பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்!
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான குழாத்தை ……….
பாகிஸ்தானில் வைத்து இலங்கை அணி
இந்த நிலையில், அந்தத் தாக்கு
இதன்படி, ஐ.சி.சியின் உலக டெஸ்
இதில், இலங்கை அணிக்காக அண்மைக்
இதில் கடந்த செப்டம்பர் மற்றும்
2023 உலகக் கிண்ணமே அஞ்செலோ மெதிவ்ஸின் இலக்கு
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ………
அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சங்கீத் குரேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன்படி, திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக லஹிரு திரிமான்ன களமிறங்கவுள்ளார்.
அதேபோல, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமான தினேஷ் சந்திமால் இலங்கை டெஸ்ட் அணியில் தனது இடத்தை பிடித்துள்ளார்.
தினேஷ் சந்திமாலுடன், அஞ்செலோ மெதிவ்ஸ், தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் ஒசத பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும் துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர்.
இதேநேரம், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவுக்கு இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சைப் பலப்படுத்த சுரங்க லக்மால், லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கையின் சுழல் பந்துவீச்சினைப் பொறுத்தமட்டில் டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம்:
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவன் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித, ஓசத பெர்னாண்டோ
போட்டி அட்டவணை
- முதல் டெஸ்ட் போட்டி – ராவல் பிண்டி – டிசம்பர் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை
- 2ஆவது டெஸ்ட் போட்டி – கராச்சி – டிசம்பர் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை