இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் ஆண்டு பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தமது சொந்த நாட்டில் நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.
அதன்படி, இங்கிலாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இலங்கை விளையாடவுள்ளதுடன், ஆசிய கிண்ணத்தொடரும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.
முதல்நாள் சரிவிலிருந்து மீண்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
அடுத்த ஆண்டு விளையாடவுள்ள 8 டெஸ்ட் போட்டிகளில், 6 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகள், பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் என்பன ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதுடன், அயர்லாந்து அணிக்கு எதிராக கன்னி டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் மே மாதம் இலங்கை மோதவுள்ளது.
இதேநேரம், ஐசிசி T20I உலகக் கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முதல் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத்தொடர், T20I போட்டிகளாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கிண்ண தொடரை T20I மற்றும் ஒருநாள் போட்டிகளாக நடத்துவதற்கான அனுமதியை கடந்த 2016ம் ஆண்டு ஐசிசி வழங்கியுள்ளது. அந்த ஆண்டு T20I உலகக் கிண்ணம் நடைபெற்றமையால், ஆசிய கிண்ணத்தொடர் T20I போட்டிகளாக நடத்தப்பட்டது. எனவே, ஆசிய கிண்ணத்தொடர், அடுத்த ஆண்டு இரண்டாவது முறையாக T20I போட்டிகளாக நடத்தப்படவுள்ளது.
Video – நேர்த்தியாக பந்துவீசினால் தொன்னப்பிரிக்காவை வீழ்த்தலாம் – Dasun Shanaka
இதேவேளை இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்கள் கடந்த ஆண்டு கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அடுத்த ஆண்டுக்கு அட்டவணைப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இலங்கை அணி அடுத்த ஆண்டு 15 ஒருநாள் போட்டிகள், 12 T20I போட்டிகள் மற்றும் 8 டெஸ்ட் போட்டிகளில், இருதரப்பு தொடர்களில் விளையாடவுள்ளது.
அதேநேரம், லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகள் ஜூலை– ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை T10 தொடர் டிசம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிg;\பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<