சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இலங்கையின் 22 பேர் அடங்கிய அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பயிற்சிப் போட்டியில் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், இந்த தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை அணியின் வீரர்கள் குழாமானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலங்கை அணிக்குழாத்தின் பிரதி தலைவராக தனன்ஞய டி சில்வா செயற்படவுள்ளதோடு, அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்த டயலொக் அழைப்பு T20 தொடரில் திறமையினை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை – தென்னாபிரிக்க தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு
அதன்படி, நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இரண்டு கரங்களாலும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் தன்னை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்.
அதேநேரம், அனுபவ விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமாலுக்கும் இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. மறுமுனையில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரராக காணப்படும் குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 போட்டிகளில் மாத்திரம் விளையாடுவார் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் குசல்!
இவர்கள் தவிர அழைப்பு T20 தொடரில் திறமையினை வெளிப்படுத்தியிருந்த பந்துவீச்சு சகலதுறை வீரரான லஹிரு மதுசங்கவும், 2017ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டிருப்பதோடு இளம் சுழல் பந்துவீச்சாளர்களான புலின தரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோரும் இலங்கை கிரிக்கெட் அணியினை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை முதன்முறையாக பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் போட்டிகளும், T20 தொடரின் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா (பிரதி தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ. நுவான் பிரதீப், லஹிரு குமார, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, மகீஷ் தீக்ஷன, புலின தரங்க, லஹிரு மதுஷங்க
போட்டி அட்டவணை
ஒருநாள் தொடர்
- முதல் ஒருநாள் போட்டி – செப்டம்பர் 2
- இரண்டாவது ஒருநாள் போட்டி – செப்டம்பர் 4
- மூன்றாவது ஒருநாள் போட்டி – செப்டம்பர் 7
T20 தொடர்
- முதல் T20 போட்டி – செப்டம்பர் 10
- இரண்டாவது T20 போட்டி – செப்டம்பர் 12
- மூன்றாவது T20 போட்டி – செப்டம்பர் 14
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…