பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் நடைபெறும் T20I தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>> T20I கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து நமீபியா வீரர் சாதனை
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது அங்கே மூன்று வகை போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகின்றது. இதில் முதலாவதாக இலங்கை – பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடருக்கான இலங்கை குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அறிவிக்கப்பட்டிருக்கும் குழாம் ஆப்கானிஸ்தான் T20I தொடரில் ஆடிய வீரர்களோடு காணப்படுகின்றது. எனினும் ஆப்கான் தொடரில் உள்வாங்கப்பட்டிருக்காத அவிஷ்க பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய் ஆகிய வீரர்கள் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
ஆப்கான் T20I தொடரின் மூன்றாவது போட்டியில் உபாதைக்குள்ளான ஆரம்பத்துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் முன்னதாக உள்வாங்கப்பட்ட போதிலும் பூரண உடற்தகுதியினைப் பெறாத காரணத்தினால் பங்களாதேஷ் பயணமாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> பங்களாதேஷ் அணியுடன் இணையும் 2 பயிற்சியாளர்கள்
அதேவேளை பங்களாதேஷ் T20I தொடரில் வனிந்து ஹஸரங்க அணித்தலைவராக பெயரிடப்பட்ட போதிலும் அவருக்கு இருக்கும் போட்டித்தடை காரணமாக தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சரித் அசலன்க இலங்கை அணியினை வழிநடாத்துவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடரின் போட்டிகள் அனைத்தும் சில்லேட் நகரில் இடம்பெறவிருப்பதோடு, தொடரின் போட்டிகள் மார்ச் 04, 06 மற்றும் 09ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்றன.
இலங்கை குழாம்
வனிந்து ஹஸரங்க (தலைவர்), சரித் அசலன்க (பிரதி தலைவர்), குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக்க, மகீஷ் தீக்ஸன, தனன்ஞய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, டில்சான் மதுசங்க, நுவான் துஷார, மதீஷ பதிரன, அகில தனன்ஞய, பினுர பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<