T20 தொடரில் விட்ட தவறுகளை சரி செய்யுமா இலங்கை?

688

பல எதிர்பார்ப்புக்களுடன் நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட  இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் கிடைத்த தோல்விகள் காரணமாக ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

மீண்டும் இலங்கைக்கு தோல்வி ; உலகக் கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்பு பறிபோனது

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி, தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக நாளை (02) மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவிருக்கின்றது.

இலங்கை – நியூசிலாந்து கடந்த கால T20 போட்டிகள்

இலங்கை – நியூசிலாந்து அணிகளைப் பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை மொத்தமாக 20 T20 போட்டிகளில் ஆடியிருக்கின்றன. இதில் நியூசிலாந்து 11 வெற்றிகளையும், இலங்கை 07 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றது. இதேநேரம் இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 7 T20 போட்டிகளில் நியூசிலாந்து அணி ஆறு வெற்றிகளை பதிவு செய்திருக்க, இலங்கை ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றது.

இவை நியூசிலாந்து அணியின் கரம் இலங்கை அணியுடனான T20 போட்டிகளில் ஓங்கி இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இதுவரை நியூசிலாந்து மண்ணில் T20 தொடர் ஒன்றினை வென்றிருக்காத இலங்கை அணிக்கு அதற்கான வாய்ப்பு ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரினை கைப்பற்றும் போது அது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஏற்பட்ட இழப்பிற்கு ஈடாகவும் அமையும்.

இலங்கை அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இலங்கை T20 குழாத்தினை நோக்கும் போது அணியில் முக்கிய இணைப்பாக குசல் ஜனித் பெரேராவின் வருகையினை குறிப்பிட முடியும். இலங்கை அணிக்காக 2021ஆம் ஆண்டிலேயே கிரிக்கெட் போட்டியொன்றில் ஆடிய குசல் பெரேரா தனக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சத்திர சிகிச்சையினை அடுத்து இலங்கை அணியில் இணையும் முதல் சந்தர்ப்பமாக நியூசிலாந்து – இலங்கை T20 தொடர் அமைகின்றது.

வெற்றியுடன் தொடரில் முன்னேறும் குஜாராத் டைடன்ஸ்

குசல் பெரேரா அணியின் முன்வரிசை வீரர்களில் ஒருவராக இலங்கை அணியினை பலப்படுத்த எதிர்பார்க்கப்படும் நிலையில், அணிக்கு நம்பிக்கை வழங்கும் ஏனைய துடுப்பாட்டவீரர்களாக பெதும் நிஸ்ஸங்க, தனன்ஞய டி சில்வா மற்றும் சரித் அசலன்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

மறுமுனையில் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது வனிந்து ஹஸரங்க தனது சுழல் மூலம் இலங்கை வீரர்களை அதிகம் பலப்படுத்துவார் என நம்பப்படுவதோடு மகீஷ் தீக்ஷன அணியின் ஏனைய பிரதான சுழல் நட்சத்திரமாக காணப்படுகின்றார்.  இவர்கள் தவிர லஹிரு குமார, பிரமோத் மதுசான் மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோரின் வேகத்தின் மூலமும் இலங்கை அணி இன்னும் பலப்படுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பிரமோத் மதுசான், கசுன் ராஜித, டில்சான் மதுசங்க, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ,   துனித் வெல்லாலகே, சதீர சமரவிக்ரம

நியூசிலாந்து குழாம்

ஒருநாள் தொடர் போன்று நியூசிலாந்து T20 தொடரிலும் இளம் வீரர்களுடனேயே களமிறங்குகின்றது. நியூசிலாந்து அணிக்காக இருக்கும் வீரர்களில் வில் யங், டேரைல் மிச்சல் போன்றோர் பிரதான துடுப்பாட்டவீரர்களாக காணப்பட டிம் செய்பார்ட் மற்றும்  அணித்தலைவர் டொம் லேதம் ஆகியோரும் மேலதிக துடுப்பாட்ட பலமாக இருக்கின்றனர். அதேநேரம் மார்க் செப்மன் இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரிலும் நியூசிலாந்து அணிக்கு சகலதுறைவீரராக நம்பிக்கை வழங்குகின்றார்.

மறுமுனையில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுத்துறை அதன் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் பலப்படுத்தப்படுகின்றது. இதில் அணிக்கு நம்பிக்கை தரும் வேகப்பந்துவீச்சாளர்களாக அடம் மில்னே, மேட் ஹென்ரி, ஹென்ரி சிப்லே மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக இஸ் சோதி அணியின் நம்பிக்கைக்குரிய சுழல் பந்துவீச்சாளராக இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

நியூசிலாந்து குழாம்

வில் யங், டிம் செய்பார்ட், சாட் போவ்ஸ், டொம் லேதம், ரச்சின் ரவிந்திர, டேரைல் மிச்சல், ஜேம்ஸ் நீஷம், இஸ் சோதி, மேட் ஹென்ரி, அடம் மில்னே, மார்க் சாப்மன், ஹென்ரி சிப்லே, பென் லிஸ்டர்

T20 தொடர் அட்டவணை

ஏப்ரல் 02 – முதல் T20 போட்டி – ஓக்லேன்ட் – ஈடன் பார்க்

ஏப்ரல் 05 – இரண்டாவது T20 போட்டி – டனேடின் – யூனிவர்சிடி ஓவல்

ஏப்ரல் 08 – மூன்றாவது T20 போட்டி – ஜோன் டேவிஸ் ஓவல் – குயின்ஸ்டவுன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<