ICC மகளிர் சம்பியன்ஷிப்: இலங்கை வரும் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள்

ICC Women’s Championship 2022-25

298
Sri Lanka to host India

2022-25 பருவகாலத்துக்காக நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (ICC Women’s Championship 2022-25) தொடரில் பங்கேற்க இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன.

அதேபோல, குறித்த காலப்பகுதியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

2022-25 ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றும் அணிகள் மற்றும் குழுக்கள் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று (25) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் அடுத்த அத்தியாயத்தில் மேலும் இரண்டு அணிகளைச் இணைத்துக்;கொள்ள ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பின் புதிய அத்தியாயத்தில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தற்போது 9ஆவது மற்றும் 10ஆவது இடங்களில் இருக்கும் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் அடங்கும்.

அந்த இரண்டு அணிகளுடன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இந்தப் அத்தியாயத்தில் இணையும். அதன்படி, 2022-25 பருவகாலத்துக்காக நடைபெறுகின்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும்.

அத்துடன், இந்த அத்தியாயத்தில் ஒவ்வொரு நாடும் அடுத்த மூன்று ஆண்டுகளில் தலா மூன்று போட்டிகள் கொண்ட எட்டு ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

இவற்றில் நான்கு ஒருநாள் தொடர்கள் சொந்த மண்ணிலும், மற்றைய நான்கு ஒருநாள் தொடர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களாகவும் விளையாடப்படும்.

இதன்படி, 2022-25 அத்தியாயத்தின் முடிவில், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் நாடுகளும், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடும் நேரடியாக மகளிர் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும். மற்றைய அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற வேண்டும்.

2022-25 ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் ஜூன் முதலாம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இடையேயான ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகிறது.

இந்தப் பிரிவில் பாகிஸ்தான் தவிர இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.

மேலும், இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன.

இதனிடையே, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஸ்கொட்லாந்து, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள மகளிர் அணிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருநாள் அந்தஸ்து வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

2022-22 ஐசிசி இன் மகளிருக்கான சம்பியன்ஷிப்பில் மோதவுள்ள அணிகள் விபரம்:

Sri Lanka

  • Home: India, New Zealand, Bangladesh, West Indies Away: England, South Africa, Pakistan, Ireland

Australia

  • Home: India, South Africa, Pakistan, West Indies Away: England, New Zealand, Bangladesh, Ireland

Bangladesh

  • Home: India, Australia, Pakistan, Ireland Away: New Zealand, South Africa, Sri Lanka, West Indies

England

  • Home: India, Australia, Pakistan, Sri Lanka Away: New Zealand, South Africa, Ireland, West Indies

India

  • Home: New Zealand, South Africa, Ireland, West Indies Away: England, Australia, Bangladesh, Sri Lanka

Ireland

  • Home: England, Australia, South Africa, Sri Lanka Away: India, Bangladesh, Pakistan, West Indies

New Zealand

  • Home: England, Australia, Bangladesh, Pakistan Away: India, South Africa, Sri Lanka, West Indies

Pakistan

  • Home: South Africa, Ireland, Sri Lanka, West Indies Away: England, New Zealand, Australia, Bangladesh

South Africa

  • Home: England, New Zealand, Bangladesh, Sri Lanka Away: India, Australia, Pakistan, Ireland

West Indies

  • Home: England, New Zealand, Bangladesh, Ireland Away: India, Australia, Pakistan, Ireland

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<