மகளிர் முக்கோண தொடரில் ஆடும் இலங்கை U19 கிரிக்கெட் அணி

159

இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண இளையோர் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கின்றது.

>>கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியில் இணையும் இங்கிலாந்து வீரர்

இலங்கைக்கு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்த சுற்றுப்பயணத்திலேயே குறிப்பிட்ட முக்கோண கிரிக்கெட் தொடர்களும் நடைபெறவிருக்கின்றன.

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக இரு அணிகளும் பங்கெடுக்கும் T20 தொடர் இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறுகின்றது. இந்த தொடரில் மொத்தம் ஆறு போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு அணிகளும் தம்மிடையே இரு தடவைகள் மோதிக்கொள்ளவிருக்கின்றன. T20 தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ இடம்பெறவிருக்கின்றன.

T20 தொடரினை அடுத்து மூன்று அணிகளும் பங்கெடுக்கும் முக்கோண இளையோர் ஒருநாள் தொடர் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகுகின்றது.

இதேவேளை இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்த முக்கோண தொடர்கள் இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அபிவிருத்திக்கு முக்கியமானதாக மாறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி (CEO) ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டிருக்கின்றார்.

முக்கோண தொடர் அட்டவணை

T20 போட்டிகள்

மார்ச் 28 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ஹம்பாந்தோட்டை

மார்ச் 29 – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து ஹம்பாந்தோட்டை

மார்ச் 30 – இலங்கை எதிர் இங்கிலாந்து ஹம்பாந்தோட்டை

ஏப்ரல் 1 – அவுஸ்திரேலியா எதிர் இலங்கை ஹம்பாந்தோட்டை

ஏப்ரல் 2 – இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா ஹம்பாந்தோட்டை

ஏப்ரல் 3 – இங்கிலாந்து எதிர் இலங்கை ஹம்பாந்தோட்டை

ஒருநாள் போட்டிகள்

ஏப்ரல் 5 – அவுஸ்திரேலியா எதிர் இலங்கை காலி

ஏப்ரல் 7 – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து காலி

ஏப்ரல் 9 – இலங்கை எதிர் இங்கிலாந்து காலி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<