ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப்; இலங்கை இறுதி குழாம் அறிவிப்பு

Asian Youth Netball Championship 2023

302

ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் 2023 தொடருக்கான 12 வீராங்கனைகள் கொண்ட இலங்கையின் இறுதி குழாத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் (NFSL) வெளியிட்டுள்ளது.  

ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் 2023 தொடர் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தென் கொரியாவில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தற்போது தெரிவாகியுள்ள இந்த குழாம், அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமல்கா குனதிலக்கவின் தலைமையில் தொடர்ந்து பயிற்சிகளை பெற உள்ளது.

இந்த தொடருக்காக ஆரம்பத்தில் 18 வீராங்கனைகள் பூர்வாங்க குழாமாகத் தெரிவு செய்யப்பட்டனர். எனினும், பல வீராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமல்கா குனதிலக்கவின் கோரிகைக்கு அமைய, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம், தேசிய தேர்வுக் குழு மற்றும் வலைப்பந்தாட்ட தேர்வுக் குழு என்பனவற்றின் அனுமதியுடன் 33 வீராங்கனைகளுக்கான தேர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானத்தினால் அதிர்ஷ்டவசமாக சாரா பீரிஸ் 12 பேர் அடங்கிய இறுதி குழாத்திற்குள் இடத்தைப் பிடித்தார். இதனால், நெதாலி ஆரியனாதவுக்கு 3 பேரைப் கொண்ட காத்திருப்பு வீராங்கனைகள் பட்டியலில் இடம்பெற வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும், குழாத்தில் இருந்து வெளியேறும் வீராங்கனைகளாக ஹிருனி ஹேஷானி, உதாரி குருகே, தரூஷி பெரேரா, சரசி கவிந்திகா மற்றும் தெவ்மி பமுனுஆச்சி ஆகியோர் உள்ளனர்.

இதேநேரம், இளம் வீராங்கனைகள் கொண்ட தேசிய அணிக்குழாமானது முன்னாள் தேசிய வலைப்பந்து அணித்தலைவி தமயந்தி ஜயத்திலக்க, திசாங்கனி கொடித்துவக்கு மற்றும் சாமிக்க ஜயசேகர ஆகியோர் கொண்ட குழுவினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

12 பேர் கொண்ட அணிக்குழாம் 

பாஷி உடகெதர – மினாகி கன்காணிகே – டில்மி விஜேநாயக்க – சஜினி ரத்நாயக்க – இதுஷா பெரேரா – ரனுதி பெரேரா – நெத்மி விஜேநாயக்க – சலானி நீஷா – திமி TM. வசந்தப்பிரியா – நெதாங்க குணரட்ன – ஜினாலி பாலசூரிய – சாரா பீரிஸ்

காத்திருப்பு வீராங்கனைகள்

திஷாரா உமயாங்கனி – சசன்தி பதிரனகே – நெதாலி ஆரியனாத

>>மேலும் விளையாட்டு செய்திகளுக்கு<<