சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நான்கு போட்டிகள் முடிவடைந்தன.
புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி
மொரட்டுவையில் இடம்பெற்று முடிந்த இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் கொழும்பு மஹாநாம கல்லூரி காலி புனித அலோசியஸ் கல்லூரியினை வீழ்த்தியது.
அலோசியஸ் கல்லூரியின் மோசமான இரண்டாம் இன்னிங்சினை (54) அடுத்து போட்டியின் ஏனைய இன்னிங்சுகளின் அடிப்படையில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 87 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய மஹநாம வீரர்கள் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.
இரண்டாம் இன்னிங்ஸ் சிறப்பாட்டத்தால் புனித அந்தோனியர் கல்லூரிக்கு வெற்றி
மஹாநாம கல்லூரி சார்பாக இடதுகை சுழல் வீரர் ஹஷான் சந்தீப்ப மொத்தமாக இப்போட்டியில் 7 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 139 (45.1) ரவிந்து சஞ்சன 92, நிலுக்ஷ துல்மின 24, லஹிரு கவிந்த 3/33, ஹஷான் சந்தீப்ப 3/38
மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 107(42.3) ரவிந்து சஞ்சன 5/27, தினுக்க லக்மல் 3/21
புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 54 (34.2) ஹஷான் சந்தீப்ப 4/09, வத்சார பெரேரா 3/09
மஹாநாம கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 88/4 (36.1) பதும் பொடேஜூ 30*, தினுக்க லக்மால் 3/19
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி
நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் சொந்த ஆடுகளத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணியினை வீழ்த்தி தொடரில் தமது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தனர்.
போட்டியில் முதலில் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் அபாரமான முதல் இன்னிங்சினை (332) அடுத்து பண்டாரநாயக்க கல்லூரிக்கு தமது முதல் இன்னிங்சில் 125 ஓட்டங்களையே பெற முடிந்தது. பலோவ் ஒன் முறையில் மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் ஆடிய கம்பஹா வீரர்களுக்கு எதிரணியின் இமாலய ஓட்டங்களை தாண்ட முடியவில்லை. அவர்கள் வெறும் 138 ஓட்டங்களைப்பெற்று இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர்.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பசிந்து உஸ்ஹெட்டி மற்றும் நவீன் பெர்னாந்து ஆகியோர் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றியினை ஊர்ஜிதம் செய்தனர்.
போட்டியின் சுருக்கம்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 332/9d (52.1) ரோஷான் பெர்னாந்து 71,சத்துர அனுராத 53, கெவின் பெரேரா 45, ஜனிது வத்சல 4/70
பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 125 (25.4) கயஷான் துலஞ்சன 30, நவீன் பெர்னாந்து 3/31, அவீஷ கேஷன் 3/38
பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o–138 (33.4) ஜனிது ஜயவர்த்தன 54, ரவிமல் அல்விஸ் 25, பசிந்து உஸ்ஹெட்டி 4/48, நவீன் பெர்னாந்து 3/27
இரண்டாம் இன்னிங்ஸ் சிறப்பாட்டத்தால் புனித அந்தோனியர் கல்லூரிக்கு வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்
நாலந்த கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி
கொழும்பின் பிரபல்யமான இரண்டு பாடசாலை அணிகள் மோதியிருந்த இந்த ஆட்டம் புனித தோமியர் கல்லூரியின் மைதானத்தில் முடிவடைந்தது. இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரி 6 விக்கெட்டுக்களால் நாலந்த அணியினை வீழ்த்தி இலகு வெற்றியொன்றினை சுவைத்தது.
நாலந்த கல்லூரியின் மந்தமான இரண்டாம் இன்னிங்சினை (81) அடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 31 ஓட்டங்களினை நான்கு விக்கெட்டுக்களை இழந்து புனித தோமியர் கல்லூரி அடைந்தது.
இரண்டாம் இன்னிங்சில் தோமியர் கல்லூரி சார்பாக டெல்லோன் பீரிஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தார்.
