இலங்கை ரக்பி ரசிகர்களினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் தொடர் முன்னர் திட்டமிட்டபடி இம்மாதம் மூன்றாம் வாரம் ஆரம்பமாகும் என இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் (SLSRFA) நேற்று அறிவித்தது.
இம்மாதம் 21 ஆம் திகதி முதல் தொடர் ஆரம்பமாக இருந்ததுடன், கழக மட்ட ரக்பி போட்டிகள் மற்றும் பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகள் காரணமாக தொடரை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
எவ்வாறாயினும், முன்னர் திட்டமிட்டிருந்தபடி இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு (டிவிஷன் 2 மற்றும் 3) போட்டிகள் 21 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாகவும் முதல் பிரிவு (டிவிஷன் 1) போட்டிகள் அவ்வாரத்தின் வெள்ளிக்கிழமை அல்லது வார இறுதி நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்க செயலாளர் திரு. டென்சில் டார்லிங் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் தொடர் ஒத்திவைக்கப்படுமா?
இலங்கை ரக்பி ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் சுற்றுப் போட்டி இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பமாகவிருந்த நிலையில்…
முதல் பிரிவு போட்டிகளில் நடப்பு சம்பியனான இசிபதன கல்லூரி கண்டி தர்மராஜ கல்லூரியுடன் மோதவுள்ளதுடன் இப்போட்டி கண்டியில் இடம்பெறும். மற்றுமொரு முக்கிய போட்டியில் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியும் புனித பேதுரு கல்லூரியும் ‘ரெக்டர்ஸ் ட்ரோபி’ (Rector’s Trophy) எனப்படும் முதல்வர் கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இப்போட்டி புனித பேதுரு கல்லூரியின் பம்பலபிட்டிய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
முதல் வாரத்தின் மற்றைய போட்டிகளில் வெஸ்லி கல்லூரியுடன் திரித்துவக் கல்லூரியும், ரோயல் கல்லூரியுடன் புனித ஜோசப் கல்லூரியும் மோதவுள்ளன.
இதேவேளை இம்முறை இரண்டாம் பிரிவிலிருந்து முதல் பிரிவிற்கு முன்னேறிய ஸாஹிரா கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகள் முதல் பிரிவில் தொடர்ந்து நிலைத்திருக்க கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஸாஹிரா கல்லூரியானது முதல் போட்டியில் விஞ்ஞான கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளதுடன் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி புனித தோமியர் கல்லூரியை எதிர்த்து களமிறங்கவுள்ளது.
கடந்த பருவகாலத்தில் ஸாஹிரா கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளின் ஒவ்வொரு வீரர்கள் 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை கனிஷ்ட ரக்பி அணிக்கு தெரிவாகியிருந்தனர். ஸாஹிரா கல்லூரியின் வஜீத் பஹ்மி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் உதய பொதுபிடியகே ஆகிய இருவரும் தற்போது பொலிஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் பிரிவின் 12 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குழுக்களில் இருந்தும் 4 அணிகள் வீதம் இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெறவுள்ளன.
குழு 1
இசிபதன கல்லூரி, கொழும்பு
ரோயல் கல்லூரி, கொழும்பு
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
தர்மராஜ கல்லூரி, கண்டி
குழு 2
புனித தோமியர் கல்லூரி, கொழும்பு
விஞ்ஞான கல்லூரி, கொழும்பு
திரித்துவக் கல்லூரி, கொழும்பு
வெஸ்லி கல்லூரி, கொழும்பு
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு
முதல் சுற்று போட்டிகள்
முதல் வாரம் (பெப்ரவரி 21 முதல் பெப்ரவரி 27): இசிபதன கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி; ரோயல் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி; புனித அந்தோனியார் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி; புனித தோமியர் கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி; விஞ்ஞான கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி; திரித்துவக் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி
இரண்டாம் வாரம் (மார்ச் 1 முதல் மார்ச் 6): புனித ஜோசப் கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி; தர்மராஜ கல்லூரி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி; ரோயல் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி; ஸாஹிரா கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி; பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி; விஞ்ஞான கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி
மூன்றாம் வாரம் (மார்ச் 7 முதல் மார்ச் 13): இசிபதன கல்லூரி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி; புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி; ரோயல் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி; புனித தோமியர் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி; ஸாஹிரா கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி; விஞ்ஞான கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி
நான்காம் வாரம் (மார்ச் 14 முதல் மார்ச் 20): புனித பேதுரு கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி; புனித அந்தோனியார் கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி; புனித ஜோசப் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி; புனித தோமியர் கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி; வெஸ்லி கல்லூரி எதிர் விஞ்ஞான கல்லூரி; ஸாஹிரா கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி
ஐந்தாம் வாரம் (மார்ச் 21 முதல் மார்ச் 27): இசிபதன கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி; புனித பேதுரு கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி; புனித அந்தோனியார் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி; புனித தோமியர் கல்லூரி எதிர் விஞ்ஞான கல்லூரி; திரித்துவக் கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி; வெஸ்லி கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி