இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 37 நாட்களைக் கொண்ட இந்த சுற்றுத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் இந்திய அணியுடன் மோதவுள்ளது.
இத்தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது. இதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், 2ஆவது டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி நாக்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி டெஸ்ட் போட்டி டிசம்பர் 24ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றாலும், அங்கிருப்பது மோசமான ஆடுகளம் என ஐ,சி.சியினால் அறிவிக்கப்பட்டமையினால் அதன் பின்னர் சில காலம் அங்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி கடந்த முதலாம் திகதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
ரங்கன ஹேரத்தின் அதிரடிப் பந்துவீச்சினால் போராடி வென்ற இலங்கை அணி
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை…
இதேவேளை, இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் மாதம் 10, 13 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. T-20 போட்டிகள் 20, 22 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு T-20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடியது. இதில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
1ஆவது டெஸ்ட் போட்டி – நவம்பர் 16 – 20 – கொல்கத்தா
2ஆவது டெஸ்ட் போட்டி – நவம்பர் 24 – 28 – நாக்பூர்
3ஆவது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 2 – 6 – டெல்லி1ஆவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 10 – தர்மசாலா
2ஆவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 13 – மொஹாலி
3ஆவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 17 – விசாகபட்டிணம்1ஆவது T-20 போட்டி – டிசம்பர் 20 – சுட்டாக்
2ஆவது T-20 போட்டி – டிசம்பர் 22 – இந்தூர்
3ஆவது T-20 போட்டி – டிசம்பர் 24 – மும்பை
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<