சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வெற்றியுடன் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
முன்னதாக குயின்ஸ்டவுன் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லேதம் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.
>> WATCH – “நியூசிலாந்தில் தொடர் வெற்றியை பெறுவதற்கு சரியான வாய்ப்பு“ – ஷானக!
தொடரினை தீர்மானிக்கும் மோதலாக அமைந்த இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது T20I போட்டியில் இலங்கை அணி ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அதன்படி டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக லஹிரு குமார இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை XI
பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, பிரமோத் மதுசான், லஹிரு குமார
நியூசிலாந்து XI
டிம் செய்பார்ட், சாட் போவ்ஸ், டொம் லேதம், ரச்சின் ரவிந்திர, டேரைல் மிச்சல், ஜேம்ஸ் நீஷம், இஸ் சோதி, அடம் மில்னே, மார்க் சாப்மன், ஹென்ரி சிப்லே, பென் லிஸ்டர்
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க – குசல் மெண்டிஸ் ஜோடி சிறந்த தொடக்கத்தினை வழங்கியது. இரு வீரர்களும் இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர். இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக இஸ் சோதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 25 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்களை எடுத்தார்.
பெதும் நிஸ்ஸங்கவின் பின்னர் இலங்கை வீரர்கள் குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்த போதும் குசல் மெண்டிஸின் அதிரடி அரைச்சதம், குசல் பெரேராவின் அதிரடி என்பவற்றின் காரணமாக இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் தன்னுடைய 12ஆவது T20I அரைச்சதத்தோடு 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் பெரேரா 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் உடன் 31 ஓட்டங்கள் பெற்றார். இவர்களுடன் தனன்ஞய டி சில்வாவும் 09 பந்துகளில் ஒரு சிக்ஸர் 2 பௌண்டரிகள் உடன் 20 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பென் லிஸ்டர் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அடம் மில்னே மற்றும் இஸ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
>> இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் பங்களாதேஷ் அணியில்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 183 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி டிம் செய்பார்ட்டின் அதிரடி ஆட்டத்தோடு சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றது.
இதில் செய்பார்ட் தன்னுடைய 06ஆவது அரைச்சதத்தோடு 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் அவர் இந்த T20I தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் டிம் செய்பார்ட்டின் விக்கெட்டினை பிரமோத் மதுசான் கைப்பற்றிய பின்னர் நியூசிலாந்து சற்று தடுமாற்றத்தினை காட்டத் தொடங்கியது. இதனால் போட்டி இறுதி ஓவர் வரை சென்றதுடன் இறுதி ஓவரில் லஹிரு குமாரவின் பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி நியூசிலாந்துக்கு மேலும் அழுத்தம் உருவாக்கியது. எனினும் இந்த அழுத்தத்தினை சமாளித்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கை 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களுடன் அடைந்தது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் டொம் லேதம் 23 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மகீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
>> மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் ரெய்லி மெர்டித்
போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டவீரரான டிம் செய்பார்ட் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியின் தோல்வியோடு இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் தாம் விளையாடிய மூவகை கிரிக்கெட் தொடர்களையும் இழந்து நாடு திரும்புகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | c James Neesham b Ish Sodhi | 25 | 25 | 4 | 0 | 100.00 |
Pathum Nissanka | c Ish Sodhi b Benjamin Lister | 73 | 48 | 6 | 5 | 152.08 |
Kusal Perera | run out (Adam Milne) | 33 | 21 | 2 | 2 | 157.14 |
Dhananjaya de Silva | c Tim Seifert b Benjamin Lister | 20 | 9 | 1 | 2 | 222.22 |
Dasun Shanaka | c Chad Bowes b Adam Milne | 15 | 8 | 2 | 0 | 187.50 |
Charith Asalanka | run out (Mark Chapman) | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Wanindu Hasaranga | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Mahesh Theekshana | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 13 (b 2 , lb 1 , nb 0, w 10, pen 0) |
Total | 182/6 (20 Overs, RR: 9.1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Matt Henry | 4 | 0 | 33 | 0 | 8.25 | |
Adam Milne | 4 | 1 | 30 | 1 | 7.50 | |
Benjamin Lister | 4 | 0 | 37 | 2 | 9.25 | |
Ish Sodhi | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
James Neesham | 2 | 0 | 22 | 0 | 11.00 | |
Rachin Ravindra | 2 | 0 | 27 | 0 | 13.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chad Bowes | c Kusal Mendis b Lahiru Kumara | 17 | 18 | 2 | 0 | 94.44 |
Tim Seifert | c & b Pramod Madushan | 88 | 48 | 10 | 3 | 183.33 |
Tom Latham | b Mahesh Theekshana | 31 | 23 | 1 | 1 | 134.78 |
Daryl Mitchell | c Dasun Shanaka b Lahiru Kumara | 15 | 16 | 0 | 0 | 93.75 |
Mark Chapman | c Charith Asalanka b Lahiru Kumara | 16 | 12 | 1 | 1 | 133.33 |
James Neesham | run out (Kusal Mendis) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Rachin Ravindra | not out | 2 | 1 | 0 | 0 | 200.00 |
Adam Milne | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 1 , lb 9 , nb 0, w 4, pen 0) |
Total | 183/6 (19.5 Overs, RR: 9.23) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 4 | 0 | 34 | 0 | 8.50 | |
Mahesh Theekshana | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Pramod Madushan | 4 | 0 | 38 | 1 | 9.50 | |
Lahiru Kumara | 3.5 | 0 | 38 | 3 | 10.86 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 41 | 0 | 10.25 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<