பிஃபா கால்பந்து உலகக் கிண்ணம் 2026 மற்றும் AFC கிண்ணம் 2027 என்பவற்றுக்கான பூர்வாங்க தகுதிச் சுற்றின் முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை கால்பந்து அணி யெமனை எதிர்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே, பிஃபாவின் தடைக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு, கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உலகக் கிண்ண மற்றும் ஆசிய கிண்ண தொடர் என்பவற்றுக்கான தகுதிகாண் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
- பதவி விலகும் இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா
- ஐரோப்பிய லீக்குகளில் இருந்து வெளியேறும் ஜாம்பவான்கள் !
- இலங்கை கால்பந்திற்கு ஒரு நற்செய்தி
இந்நிலையில், மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் இன்று (27) இந்த தொடருக்கான அணிகளை நிரல்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஆரம்ப கட்டத்திற்காக மொத்தம் 20 அணிகள் 10 மோதல்களுக்காக குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்டன.
இதன்படி, இலங்கை அணி பூர்வாங்க தகுதிச் சுற்றின் முதல் சுற்றுப் போட்டியில் யெமன் அணியுடன் மோதவுள்ளது. சொந்த மைதானம் மற்றும் எதிர் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களிலும் இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி குறித்த போட்டிகள் அனைத்தும் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே, இலங்கை – யெமன் இடையிலான போட்டிகளும் குறித்த தினங்களில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பூர்வாங்க தகுதிச் சுற்றின் போட்டி அட்டவணை
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<