உஸ்பெகிஸ்தானில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 7 இலங்கை வீரர்களுக்கும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதியளித்துள்ளார்.
ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் உஸ்பெகிஸ்தானில் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 30 ஆசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏறக்குறைய ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளதாக ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
ஆசிய இளையோர் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையிலிருந்து அறுவர் தகுதி
இந்த நிலையில், குறித்த தொடருக்காக முன்மொழியப்பட்ட இலங்கை இளையோர் மெய்வல்லுனர் குழாத்தில் 5 ஆண் வீரர்கள், 2 பெண் வீரர்கள் மற்றும் 3 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டிலிருந்து இருந்து புறப்பட உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம் விபரம்:
ஆண்கள் – அயோமால் அக்கலன்க (400 மீட்டர் தடைதாண்டல்), லெசந்து அர்த்தவிது (உயரம் பாய்தல்), நிலுபுல் பெஹசர தேனுஜ (உயரம் பாய்தல்), மலிந்தரத்ன சில்வா (கோலூன்றிப் பாய்தல்), ஜே. கிருலு (400 மீட்டர்)
பெண்கள் – நிர்மலி விக்ரமசிங்க (800 மீட்டர்), துலாஞ்சனா பிரதீபனி (1500 மீட்டர்)
அதிகாரிகள் – சந்தன ஏக்கநாயக்க, புத்திக மதுசங்க மற்றும் பூர்ணிமா வீரகோன்
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<