சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
அத்துடன் இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்டT20I தொடரினையும் இன்னும் 2 போட்டிகள் மீதமிருக்க 3-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
போராட்டத்திற்குப் பின் சுபர் ஓவரில் போட்டியியை பறிகொடுத்த இலங்கை
முன்னதாக கென்பர்ராவில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.
இந்த T20I தொடரில் ஏற்கனவே 2-0 என முன்னிலை பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி, இப்போட்டிக்கான தமது அணியில் டேனியல் சேம்ஸ், மிச்சல் ஸ்டார்க் மற்றும் அஸ்டன் ஏகார் ஆகியோரினை இணைத்திருக்க, இலங்கை அணி கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான வனிந்து ஹஸரங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வன்டர்செய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
இலங்கை அணி
பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணத்திலக்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (அணித்தலைவர்), ஜெப்ரி வன்டர்சே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, நுவன் துஷார
அவுஸ்திரேலிய அணி
ஆரோன் பின்ச்(அணித்தலைவர்), பென் மெக்டோர்மெட், ஜோஸ் இங்கிலீஸ், டேனியல் சேம்ஸ், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், மிச்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், அஸ்டன் ஏகார், ஜோஸ் ஹேசல்வூட்
பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய தமது முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பத்தினை இலங்கை அணிக்கு, ஆரம்பவீரர்களில் ஒருவராக களம் வந்திருந்த தனுஷ்க குணத்திலக்க மீண்டுமொரு தடவை மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஏமாற்றினார். குணத்திலக்க வெறும் 9 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறினார்.
தனுஷ்க குணத்திலக்கவின் பின்னர் புதிய வீரர்களாக களம் வந்த சரித் அசலன்க (6) மற்றும் குசல் மெண்டிஸ் (4) ஆகியோரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதன் பின்னர், கடந்த போட்டியில் அரைச்சதம் பெற்ற ஆரம்பவீரர் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டும் அவர் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பறிபோனது. இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
சாமிக்க கருணாரத்னவை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர், நிதான இணைப்பாட்டம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்ததோடு அணியினை சரிவிலிருந்தும் சற்று மீட்டெடுத்தனர். 47 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இரு வீரர்களினதும் இணைப்பாட்டம், தினேஷ் சந்திமாலின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. கேன் ரிச்சர்ட்ஸனின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் ஒரு பௌண்டரி அடங்கலாக 25 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதனையடுத்து தசுன் ஷானக்கவின் ஆறுதல் ஆட்டத்தோடு இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க 38 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் கேன் ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க அஸ்டன் ஏகார், ஜோஸ் ஹேசல்வூட் மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 122 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத்திலேயே, மகீஷ் தீக்ஷன நெருக்கடி உருவாக்கியிருந்ததோடு ஓரிரு பிடியெடுப்பு வாய்ப்புக்களும் தவறவிடப்பட்டிருந்தன.
எனினும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களுடன் அடைந்தது.
அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்த துடுப்பாட்டவீரர்களில் கிளன் மெக்ஸ்வெல் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றிருக்க அணித்தலைவர் ஆரோன் பின்ச் 35 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, ஜெப்ரி வன்டர்செய் ஒரு விக்கெட்டினைச் சுருட்டியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்ஸனிற்கு வழங்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக இரு அணிகளும் இந்த T20I தொடரில் விளையாடவுள்ள, நான்காவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) மெல்பர்ன் நகரில் நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Daniel Sams b Glenn Maxwell | 16 | 21 | 0 | 0 | 76.19 |
Dhanushka Gunathilake | c Josh Hazlewood, b Kane Richardson | 9 | 5 | 0 | 0 | 180.00 |
Charith Asalanka | c Matthew Wade b Kane Richardson | 6 | 4 | 0 | 0 | 150.00 |
Kusal Mendis | c & b | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dinesh Chandimal | b Kane Richardson | 25 | 29 | 0 | 0 | 86.21 |
Dasun Shanaka | not out | 39 | 38 | 0 | 0 | 102.63 |
Chamika Karunaratne | c Josh Inglis b Josh Hazlewood, | 8 | 11 | 0 | 0 | 72.73 |
Dushmantha Chameera | not out | 5 | 2 | 0 | 0 | 250.00 |
Extras | 9 (b 4 , lb 1 , nb 0, w 4, pen 0) |
Total | 121/6 (20 Overs, RR: 6.05) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 4 | 0 | 30 | 0 | 7.50 | |
Josh Hazlewood, | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Kane Richardson | 4 | 0 | 21 | 3 | 5.25 | |
Daniel Sams | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Ashton Agar | 4 | 0 | 14 | 1 | 3.50 | |
Glenn Maxwell | 1 | 0 | 3 | 1 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben McDermott | c Charith Asalanka b Maheesh Theekshana | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ashton Agar | lbw b Maheesh Theekshana | 13 | 13 | 0 | 0 | 100.00 |
Aaron Finch | c Charith Asalanka b Jeffery Vandersay | 35 | 36 | 0 | 0 | 97.22 |
Glenn Maxwell | c Kusal Mendis b Maheesh Theekshana | 39 | 26 | 0 | 0 | 150.00 |
Josh Inglis | not out | 21 | 18 | 0 | 0 | 116.67 |
Marcus Stoinis | not out | 12 | 8 | 0 | 0 | 150.00 |
Extras | 4 (b 0 , lb 3 , nb 1, w 0, pen 0) |
Total | 124/4 (16.5 Overs, RR: 7.37) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 24 | 3 | 6.00 | |
Nuwan Thushara | 1.1 | 0 | 10 | 0 | 9.09 | |
Chamika Karunaratne | 2.5 | 0 | 22 | 0 | 8.80 | |
Dushmantha Chameera | 4 | 0 | 22 | 0 | 5.50 | |
Jeffery Vandersay | 4 | 0 | 32 | 1 | 8.00 | |
Dasun Shanaka | 0.5 | 0 | 11 | 0 | 22.00 |
முடிவு – அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<