டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.
எம்மால் இன்னும் சாதிக்க முடியும் – பானுக்க ராஜபக்ஷ
துடுப்பாட்டத்தில் எமக்கு இன்னும் சாதிக்க முடியுமாக இருந்திருக்கும் என்று …
எதிர்கால போட்டி அட்டவணையின்படி, ஒக்டோபரில் இலங்கைக்கு எதிராக இரண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளை பாகிஸ்தான் நடத்தவிருந்ததோடு தொடர்ந்து டிசம்பர் கடைசியில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளுக்காக இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் திரும்பவிருந்தது.
ஆனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி டெஸ்ட் தொடர் நீக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட தொடர் கராச்சி மற்றும் லாஹூர் நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த சுற்றுப்பயணம் முடிவில் இலங்கை சில எதிர்மறையான கருத்துகளையும் வெளியிட்டிருந்தது. குறிப்பாக சுற்றுப்பயணத்தின்போது வீரர்கள் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கருத்து நிலவியது.
இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிருப்தியை வெளியிட்டிருந்ததோடு இலங்கை டெஸ்ட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆடுவதென்றால் பாதிச் செலவை ஏற்க வேண்டும் என்ற செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளான எஹ்சான் மானி மற்றும் வசீம் கான் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.
எனினும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை நடத்த இலங்கை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதற்கான வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபை காத்துள்ளது.
T10 லீக்கில் ஆடுகிறார் இலங்கையின் அசாதாரண சுழல் வீரர் கொத்திகொட
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியின் முன்னாள் வீரர் கெவின் …
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்களுக்கு இடையே இது தொடர்பில் கடந்த புதனன்று (23) இடம்பெற்ற சந்திப்பில் சாதகமான பதில் கிடைத்திருப்பதாக ThePapare.com இற்கு தெரியவருகிறது. இதனால் இந்த தொடர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதோடு அடுத்த வாரம் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இது உறுதிசெய்யப்படவுள்ளது.
டெஸ்ட் தொடருக்காக முன்மொழியப்பட்டிருக்கும் போட்டி அட்டவணை
- 1ஆவது டெஸ்ட் – டிசம்பர் 11-15 – ராவல்பிண்டி
- 2ஆவது டெஸ்ட் – டிசம்பர் 19-23 – கராச்சி
கராச்சி மற்றும் லாஹூரில் அண்மையில் முடிவுற்ற இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் போன்று இந்தத் தொடர் 14 நாட்கள் கொண்ட சுற்றுப்பயணமாக அமையவுள்ளது. டிசம்பரில் பனிமூட்டம் இருப்பதால் லாஹூர் கடாபி மைதானம் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதில் 2004 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்திற்கு பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்று கூட நடைபெறாத ராவல்பிண்டி மைதானம் தேர்வுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…