இலங்கையின் முன்னணி பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன சர்வதேச பெட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுவிஸ்லாந்தின் ஒலிம்பிக் குழு தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை சார்பில் பங்கேற்ற போதே தன்னுடைய ஓய்வு தொடர்பிலான அறிவிப்பை இவர் வெளியிட்டார்.
>> பதக்க வாய்ப்பை தவறவிட்ட இலங்கை வீரர்கள்
நிலூக கருணாரத்ன இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 2012, 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் பெட்மிண்டன் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 17 தடவைகள் தேசிய பெட்மிண்டன் சம்பியனாக முடிசூடியுள்ளதுடன், 34 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
தன்னுடைய ஓய்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட நிலூக கருணாரத்ன,
“நான் ஓய்வுபெறுவது தொடர்பில சில காலமாக சிந்தித்து வருகிறேன். அதிகமான இளம் வீரர்கள் வருகின்றனர். நான் விளையாட ஆர்வமாக இருந்தாலும், அடுத்த தலைமுறையினரை தயார்படுத்துவது எனது பொறுப்பு ஆகும். இப்போது நான் ஓய்வுபெற்றால் எதிர்வரும் ஆண்டுகளில் என்னை விட சிறந்த வீரர்களை எங்களால் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<