தனஞ்சயவுக்கு மாற்று வீரர் இன்றி மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை அணி

1549

தனது தந்தை கொல்லப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்ட சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வாவுக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்யாமல் இருக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

தேசிய அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய..

இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சில மணி நேரங்களுக்கு முன்னர், தனஞ்சய டி சில்வாவின் தந்தையான உள்ளூர் அரசியல்வாதி ரஞ்சன் டி சில்வா கடந்த வியாழக்கிழமை (24) பின்னேரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

தனஞ்சயவின் இடத்திற்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லைஎன்று இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ’17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாமுக்கு மாறாக தற்போது அது 16 வீரர்களை கொண்டதாக இருக்கும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துக்கம் மற்றும் துயரத்தில் இருக்கும் இந்த தருணத்தில் 26 வயதுடைய தனஞ்சயவுக்கு ஆதரவை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.  

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டபோதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

விரலில் காயம் ஏற்பட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவையும் இலங்கை அணி இழந்துள்ளது. அவர் இம்மாதம் வலையில் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபடுவதோடு உள்ளூர் தொடர் ஒன்றுக்கு தயாராகி வருகிறார்.

டெஸ்ட் தரவரிசையில் முன்னேறும் இலக்கோடு மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையானது (CWI) அவர்களது…

இதேவேளை, இனம் தெரியாத நபர்களின்  துப்பாக்கி சூட்டினால் நிகழ்ந்த தனது தந்தையின் மரணம் தொடர்பில் தனன்ஞய டி சில்வா இரங்கல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.  

அன்புள்ள நண்பர்களே, எனது சகாக்களே உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் இரசிகர்களேநான் அதிர்ச்சியுடனும் கவலையுடனும் நேற்று (24) இரவு இடம்பெற்ற சம்பவம் மூலம் நிகழ்ந்த எனது தந்தையின் இறப்பினை அறிவிக்கின்றேன். அதோடு இச் சம்பவம் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முக்கிய டெஸ்ட் தொடர் சுற்றுப் பயணம் ஒன்றின் இறுதிவேளையில் இடம்பெற்றிருக்கின்றது. எனது தாயின் சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் உங்களது பிரார்த்தனைகளிலும், தியானங்களிலும் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த இரண்டு நாட்களினையும் எங்களது குடும்பம் மிகவும் கவலையுடனும் அதிர்ச்சியுடனும் கடக்க வேண்டி இருக்கின்றது. இந்த தருணத்தில் எங்களது கஷ்டமான குடும்ப நிலையினை புரிந்து அதற்கு மதிப்பளித்து நடந்தமைக்கு நன்றிகள்.  அதோடு எனக்கு துயர் செய்தியினையும், அனுதாபங்களினையும் எல்லா வடிவங்களிலும் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள். மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடரில் விளையாடப்போகும் இலங்கை அணிக்கு எனது  வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். நான் இந்த மோதலில் இல்லாது போகும் நிலைமை உருவாகினாலும் எனது உள்ளம் இலங்கை அணியுடனேயே இருக்கும்.என தனன்ஞய டி சில்வாவினால் வெளியிடப்பட்டிருந்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்ட மஹேல ஜயவர்தன

இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன மற்றும்…

இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) தனஞ்rய டி சில்வாவின் தந்தையின் மரணத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களினைத் தெரிவித்துக் கொண்டது.

இலங்கை கிரிக்கெட் சபை தனஞ்சயவுக்கு இந்த கவலையான நேரத்தில் வழங்க முடியுமான அனைத்து ஆதரவுகளையும் தரும். அதோடு இந்த அசம்பாவித சம்பவத்தில் கிடைத்த வலியிலிருந்து அவர் மீள்வதற்கும் தேவையான நேரத்தினை எடுத்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் தருகின்றது.“ என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறியிருந்தார்.

தற்போதைய இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), மஹேல உடவத்த, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, ரொஷேன் சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சே, லஹிரு கமகே, கசுன் ராஜித்த, சுரங்க லக்மால், லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<