ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் பங்கேற்கும் இலங்கை அணி ஜப்பான் பயணம்

295

ஐப்பானில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை இளையோர் அணி, கடந்த 26ஆம் திகதி ஜப்பான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

11ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பயன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 29ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஜப்பானின் கஷிமாவில் நடைபெறவுள்ளது

தர்ஜினி இல்லாமல் பொட்ஸ்வானா சென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணி

இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜூலை…

இம்முறை போட்டிகளில் களமிறங்கவுள்ள இலங்கை அணிக்கு கொழும்பு விசாக்கா வித்தியாலய மாணவி தருஷா இலங்கரத்ன தலைவியாக செயற்படவுள்ளார். இவர் இறுதியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்

அத்துடன், விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 17 வயதான மெலனி விஜேசிங்க இலங்கை அணியின் உப தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்

இதேநேரம், கொழும்பு கேட்வே சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த விஷ்மிக்கா  ரத்நாயக்க, அனீஷா பெரேரா ஆகிய 2 மாணவிகள் இம்முறை இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளதுடன், பாடசாலைக்குச் செல்லாத 2 வீராங்கனைகளும் இம்முறை இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதுஇவ்வாறிருக்க, இம்முறை போட்டித் தொடரில் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியுடன் சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

எனினும், இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ள சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய அணிகள் இலங்கைக்கு பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Photos: Sri Lanka Netball Strength & Conditioning Session | 2019 Netball World Cup

ThePapare.com | Hiran Weerakkody | 24/06/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

இந்த நிலையில், இலங்கை தனது முதலாவது போட்டியில் தென் கொரியாவை நாளை (29) எதிர்த்தாடுகிறது. அதனைத்தொடர்ந்து நேபாளத்தை ஞாயிற்றுக்கிழமையும், தாய்லாந்து அணியை புதன்கிழமையும், சிங்கப்பூர் அணியை வியாழக்கிழமையும் சந்திக்கவுள்ளது

இதேநேரம், ஜூலை 6ஆம் திகதி முதல் தரநிலைப்படுத்தல் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், 3ஆவது இடத்தை தீர்மானிக்கும் போட்டி மற்றும் சம்பியனைத் தீர்மானிக்கின்ற போட்டி என்பன 7ஆம் திகதி நடைபெறவுள்ளன

இதற்குமுன் நடைபெற்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத் தொடர்களில் 3 தடவைகள் இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியது. 1998, 2002 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அணி இந்த வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தது. இதேநேரம், 2004, 2006, 2008, 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இரண்டாவது இடத்தையும் இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணி பெற்றுக் கொண்டது

எனினும், இறுதியாக கடந்த 2017இல் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது

இந்த நிலையில், இம்முறை ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த வருடம் நடைபெற்றன. இதன்போது 60 பேர் கொண்ட குழாம் தெரிவுசெய்யப்பட்டது

மாத்தறையில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின விழா

தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு…

அதன்பிறகு இவ்வருட முற்பகுதியில் வைத்து குறித்த குழாம் 38 வீரர்களுக்கு குறைக்கப்பட்டதுடன், பிறகு 20 பேர் கொண்ட அணியை அறிவிக்க இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை இளையோர் வலைப்பந்தாட்டக் குழாம்

தருஷி இலங்கரத்ன (தலைவிவிசாக்கா வித்தியாலயம்), மெலனி விஜேசிங்க (உதவித் தலைவிவிசாக்கா வித்தியாலயம்), டிலானி பெரேரா (விசாக்கா வித்தியாலயம்), இமாஷா பெரேரா (கடற்படை), தெவ்னரந்தெனி (களுத்துறை மகளிர்), சஜினி ரத்நாயக்க (குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம்), திமித்ரி குனியங்கொட (செலான் வங்கி), குசலிக்கா அலுவிஹார (கண்டி ஹில்வூட்), விஷ்மிக்கா  ரத்நாயக்க, அனீஷா பெரேரா (கேட்வே சர்வதேச பாடசாலை), காவிந்தி ரந்திமா (தெஹிவளை ப்ரெஸ்பிட்டேரியன் மகளிர்

மலிந்து குமாரி கமகே (பயிற்றுவிப்பாளர்), வஜிர புஷ்பகுமார (முகாமையாளர்)

மேலதிக வீராங்கனைகள்

நடாஷா அலுவிஹார (விசாக்கா வித்தியாலயம்), ஷ்மி அன்ஜலிக்கா திலகரத்ன (தெஹிவளை ப்ரெஸ்பிட்டேரியன் மகளிர்), கௌஷி டிலானி பெரேரா (விசாக்கா வித்தியாலயம்)

ஜப்பானில் நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ள ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத் தொடர் குறித்த அனைத்து தகவல்களையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமாக ThePapare.com வாயிலாக எதிர்பாருங்கள்.  

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<