அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Australia tour of Sri Lanka 2025

56
Australia tour of Sri Lanka 2025

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

>>இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை U19 மகளிர் அணி தோல்வி<<

தனனஞ்ய டி சில்வா தலைமையிலான இந்த டெஸ்ட் குழாத்தில் உபாதை காரணமாக விளையாடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் 

அதேநேரம் அறிமுகவீரர்களான விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் லஹிரு உதார மற்றும் இளம் சகலதுறைவீரர் சோனால் தினுஷ ஆகியோருக்கும் இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு வீரர்களும் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

இவர்கள் ஒரு பக்கமிருக்க தென்னாபிரிக்காவுடனான இலங்கையின் இறுதி டெஸ்ட் தொடரில் பங்கெடுத்த ஏனைய முன்னணி வீரர்களுடன், இலங்கை டெஸ்ட் குழாம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது 

இலங்கைஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு, இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

இலங்கை டெஸ்ட் குழாம் 

தனன்ஞய டி சில்வா (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஒசத பெர்னாண்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, சோனால் தினுஷ, பிரபாத் ஜயசூரிய, ஜெப்ரி வன்டர்செய், நிஷான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<