இந்த ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
LPL தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்!
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவிருக்கின்றது. இந்த T20I உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் நிலையில் 8 அணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
எனவே உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய 2 அணிகளையும் தெரிவு செய்ய தகுதிகாண் தொடர் இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 07ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த தகுதிகாண் தொடருக்கான இலங்கை மகளிர் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த தகுதிகாண் தொடரிலும் 10 அணிகள் பங்கெடுக்கும் நிலையில் இந்த தகுதிகாண் தொடருக்கான இலங்கை அணி சமரி அத்தபத்து தலைமையில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தகுதிகாண் தொடரில் குழு A இல் உள்வாங்கப்பட்டிருக்கும் இலங்கை அணியானது தமது முதல் போட்டியில் தாய்லாந்து மகளிர் வீராங்கனைகளை இம்மாதம் 25ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இலங்கை குழாம்
சாமரி அத்தபத்து – தலைவி
விஷ்மி குணரட்ன
நிலக்ஷி டி சில்வா
ஹார்சிதா மாதவி
கவிஷா டில்ஹாரி
ஹாசினி பெரேரா
அனுஷ்கா சஞ்சீவனி
உதேசிகா ப்ரோபதினி
இனோகா ரணவீர
அச்சினி குலசூரிய
ஹன்சிமா கருணாரட்ன
கவ்யா கவிந்தி
இனோஷி பெர்னாண்டோ
சுகந்திகா குமாரி
சஷினி கிம்ஹானி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<