Home Tamil போராட்டத்திற்குப் பின் சுபர் ஓவரில் போட்டியியை பறிகொடுத்த இலங்கை

போராட்டத்திற்குப் பின் சுபர் ஓவரில் போட்டியியை பறிகொடுத்த இலங்கை

1164

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சமநிலை அடைந்ததுடன், அவுஸ்திரேலிய அணி சுபர் ஓவர் முறையில் வெற்றியாளர்களாக தெரிவாகியது.

அத்துடன் இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

>> வனிந்து ஹஸரங்கவை 10.75 கோடிக்கு வாங்கியது RC

சிட்னியில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியிருந்தார்.

அவுஸ்திரேலியா ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்ற இந்த T20 தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்த இலங்கை அணி, கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக பினுர பெர்னாண்டோவிற்கு இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கியது. இதனால், பினுர பெர்னாண்டோவிற்குப் பதிலாக, மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவன் துஷார சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தார்.

இலங்கை அணி

பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணத்திலக்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (அணித்தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, நுவன் துஷார

அவுஸ்திரேலிய அணி

ஆரோன் பின்ச்(அணித்தலைவர்), பென் மெக்டோர்மெட், ஜோஸ் இங்கிலீஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், அடம் ஸம்பா, ஜோஸ் ஹேசல்வூட்

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் மற்றும் பென் மெக்டொர்மோட் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர்.

>> மஹீஷ் தீக்ஷனவை வாங்கிய சென்னை ; லக்னோ அணியில் சமீர!

எனினும் நுவன் துஷார தனது அபார பந்துவீச்சு மூலம் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டினைச் சாய்த்தார். கடந்த போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்த பென் மெக்டெர்மோட் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக மாறி 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு ஜோஷ் இங்கிலீஸ், அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வழங்கியிருந்த போதும், இலங்கை பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் நெருக்கடியினை உருவாக்கினர். அதனால், அவுஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், கிளன் மெக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் 20 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

இதன் பின்னர், அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஜோஷ் இங்கிலீஸ் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 பந்துகளுக்கு 48 ஓட்டங்களை எடுக்க, ஆரோன் பின்ச் 25 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் இறங்கினர்.

தனது கடந்த போட்டியில் பிரகாசிக்கத் தவறிய தனுஷ்க குணத்திலக்க தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து, இப்போட்டியிலும் ஏமாற்றினார். அதனையடுத்து அவிஷ்க பெர்னாண்டோவும் புதிய துடுப்பாட்ட வீரராக வந்து சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். இவர்களோடு சரித் அசலங்கவிடம் இருந்தும் ஒரு மோசமான இன்னிங்ஸ் வெளிப்பட்டிருந்தது. இதனால், இலங்கை அணி ஒரு கட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>> வனிந்து ஹஸரங்கவை 10.75 கோடிக்கு வாங்கியது RCB

இந்நிலையில் பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் ஒரு நல்ல இணைப்பாட்டத்திற்கான அடித்தளத்தினை உருவாக்கினார். 42 ஓட்டங்கள் வரை நீடித்த இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்கான இந்த இணைப்பாட்டம், தினேஷ் சந்திமாலின் ஆட்டமிழப்புடன் நிறைவுக்கு வந்தது. அடம் ஸம்பாவினால் போல்ட் செய்யப்பட்ட சந்திமால் 19 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் அணியின் வெற்றிக்காக போராடிய நிலையில், இலங்கை அணிக்கு போட்டியின் இறுதி ஓவரில் வெற்றிக்காக 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனாலும், 18 ஓட்டங்களை இறுதி ஓவரில் பெற்றுக் கொண்ட இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்கள் பெற்று போட்டியினை த்ரில்லரான முறையில் சமநிலை செய்தது.

போட்டி சமநிலையானதை அடுத்து சுபர் ஓவர் வழங்கப்பட்டிருந்தது. சுபர் ஓவரில் சிறப்பான பந்துவீச்சுடன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 6 ஓட்டங்களை அடைந்து கொண்ட அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் T20 போட்டிகளில் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸ் உடன், பெதும் நிஸ்ஸங்க 53 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றுக் கொள்ள, தசுன் ஷானக்க 19 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>> ஜப்னா அணியுடன் இணையும் துனித் வெல்லாலகே

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் திறமையாக செயற்பட்டிருந்த ஜோஸ் ஹேசல்வூட் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் தெரிவானார். இந்த T20 தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) கென்பராவில் நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
164/8 (19)

Australia
164/6 (20)

Batsmen R B 4s 6s SR
Ben McDermott c Wanidu Hasaranga b Nuwan Thushara 18 15 0 0 120.00
Aaron Finch st Dinesh Chandimal b Wanidu Hasaranga 25 20 0 0 125.00
Josh Inglis c Dinesh Chandimal b Maheesh Theekshana 48 32 0 0 150.00
Glenn Maxwell c Chamika Gunasekara b Maheesh Theekshana 15 12 0 0 125.00
Steve Smith c Dhanushka Gunathilake b Dushmantha Chameera 14 15 0 0 93.33
Marcus Stoinis c Maheesh Theekshana b Dushmantha Chameera 19 18 0 0 105.56
Matthew Wade not out 13 4 0 0 325.00
Pat Cummins not out 6 4 0 0 150.00


Extras 6 (b 0 , lb 2 , nb 0, w 4, pen 0)
Total 164/6 (20 Overs, RR: 8.2)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 4 0 30 2 7.50
Nuwan Thushara 4 0 40 1 10.00
Maheesh Theekshana 4 0 31 1 7.75
Wanidu Hasaranga 4 0 33 2 8.25
Chamika Karunaratne 4 0 28 0 7.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Pat Cummins b Marcus Stoinis 73 53 0 0 137.74
Dhanushka Gunathilake c Ben McDermott b Josh Hazlewood, 0 1 0 0 0.00
Avishka Fernando c Josh Inglis b Josh Hazlewood, 5 6 0 0 83.33
Charith Asalanka b Pat Cummins 0 5 0 0 0.00
Dinesh Chandimal b Adam Zampa 19 22 0 0 86.36
Dasun Shanaka run out () 34 19 0 0 178.95
Chamika Karunaratne c Matthew Wade b Jhye Richardson 0 2 0 0 0.00
Wanidu Hasaranga c Pat Cummins b Josh Hazlewood, 13 9 0 0 144.44
Dushmantha Chameera not out 4 1 0 0 400.00
Maheesh Theekshana not out 6 2 0 0 300.00


Extras 10 (b 1 , lb 7 , nb 0, w 2, pen 0)
Total 164/8 (19 Overs, RR: 8.63)
Bowling O M R W Econ
Josh Hazlewood, 4 0 22 3 5.50
Pat Cummins 4 0 30 1 7.50
Marcus Stoinis 2 0 18 0 9.00
Kane Richardson 4 0 44 1 11.00
Adam Zampa 4 0 26 1 6.50
Glenn Maxwell 1 0 4 0 4.00



முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (அவுஸ்திரேலிய அணி சுபர் ஓவர் முறையில் வெற்றி)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<