இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டின் (2019) ஆரம்பத்தில் பகலிரவு டெஸ்ட் ஒன்று உட்பட மொத்தமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அவுஸ்திரேலியா பயணமாகவுள்ளது.
முன்னதாக, இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் தொடர் ஒன்றை நடாத்தவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் இன்று (30) வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் படி, இலங்கை – அவுஸ்திரேலிய அணியுடன் பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி உட்பட, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே விளையாடுகின்றது.
கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை
ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடர், மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 14ஆம் திகதி……
அதோடு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின்படி அவர்கள், 2018/19 ஆண்டுக்கான கோடைகாலத்தில் இலங்கை உட்பட நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன், மொத்தமாக 22 சர்வதேசப் போட்டிகளில் (டெஸ்ட், ஒரு நாள், T20) மோதுகின்றனர்.
இலங்கை அணியினர், தமது அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் முதலில் பகலிரவு ஆட்டமாக ஜனவரி 24ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் மோதுகின்றனர். பின்னர், இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கென்பராவில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 5ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுடன் தமது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதியிருந்த இலங்கை அணியினர், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கிந்திய தீவுகளில் தமது இரண்டாவது பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் மோதுகின்றனர். எனவே, அவுஸ்திரேலிய அணியுடனான இந்த சுற்றுப் பயணம் இலங்கை அணிக்கு மூன்றாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரவிருக்கின்றது.
2019 ஆண்டின் இலங்கையின் அவுஸ்திரேலிய சுற்றுத் தொடருக்கான அட்டவணை
முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி 24 முதல் 28 – காப்பா, பிரிஸ்பேன்
இரண்டாவது டெஸ்ட் போட்டி – பெப்ரவரி 1 முதல் 5 – மெனுக்கா ஓவல், கென்பரா
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க