0 0 222.22
Janith Liyanage  run out () 8 9 0 0 88.89
Dasun Shanaka b 35 31 0 0 112.90
Chamika Karunaratne not out 1 1 0 0 100.00


Extras 8 (b 1 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 155/5 (19.4 Overs, RR: 7.88)
Bowling O M R W Econ
Marcus Stoinis 2 0 13 0 6.50
Daniel Sams 2 0 21 0 10.50
Jhye Richardson 4 0 38 0 9.50
Kane Richardson 3.4 0 28 2 8.24
Ashton Agar 4 0 19 1 4.75
Adam Zampa 4 0 33 0 8.25



முடிவு – இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<