நேற்று (3) ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சுகளில் நாலந்த மற்றும் தோமியர் கல்லூரி அணிகள் முறையே 151 மற்றும் 202 ஓட்டங்களினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 151 (65.1) சுஹங்க விஜயவர்த்தன 57, ரவீன் டி சில்வா 22*, செனோன் பெர்னாந்து 3/37, குணால் முனாசிங்க 2/04
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 202/8d (67) துலிப் குணரத்ன 47, மனீஷ ருபசிங்க 37, டெலோன் பீரிஸ் 23, மஹீம வீரக்கோன் 6/50
நாலந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 81 (47.5) டெலோன் பீரிஸ் 5/27, சனோன் பெர்னாந்து 3/22
புனித தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 33/4 (13.5) மஹிம வீரக்கோன் 2/13
மலியதேவ கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி
குழு D இற்கான இந்த ஆட்டத்தில் காலி மஹிந்த கல்லூரி 188 ஓட்டங்களால் குருணாகல் மலியதேவ கல்லூரியினை வீழ்த்தியது.
நேற்று (3) மலியதேவ கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இந்த மோதலில் காலி மஹிந்த கல்லூரி அணியின் இரண்டு இன்னிங்சுகளின் (235 & 214) காரணமாக முதல் இன்னங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்த மலியதேவ வீரர்கள் 318 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற மலியதேவ வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்சில் 319 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. இதனை அடைய தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய அவர்கள் 130 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவினர். நவோத் பரணவிதான முதல் இன்னிங்ஸ் போன்று இம்முறையும் 5 விக்கெட்டுக்களை சாய்த்து காலி வீரர்களை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 235 (49.2) நவோத் பரணவிதான 71, KK. கெவின் 43, வினுர துல்சார 41, துலாஜ் ரணதுங்க 4/78
மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 131 (44.3) சுப்புன் சுமணரத்ன 53, முதித பிரேமதாச 37, நவோத் பரணவிதான 5/31
மஹிந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 214/8d (43) கவிந்து எதிரிவீர 59*, ஹன்சிக்க வலிஹிந்த 58, துலாஜ் ரணதுங்க 3/62
மலியதேவ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) -130 (47.4) சன்ஜீவன் பிரியதர்ஷன 25, நவோத் பரணவிதான 5/25
சிலாபம் மேரியன்ஸ் மற்றொரு வெற்றியுடன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆதிக்கம்
இன்று ஆரம்பமாகிய ஏனைய போட்டிகளின் சுருக்கமான ஓட்ட விபரம்
லும்பினி கல்லூரி எதிர் டி மெசனோட் கல்லூரி
போட்டியின் சுருக்கம்
லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 314 (66.3) ரன்மல் பெர்னாந்து 96, லகிந்து உபேந்திர 53, ரோமல் பெர்னாந்து 6/91
டி மெசனோட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 88/2 (21) மிதில கீத் 30*
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
ரிச்மண்ட் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி
போட்டியின் சுருக்கம்
ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 199 (61.2) அதித்யா சிரிவர்த்தன 57, ஆகாஷ் கவிந்த 55, கிசாந்திக ஜயவீர 3/34
புனித தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 40/3 (20.4) வொஷித அமரசிங்க 2/00.
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
புனித ஜோன்ஸ் கல்லூரி எதிர் திருச்சிலுவை கல்லூரி
போட்டியின் சுருக்கம்
புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 169 (51) பசன் பெரேரா 54, சந்தமல் விக்கிரமதார 45, ப்ரசன்க பெரேரா 4/17
திருச்சிலுவை கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 155/5 (42) செரோன் பொன்சேக்கா 50, கவிந்து உமயங்க 42
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
குருகுல வித்தியாலயம் எதிர் தர்மபால கல்லூரி
போட்டியின் சுருக்கம்
குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 139 (43.4) ப்ருத்துவி ருசார 62, டில்சான் டி சில்வா 3/19, துலாஜ் எகோடொகே 3/29, சமிந்து சமரசிங்க 3/51
தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 94 (33.3) குசங்க பீரிஸ் 25, யுஷான் மலித் 3/25
குருகுல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 19/5 (12.4)
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்
புனித சில்வஸ்டர் கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி
போட்டியின் சுருக்கம்
புனித சில்வஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 301/8d (75) நதீர பாலசூரிய 75, மஞ்சித் ராஜபக்ஷ 46, C. ஹிரோஷன் 41, லசித் நிர்மல் 3/63, ரித்மிக்க நிமேஷ் 3/70
ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 46/0 (17)