இலங்கையில் நடைபெறவுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடர் நாளை வியாழக்கிழமை (13) முதல் எதிர்வரும் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ரோஹித் சர்மாவுடன் இணையும் யசஷ்வி ஜெய்ஸ்வால்!
குறித்த இந்தப் போட்டித் தொடருக்கான அணிகள் ஏற்கனவே இலங்கை வந்துள்ள நிலையில், இலங்கை A குழாம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவராக இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இளம் வீரர் துனித் வெல்லாலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
துனித் வெல்லாலகேவுடன் தேசிய அணியில் விளையாடியுள்ள அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, சஹான் ஆராச்சிகே, அஷேன் பண்டார, ஜனித் லியனகே, பினுர பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, பிரமோத் மதுசான் மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அணி வீரர்களை தவிர்த்து பசிந்து சூரியபண்டார, லசித் குரூஸ்புள்ளே, லஹிரு உதார, லஹிரு சமரகோன், இசித விஜேசுந்தர போன்ற உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் வீரர்களும் இலங்கை A அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை நாளை வியாழக்கிழமை (13) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை A குழாம்
துனித் வெல்லாலகே (தலைவர்), பசிந்து சூரியபண்டார, மினோத் பானுக, அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, அஷேன் பண்டார, லஹிரு உதார, ஜனித் லியனகே, பினுர பெர்னாண்டோ, லஹிரு சமரகோன், இசித விஜேசுந்தர, சாமிக்க கருணாரத்ன, பிரமோத் மதுசான், துஷான் ஹேமந்த
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<