நேபாளத்தின் சஹீத் ரங்சாலா அரங்கில் நடைபெற்ற B குழுவுக்கான SAFF மகளிர் சம்பியன்ஷிப் போட்டியில் இரு பாதிகளிலும் சலனி குமாரி கோல் புகுத்தியதன் மூலம் மாலைதீவுகள் அணியை இலங்கை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா மற்றும் மாலைதீவுகள் அணிகள் இருக்கும் குழுவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் நோக்குடனேயே இந்தத் தொடரில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிடம் 6-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் மாலைதீவுகள் அணி இலங்கையை எதிர்கொண்டது, இலங்கை மகளிர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
பலம்கொண்ட சென்னையின் அணியுடன் போராடித் தோற்ற கொழும்பு
இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற AFC கிண்ண தகுதிகாண் போட்டிகளின் ப்ளே ஓப் சுற்றில் 2ஆவது கட்டப் போட்டியில் பலம்மிக்க சென்னையின்
போட்டி ஆரம்பித்ததில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இலங்கை மகளிர்கள் மாலைதீவு பகுதியை முழுமையாக முற்றுகையிட்டனர். எனினும் ஒழுங்கற்ற முறையிலேயே இரு அணி வீராங்கனைகளும் ஆடுவதை காண முடிந்ததோடு பந்தை அனைத்து வீராங்கனைகளும் சூழ்ந்துகொள்வதாகவே ஆட்டம் இருந்தது.
இலங்கைக்கு சாதகமாக பல வாய்ப்புகள் கிட்டியபோதும் பந்து பரிமாற்றம் தரமாக இல்லாத நிலையில் அந்த வாய்ப்புகள் நழுவின. 20 ஆவது நிமிடத்தில் பந்து சரியாக கடத்தப்பட்டபோது இலங்கை வீராங்கனைகள் கோல் ஒன்றை பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கோல் காப்பாளர் தவறிழைத்ததாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
முதல் கோலை புகுத்துவதற்கு எரன்தி லியனகேவுக்கு பொன்னான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. பெனால்டி எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்ற அவர் வலைக்கு வெளியிலேயே அதனை உதைத்தார். கோல் காப்பாளர் இலக்கில் இல்லாத நிலையில் அவருக்கு இலகு கோல் ஒன்றை பெற வாய்ப்பு இருந்தது.
விரைவிலேயே எரன்தி மற்றொரு கோல் வாய்ப்பை தவறவிட்டதோடு அது முந்தைய வாய்ப்பை விடவும் மிக நெருக்கமான ஒன்றாக இருந்தது. கோல் கம்பத்தில் இருந்து ஒரு சில அடிகள் தூரத்தில் இருந்த எரன்திக்கு ப்ரீ கிக் மூலம் இமேஷா மதுஷானி பந்தை செலுத்தியபோது அவர் மீண்டும் ஒருமுறை இலக்குத் தவறி உதைத்தார்.
மத்திய களத்தில் சிறப்பாக ஆடிய அசலா சஞ்சீவனி, நிலுக்ஷிகா குமாரி மற்றும் சலனி குமாரி மாலைதீவுகள் பக்கம் பந்தை தக்கவைக்க உதவினார்கள். இலங்கையின் தாக்குதல் மற்றும் தற்காப்பில் இமேஷா மதுஷானி முக்கிய வீராங்கனையாக இருந்தார்.
பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் 40ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. தலைவி லியனகே பந்தை தாழ்வாக உதைத்தபோது அது நேராக எதிரணி கோல் காப்பாளர் அமீனாத் லீசாவிடம் செல்ல அதனை அவர் பிடிக்கத் தவறியதால் பட்டு வந்த பந்தை சலனி குமாரி இலகுவாக கோலாக மாற்றினார்.
முதல் பாதி: இலங்கை 1 – 0 மாலைதீவுகள்
இரண்டாவது பாதியிலும் இலங்கை வீராங்கனைகள் அதிக நேரம் எதிரணி பகுதியை ஆக்கிரமிப்பதாக இருந்தது.
இரண்டாவது பாதி ஆரம்பித்து 5ஆவது நிமிடத்திலேயே சலனி குமாரி தனது மற்றும் இலங்கையின் இரண்டாவது கோலை புகுத்தினார். அச்சலா சன்சீவனியின் அபார பந்து பரிமாற்றத்தின் மூலமே அவர் அந்த கோலை பெற்றார்.
சிறுவர் மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக தமிழ் பாடசாலைகள்
கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம்
தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய இலங்கை வீராங்கனைகள் இரண்டு பாதியிலும் சிறப்பாக செயற்பட்டதோடு முந்தைய போட்டிகளை விடவும் அவர்களின் உடல் தகுதியும் நன்றாக இருந்தது.
இலங்கை வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அணித் தலைவி எரன்தி லியனகே, சமன்த சலோமி மற்றும் நல்லவரகே மதுஷானி அகியோருக்கு பதில் பூர்னிமா பெரேரா, பிரவீன் பெரேரா மற்றும் மதுஷானி ஆரியரத்ன ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
கடைசி பத்து நிமிடங்களில் மாலைதீவு மங்கைகள் இலங்கை பின்கள வீராங்கனைகளுக்கு கடும் சலால் கொடுத்தபோதும் கோல்காப்பாளர் வலுவாக செயற்பட்டு அந்த சவால்களை சமாளித்தார்.
எனினும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியதோடு மாலைதீவுகள் தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. அடுத்து இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளவிருப்பதோடு தனது குழுவில் முதலிடத்திற்கான கோட்டியாக அது அமையவுள்ளது. மாலைதீவுகளுக்கு எதிராக சிறப்பாக ஆடிய இந்தியாவை கட்டுப்படுத்த இலங்கை போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
முழு நேரம்: இலங்கை 2 – 0 மாலைதீவுகள்
கோல் பெற்றவர்கள்
இலங்கை – சலனி குமாரி 41′ & 50′
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க