இலங்கை கிரிக்கட் அணி இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முயற்சியில் ஒரு மில்லியன் இலங்கை ரூபாய்களை (£ 4,662, $ 6,816) நன்கொடையாக வழங்குகிறது. இது நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு எஞ்சலொ மெதிவ்ஸ் மற்றும் சக வீரர்கள் தயாராகிக் கொண்டு இருக்கும் போது தாய்நாட்டில் பல நாட்களாக கடும் மழை, வெள்ளம் ஏற்பட்டதோடு மண்சரிவும் ஏற்பட்டு சுமார் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு 38 பேர்கள் இதுவரை இந்த அனர்தத்தால் உயிரிழந்துள்ளனர். அனர்தத்தால் இறந்தவர்களை நினைவு கூர்ந்து துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் இலங்கை வீரர்கள் தமது ஆடையில் கருப்பு பட்டி அணிந்து விளையாடி இருந்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவின் பின்னர் பேசிய, இலங்கை அணி செய்தி தொடர்பாளர் சந்திரிஷன் பெரேரா “இலங்கை அணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக தானம் வழங்கவுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இந்த முடிவு வியாழக்கிழமை காலை தலைவர் ஏஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் சக வீரர்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்